Agriculture · dormant

Cauvery Delta crop loss cash compensation package

1 budget named it 1 year span 541 ₹ crore allocated AIADMK government

First announced in 2013-14 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2013-14 Rs.541 crores transfer scheme AIADMK

“The total financial commitment to the State exchequer on account of the cash compensation package is Rs.541 crores.”
“காவேரிப்‌ பாசனப்‌ பகுதியில்‌, பயிர்‌ இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கான சிறப்பு நிவாரணத்‌ தொகுப்பின்‌ ஒரு பகுதியாக, 50 சதவீதத்திற்கு மேல்‌ பயிர்‌ இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு பயிர்‌ இழப்பு, சிறப்பு நிவாரணத்துடன்‌, காப்பீட்டு இழப்பீட்டிற்கான முன்பணமும்‌ சேர்த்து, ஏக்கர்‌ ஒன்றிற்கு, 15,000 ரூபாய்‌ வழங்கப்படும்‌ என மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவித்தார்கள்‌. மேலும்‌, ஒரு சிறப்பினமாக, இந்த ஆண்டு காவேரிப்‌ பாசனப்‌ பகுதியில்‌ பயிர்க்‌ காப்பீட்டுக்‌ கட்டணத்தில்‌ விவசாயிகளின்‌ முழுப்‌ பங்கினையும்‌ அரசே ஏற்கவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டார்கள்‌. இந்தச்‌ சிறப்பு வறட்சி நிவாரணத்‌ தொகுப்பினால்‌ மாநில அரசிற்கு ஏற்படும்‌ மொத்த நிதிச்‌ சுமை 541 கோடி ரூபாயாகும்‌. இந்த நிவாரணத்‌ தொகை, பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்திற்கும்‌ மேற்பட்ட விவசாயிகளின்‌ வங்கிக்‌ கணக்குகளில்‌ மிகக்‌ குறுகிய காலத்தில்‌ நேரடியாக வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்குத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶4) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.73 · ¶4 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector