Agriculture · dormant
PACCS custom hiring machinery
1 budget named it 1 year span 100 ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and not named in any budget since.
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2011-12 ` 100 crores
“The State Government will set apart ```` 100 crores from its own funds for the above programme.”
“ஊரகப் பகுதிகளில் விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், வேளாண் உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்படும் முயற்சிகளில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. தற்போது வேளாண் துறையை இந்த பின்னடைவிலிருந்து மீட்க வேளாண் இயந்திரமயமாக்குுலை ஒரு மாநிலம் தழுவிய இயக்க அணுகுமுறையாக மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசு கருதுகிறது. வேளாண் இயந்திரமயமாக்கலை விரைவுபடுத்த மும்முனை முறைகளைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். முதல் நிலையாக, வேளாண் பொறியியல் துறையின் கீழ் செயல்படும் 74 வேளாண் உப கோட்டங்களுக்கு அதிக மதிப்புடைய கனரக இயந்திரங்கள் வாங்கப்படும் இரண்டாம் நிலையாக, நடுத்தர வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வாங்கப்பட்டு விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படும். இந்த இயந்திரங்கள் வாங்குவதற்காக ஒவ்வொரு சங்கத்திற்கும் 50 விழுக்காடு அளவிற்கு, அதிகபட்சமாக 20 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். நடப்பு ஆண்டில் குறைந்தபட்சம் 400 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் இந்த வசதியைப் பெறும். மாநில அரசின் நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கென வழங்கப்படும். மூன்றாம் நிலையாக, விவசாயிகள், விவசாயக் குழுக்கள், சுயஉதவிக் குழுக்கள் ஆகியவற்றுக்கு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்குத் தேவையான மானிய உதவி வழங்கப்படும். இப்பணிகளுக்காக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 72.30 கோடி ரூபாய் நடப்பாண்டில் ஒதுக்கப்படும். வரும் ஆண்டுகளில் கூடுதல் நிதியுதவிடன் இம்முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶26) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.16 · ¶26 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- Agricultural mechanisation programme · sibling
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years