Agriculture · completed claimed

Agricultural mechanisation programme

8 budgets named it 10 year span 822 ₹ crore allocated 202 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 7 later budgets, most recently 2020-21.

Allocated by budget year

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2011-12 new project AIADMK · revised

“We propose to achieve the goal of a faster pace of agricultural mechanisation through a three pronged strategy.”
“ஊரகப்‌ பகுதிகளில்‌ விவசாயத்‌ தொழிலாளர்‌ பற்றாக்குறை காரணமாக, உணவுப்‌ பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ வகையில்‌, வேளாண்‌ உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்படும்‌ முயற்சிகளில்‌ பெரும்‌ பின்னடைவு ஏற்படுகிறது. தற்போது வேளாண்‌ துறையை இந்த பின்னடைவிலிருந்து மீட்க வேளாண்‌ இயந்திரமயமாக்குுலை ஒரு மாநிலம்‌ தழுவிய இயக்க அணுகுமுறையாக மேற்கொள்ள வேண்டும்‌ என இந்த அரசு கருதுகிறது. வேளாண்‌ இயந்திரமயமாக்கலை விரைவுபடுத்த மும்முனை முறைகளைச்‌ செயல்படுத்தத்‌ திட்டமிட்டுள்ளோம்‌. முதல்‌ நிலையாக, வேளாண்‌ பொறியியல்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ 74 வேளாண்‌ உப கோட்டங்களுக்கு அதிக மதிப்புடைய கனரக இயந்திரங்கள்‌ வாங்கப்படும்‌ இரண்டாம்‌ நிலையாக, நடுத்தர வேளாண்‌ இயந்திரங்கள்‌ மற்றும்‌ கருவிகள்‌ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்‌ சங்கங்கள்‌ மூலமாக வாங்கப்பட்டு விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படும்‌. இந்த இயந்திரங்கள்‌ வாங்குவதற்காக ஒவ்வொரு சங்கத்திற்கும்‌ 50 விழுக்காடு அளவிற்கு, அதிகபட்சமாக 20 இலட்சம்‌ ரூபாய்‌ வரை மானியம்‌ வழங்கப்படும்‌. நடப்பு ஆண்டில்‌ குறைந்தபட்சம்‌ 400 தொடக்க வேளாண்மைக்‌ கூட்டுறவு கடன்‌ சங்கங்கள்‌ இந்த வசதியைப்‌ பெறும்‌. மாநில அரசின்‌ நிதியிலிருந்து 100 கோடி ரூபாய்‌ இத்திட்டத்திற்கென வழங்கப்படும்‌. மூன்றாம்‌ நிலையாக, விவசாயிகள்‌, விவசாயக்‌ குழுக்கள்‌, சுயஉதவிக்‌ குழுக்கள்‌ ஆகியவற்றுக்கு இயந்திரங்கள்‌ மற்றும்‌ கருவிகள்‌ வாங்குவதற்குத்‌ தேவையான மானிய உதவி வழங்கப்படும்‌. இப்பணிகளுக்காக தேசிய வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 72.30 கோடி ரூபாய்‌ நடப்பாண்டில்‌ ஒதுக்கப்படும்‌. வரும்‌ ஆண்டுகளில்‌ கூடுதல்‌ நிதியுதவிடன்‌ இம்முயற்சிகள்‌ தீவிரப்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶26) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.16 · ¶26 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2014-15 Rs.100 crore continuation AIADMK

“During 2014-2015, an amount of Rs.100 crore will be set apart for further promoting farm mechanization.”
“வேளாண்‌ தொழிலாளர்கள்‌ பற்றாக்குறையைச்‌ சமாளிக்கவும்‌, வேளாண்‌ பணிகளுக்கான செலவினத்தைக்‌ குறைக்கவும்‌ 'வேளாண்‌ இயந்திரமயமாக்கல்‌ திட்டம்‌' முனைப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌, இதனை மேலும்‌ ஊக்குவிப்பதற்காக 100 கோடி ரூபாய்‌ செலவிடப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶26) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.16 · ¶26 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.100 crores continuation AIADMK

“To take up agricultural mechanization in a significant way, this Government has allocated Rs.100 crores in the Budget Estimates 2015-2016.”
“கடந்த நான்கு ஆண்டுகளில்‌ வேளாண்‌ இயந்திரப்‌ பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 227.16 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. கணிசமான அளவில்‌ பண்ணை இயந்திரப்‌ பயன்பாட்டை மேற்கொள்வதற்காக 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 100 கோடி ரூபாய்‌ நிதியை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶28) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.20 · ¶28 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.201.94 crores completion claim project cost AIADMK · interim

