Irrigation · dormant
Climate Change Adaptation Programme in Cauvery Delta
First announced in 2015-16 and named again in 5 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Irrigation projects →
What each budget said, year by year
2015-16 Rs.200 crores
“Works relating to another externally aided project, the Climate Change Adaptation Programme in Cauvery Delta at an outlay of Rs.1,560 crores with the assistance of Asian Development Bank (ADB) will commence during 2015-2016. Under this project, it is proposed to take up works in the Vennar sub-basin and an amount of Rs.200 crores has been provided in the Budget Estimates 2015-2016.”
“உலக வங்கியின் நிதியுதவியோடு 745.49 கோடி ரூபாய் செலவில் 113 அணைகளைப் புனரமைப்பதற்காக, அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், இதற்காக 450.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் 2007 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டுவரும் பாசன விவசாயத்தை நவினப்படுத்துதல் மற்றும் நீர்வள மேலாண்மைத் திட்டம் (Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management) வரும் ஜூன் 2015ல் முடிவடைகிறது. இத்திட்டத்தில் இதுவரை 2,544.15 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வெற்றிகரமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 2,950 கோடி ரூபாய்க்கு உலக வங்கியின் நிதியுதவியைக் கோரி மத்திய அரசுக்குத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் 1560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள, மற்றொரு அயல்நாட்டு உதவிபெறும் திட்டமாகிய காவேரி வடிநில பருவநிலை மாற்றத் தழுவல் திட்டத்திற்கான பணிகள் 2015-2016 ஆம் ஆண்டில் தொடங்கும். இந்தத் திட்டத்தில் வெண்ணாறு உப வடிநிலப் பகுதியில் பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இதற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.26 · ¶40 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.398.50 crores
“Of the estimated project cost of Rs.1,560 crores, the first phase works will be taken up shortly in the Vennar sub-basin at a cost of Rs.960.66 crores. In the Interim Budget Estimates Rs.398.50 crores is allocated for this project.”
“உலக வங்கி உதவியோடு அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை 745.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2012-2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்காக 408 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவேரி டெல்டா பகுதியில், பருவநிலை மாறுதல்களை எதிர்கொள்ளும் திட்டத்தை வடிவமைத்து, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியையும் இந்த அரசு வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. பருவநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ள உதவுவதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு, மாநில அளவில் செயல்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடாகிய 1560 கோடி ரூபாயில், வெண்ணாறு உப வடிநிலப் பகுதியில் 960.66 கோடி ரூபாய் செலவில் இத்திட்டப் பணிகளை, இந்த அரசு முதற்கட்டமாக மேற்கொண்டுள்ளது. இதற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 398.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, 61 உப வடிநிலப் பகுதிகளில் 2,674.80 கோடி ரூபாய் செலவில், நீர்வள நிலவளத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள், உலக வங்கி உதவியுடன் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு, 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நிறைவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, 2,950 கோடி ரூபாய் செலவில், முதல் கட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்படாத உப வடிநிலப் பகுதிகளில், உலக வங்கி உதவியோடு இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.25 · ¶35 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.279 crores
“In the first phase of the Asian Development Bank (ADB) assisted 'Climate Change Adaptation Programme', works have been taken up in the Vennar sub-basin at a cost of Rs.279 crores.”
“ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் 'பருவநிலை மாற்றத் தழுவல் திட்டத்தின்” முதற்கட்டமாக, வெண்ணாறு உப வடிநிலப் பகுதியில் 279 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் எஞ்சியுள்ள பணிகள், 2016-2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும். உலக வங்கியின் உதவியுடன், 61 உப வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நீர்வள நிலவளத் திட்டத்தின்” முதல் கட்டப் பணிகள் (Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management Project — Phase-l) வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்படாத உப வடிநிலப் பகுதிகளில், 2,950 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான (Phase-ll) பணிகள் உலக வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.30 · ¶57 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.400 crore
“The Government is implementing the first phase of the Asian Development Bank assisted ‘Climate Change Adaptation Programme’ at an estimated cost of Rs.960.66 crore in the Vennar sub-basin of the Cauvery delta from 2015-2016. Works have been taken up in six river drainage systems, namely, Harichandranadhi, Adappar, Pandavaiyar, Vellaiyar, Valavanar and Uppanar. During 2016-2017, an expenditure of Rs.71 crore has been incurred so far and Rs.400 crore has been allocated in the Budget Estimates 2017-2018 for this project.”
“காவேரி வடிநிலப் பகுதியின் வெண்ணாறு உப வடிநிலப் பகுதியில், 'பருவநிலை மாற்றத் தழுவல் திட்டத்தின்” முதற்கட்டப் பணிகளை, 960.66 கோடி ரூபாய் செலவில், 2015-2016 ஆம் ஆண்டு முதல் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் அரசு செயல்படுத்தி வருகிறது. அரிச்சந்திரா நதி, அடப்பாறு, பாண்டவையாறு, வெள்ளையாறு, வளவனாறு மற்றும் உப்பனாறு ஆகிய நதிகளில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, 2016-2017 ஆம் ஆண்டில் 71 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶51) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.29 · ¶51 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.1,560 crore
“With a view to mitigating the growing adverse impact of climate change, the State Government is implementing the ‘Climate Change Adaptation Programme’ in Cauvery Delta, with an outlay of Rs.1,560 crore with loan assistance from Asian Development Bank (ADB).”
“பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை தணிப்பதற்காக காவேரி பாசனப் பகுதிகளில் “பருவநிலை மாற்றத் தழுவல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன் 1560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள 960.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 478.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.27 · ¶43 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.105.20 crore
“The implementation of the Climate Change Adaptation Programme in the Cauvery delta at a cost of Rs.1,560 crore with loan assistance from Asian Development Bank (ADB) is progressing in full swing. A provision of Rs.105.20 crore has been made in the Budget Estimates 2020-21 for this project. Phase-II of the project at a cost of Rs.1,995 crore to cover the balance area in the Vennar sub-basin is currently being appraised by the Asian Development Bank.”
“2019-20ஆம் ஆண்டில், காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள 281 கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளுக்காக 60.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் இப்பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தியதால், பாசன நீர் எவ்வித இடையூறுமின்றி காவேரி வடிநிலத்தின் கடைமடைப் பகுதி வரை சென்றடைந்தது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள கால்வாய்களில், 392 தூர்வாரும் பணிகளை அடுத்த பருவமழைக் காலத்திற்கு முன்னதாக நிறைவு செய்வதற்காக, 67.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவேரிப் படுகையில் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை விரிவாக்கல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, கல்லணைக் கால்வாய் அமைப்பின் பணிகள், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 2,298 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்கென 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன், 1560 கோடி ரூபாய் செலவில் பருவகால மாற்றத் தழுவல் திட்டத்தை செயல்படுத்தும் பணி காவேரி பாசனப் பகுதியில் முழுவீச்சில் முன்னேற்றமடைந்து வருகிறது. இத்திட்டத்திற்காக, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 105.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1995 கோடி ரூபாய் திட்டச் செலவில், வெண்ணார் உப வடிநிலத்தில் ஏனைய பகுதிகளை இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான கோரிக்கையையும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு செய்து வருகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶58) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.33 · ¶58 · source PDF ↗ · on the map →
2021-22
“The Phase-I of the Climate Change Adaptation Programme in Cauvery Delta in the Lower Vennar basin is currently under implementation with loan assistance from the Asian Development Bank and will be completed shortly.”
“பல்வேறு உபவடிநிலங்களைக் கொண்ட காவேரி வடிநிலத்தில் நீர்ப்பாசன உட்கட்டமைப்பினை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் (ERM) பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 184 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டளை உயர்மட்டக் கால்வாய் பாசன அமைப்பிலும், 335.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜவாய்க்கால் நீர்ப்பாசன அமைப்பிலும், மற்றும் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நொய்யல் உப வடிநிலத்திலும் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2,639 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாய் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டம், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியுதவி ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. 3,384 கோடி ரூபாய் செலவில் காவேரி உப வடிநிலத்தில் நீட்டித்தல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள், நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் (NIDA) நிதியுதவியுடன் செயல்படுத்துவதற்கு, நபார்டு வங்கி அனுமதித்துள்ளது. இத்திட்டத்தை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். 933 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் உதவியுடன், கீழ் பவானி பாசனப் பகுதிகளில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் விரைவில் தொடங்கப்படும். காவேரி டெல்டாவில், கீழ் வெண்ணாறு வடிநிலத்தில், காலநிலை மாற்றத் தழுவல் திட்டத்தின் முதற்கட்டம் தற்போது ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அப்பணிகள் நிறைவடையும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶54) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.36 · ¶54 · source PDF ↗ · on the map →
Linked projects
- another phase of Climate Change Adaptation Programme (Cauvery Delta) Phase II · 2021-22
- runs alongside Tamil Nadu Climate Change Mission · 2021-22
- runs alongside Desilting works in the Cauvery delta · 2020-21 –2022-23
- another phase of Vennar sub-basin first phase · 2016-17
- runs alongside Artificial recharge shafts, Cauvery and Vennar sub-basins · 2014-15
Nearby in the same sector
- Dam Rehabilitation and Improvement Project (DRIP) · 11 years
- Micro Irrigation Mission (State funds) · 11 years
- Tamarabarani–Nambiar river link · 7 years
- Athikadavu - Avinashi Flood Canal Project · 6 years
- Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management (IAMWARM) Phase-II · 5 years
- Cauvery–Vaigai–Gundar flood control / interlinking programme · 4 years