“Intensive promotion of farm mechanization by distributing 62,735 farm machineries including tractors, tillers, crop cutting machineries, etc., at a cost of Rs.201.94 crores in the last five years.”
“பன்முனை உத்திகளை உள்ளடக்கி, தமிழகத்தில்‌ இரண்டாம்‌ பசுமைப்‌ புரட்சியை ஏற்படுத்த உறுதியுடன்‌ செயல்பட்டு வரும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, பயிர்‌ பலவகையாக்கல்‌ (Crop Diversification) மற்றும்‌ அறுவடைக்குப்‌ பிந்தைய மேலாண்மை (Post Harvest Management) போன்ற முயற்சிகள்‌ மூலம்‌ பயிர்‌ உற்பத்தித்‌ திறனையும்‌, விவசாயிகளின்‌ வருவாயையும்‌ பெருக்கியுள்ளார்கள்‌. இதன்‌ பயனாக, உற்பத்தித்‌ திறனில்‌ மக்காச்‌ சோளம்‌, நிலக்கடலை, எண்ணெய்‌ வித்துக்களில்‌ நாட்டிலேயே முதன்மை இடத்தையும்‌, கரும்பில்‌ இரண்டாம்‌ இடத்தையும்‌, சூரிய காந்தி மற்றும்‌ நெல்‌ உற்பத்தித்‌ திறனில்‌ மூன்றாம்‌ இடத்தையும்‌ தமிழகம்‌ பெற்றுள்ளது. 6 திருந்திய நெல்‌ சாகுபடி, நீடித்த நவீன கரும்பு சாகுபடி, துல்லியப்‌ பண்ணையம்‌, துவரை சாகுபடி, பருத்தி சாகுபடித்‌ திட்டம்‌ போன்ற பயிருக்கு ஏற்ற உத்திகளை பண்ணை அளவில்‌ கடைபிடிக்க ஊக்குவித்தல்‌ 6 மண்‌ வளத்திற்கு ஏற்றாற்போல்‌ உரமிடுதலை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு மண்‌ வள அட்டைகள்‌ வழங்குதல்‌ 6 குறித்த நேரத்தில்‌, தரம்‌ வாய்ந்த விதைகள்‌ விவசாயிகளைச்‌ சென்றடைவதற்காக, 25 கோடி ரூபாய்‌ தொடக்க நிதியுடன்‌ அமைக்கப்பட்ட தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை 622 மாவட்டங்களில்‌ தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்‌ மூலமாகவும்‌, பிற மாவட்டங்களில்‌ தேசிய வேளாண்மை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ மூலமாகவும்‌, நவீன தொழில்நுட்பங்களைப்‌ பயன்படுத்தி தோட்டக்கலைப்‌ பயிர்களின்‌ சாகுபடி பரப்பு அதிகரிப்பு 6 விவசாயிகளும்‌, நுகர்வோரும்‌ பயன்பெறும்‌ வகையில்‌, 5 மாநகராட்சிகளைச்‌ சுற்றியுள்ள பகுதிகளில்‌ 51 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ பெருநகர காய்கறித்‌ தொகுப்பு வளர்ச்சித்‌ திட்டம்‌” © நுண்ணீர்‌ பாசனம்‌ அனைத்துப்‌ பண்ணைகளுக்கும்‌ சென்றடைய, குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும்‌, பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும்‌ வழங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில்‌ 986.38 கோடி ரூபாய்‌ செலவில்‌ 176,390 ஹெக்டேரில்‌ நுண்ணீரப்‌ பாசனம்‌ உ பண்ணை இயந்திரமயமாக்கலை பெரிய அளவில்‌ ஊக்குவிக்க, கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 20194 கோடி ரூபாய்‌ செலவில்‌ டிராக்டர்கள்‌, உழவு மற்றும்‌ பயிர்‌ அறுவடை இயந்திரங்கள்‌ உள்ளிட்ட 62,735 கருவிகள்‌ வழங்கியது 6 வட்டார அளவில்‌, 150 கோடி ரூபாய்‌ செலவில்‌ அமைக்கப்பட்டு வரும்‌ 100 ஒருங்கிணைந்த வேளாண்‌ விரிவாக்க மையங்கள்‌ என பல்வேறு முக்கியத்‌ திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶23) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.17 · ¶23 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.100 crores continuation AIADMK · interim

“Rs.100 crores for farm mechanization”
“வேளாண்மைத்‌ துறைக்கு 2010-2011 ஆம்‌ ஆண்டில்‌ 2,072.43 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீட்டை, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 6,503.40 கோடி ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்கத்திற்கு 123 கோடி ரூபாயும்‌, பண்ணை இயந்திரமயமாக்கல்‌ திட்டத்திற்கு 100 கோடி ரூபாயும்‌ உட்பட, வேளாண்‌ துறைக்கு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மொத்தமாக 6,938.57 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கூட்டுறவு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶25) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.19 · ¶25 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.32.45 crores enhancement project cost AIADMK · revised

“During 2016-2017, another 324 Custom Hiring Centres will be established at a cost of Rs.32.45 crores.”

tnbudget_2016-17_speech_en_revised · p.18 · ¶34 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2016-17 Rs.100 crores continuation AIADMK · revised

“In the year 2016-2017, a sum of Rs.100 crores has been provided for promoting farm mechanisation.”

tnbudget_2016-17_speech_en_revised · p.18 · ¶34 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.100 crore continuation AIADMK

“During 2017-2018, it is proposed to spend Rs.100 crore towards this, of which Rs.30 crore will be earmarked for subsidy to farmers for procuring farm machinery and equipment.”

tnbudget_2017-18_speech_en · p.20 · ¶32 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.150 crore continuation AIADMK

“For the year 2018-2019, Rs.150 crore has been provided for farm machinery.”
“வேளாண்‌ இயந்திரமயமாக்கல்‌ மற்றும்‌ சந்தைகளை மேம்படுத்தி ஒருங்கிணைத்தல்‌ ஆகியவை வேளாண்‌ மேம்பாட்டிற்கு முக்கியப்‌ பங்காற்றி வருகின்றன. 2014-2015 ஆம்‌ ஆண்டு முதல்‌ பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்கப்படுத்த வேளாண்‌ இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும்‌ 1106 மையங்களை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ மேலும்‌ 500 மையங்கள்‌ இந்த அரசால்‌ ஏற்படுத்தப்படும்‌ வேளாண்‌ இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 71 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 150 கோடி ரூபாய்‌ இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சந்தை இணையதள வசதிகளைப்‌ பயன்படுத்தி, ஈரோடு மாவட்டத்தில்‌ உள்ள பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்‌ கூடத்தில்‌ மஞ்சளுக்கான மின்னணு வர்த்தகம்‌ முதன்‌ முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்‌ தொடர்ந்து, தேசிய வேளாண்‌ மின்னணு சந்தையுடன்‌ ஒருங்கிணைப்பதற்காக மேலும்‌ முப்பது ஒழுங்குமுறை விற்பனைக்‌ கூடங்கள்‌ மற்றும்‌ 8 கூட்டுறவு விற்பனை மையங்களில்‌ மின்னணு வர்த்தக வசதிகள்‌ உருவாக்கப்படும்‌. இந்த 38 விற்பனை மையங்களிலும்‌ 159 கோடி ரூபாய்‌ செலவில்‌ கட்டமைப்பு வசதிகள்‌ மேம்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.22 · ¶32 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.172.06 crore continuation AIADMK

“In the coming year, 128 block level agricultural machinery custom hiring centres and 360 village based agricultural machinery custom hiring centres will be established. A sum of Rs.172.06 crore is allocated for farm mechanization during the year 2019-2020.”

tnbudget_2019-20_speech_en · p.19 · ¶29 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.200 crore enhancement project cost AIADMK

“During 2020-21, besides distribution of machinery to individual farmers, 100 Block Level and 250 Village Level Custom Hiring Centres will be established with a total outlay of Rs.200 crore.”
“தொழிலாளர்‌ பற்றாக்குறையை சரிசெய்வதற்கும்‌, பண்ணைச்‌ செயல்பாடுகளை எளிமையாக்குவதற்கும்‌ வேளாண்‌ இயந்திரமயமாக்கலுக்கு அரசு முக்கியத்துவம்‌ அளித்து வருகிறது. தற்போது மாநிலத்தில்‌, 1665 வட்டார அளவிலான வேளாண்‌ இயந்திர வாடகை மையங்களும்‌, 997 கிராம அளவிலான வேளாண்‌ இயந்திர வாடகை மையங்களும்‌, 15 கரும்பிற்கான வேளாண்‌ இயந்திர வாடகை மையங்களும்‌ செயல்பட்டு வருகின்றன. 2020-21 ஆம்‌ ஆண்டில்‌, மொத்த நிதியொதுக்கீடான, 200 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ 100 வட்டார அளவிலான மற்றும்‌ 250 கிராம அளவிலான வேளாண்‌ இயந்திர வாடகை மையங்கள்‌ அமைக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.25 · ¶43 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector