Irrigation · dormant
Tamarabarani–Nambiar river link
First announced in 2011-12 and named again in 6 later budgets, most recently 2021-22. Places named: Tirunelveli, Thoothukudi.
Allocated by budget year
Located at Tirunelveli · Tirunelveli district
See it on the map → All Irrigation projects →
What each budget said, year by year
2011-12 ` 369 crores
“another scheme to link the Tamarabarani with the Nambiar river at a cost of ` 369 crores is under progress. ` 90 crores is set apart for this purpose during 2011-2012.”
“தமிழ்நாட்டிலுள்ள நதிகளை இணைப்பதை, இந்த அரசு முதன்மையானப் பணியாகக் கருதுகிறது. நதிநீர் இணைப்பால், பாசன வசதிகளை மேம்படுத்துவது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து போன்ற பல பயன்கள் ஏற்படும். இதன் முதல் கட்டமாக காவிரி ஆற்றை வைகை, குண்டாறு ஆறுகளுடன் இணைப்பதற்காக, காவிரி ஆற்றில் கட்டளைக் கதவணை அமைக்கும் பணி 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கெனவே நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு 2011-2012 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு 93 கோடி ரூபாயாகும். இதன் அடுத்த கட்டமாக கட்டளைக் கதவணையை குண்டாறு ஆற்றுடன் இணைப்பதற்குரிய பணியினை இவ்வரசு தொடங்கும். மத்திய அரசு உதவியுடன் வெள்ள மேலாண்மைப் பணியாக இரண்டு கட்டத்தில் இப்பணி செய்யப்படும். முதற் கட்டமாக கட்டளை அணைக்கட்டிலிருந்து கால்வாய் அமைத்து அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறுடன் 3,787 கோடி ரூபாய் செலவில் இணைக்கப்படும். இரண்டாவது கட்டத்தில் மணிமுத்தாறு, வைகை ஆற்றுடன் குண்டாறு 1,379 கோடி ரூபாய் செலவில் இணைக்கப்படும். இந்த வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு 5,166 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்படும். எனினும் மத்திய அரசின் உதவிக்காக காத்திராமல் மாநில அரசே இப்பணியினை உடனடியாகத் தொடங்கும். இப்பணிக்காக 2011-2012 ஆம் ஆண்டில் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு நதிநீர் இணைப்புத் திட்டமான நம்பியாறுடன் தாமிரபரணி ஆற்றை இணைக்கும் பணி 369 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டில் இப்பணிக்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.27 · ¶43 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.100 crores
“The Thamiraparani -Karumeniar - Nambiar link project at a cost of Rs.369 crores is also under implementation and a sum of Rs.100 crores is provided in the Budget Estimates 2012-2013 for this scheme.”
“மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டம் இந்த அரசின் கீழ் புதிய உத்வேகம் பெற்றுள்ளது. அண்மையில், தேச நலன் கருதி, நதிகளை இணைக்கும் தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். காவிரி - குண்டாறு இணைப்பின் ஒரு பகுதியாக காவிரி நதியின் குறுக்கே கட்டளையில் கதவணை அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்காக 2012-2013 வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 369 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டமும் துரித செயலாக்கத்தில் உள்ளது. இத்திட்டத்திற்காக, 2012-2013 வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶47) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.31 · ¶47 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.369 crores
“Implementation of Tamirabarani- Karumeniar–Nambiyar river linkage project, being taken up in four stages, at a cost of Rs.369 crores is in progress.”
“காவேரி மற்றும் முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினைகளில் இந்த அரசு மேற்கொண்ட அயராத போராட்டங்களும், பெற்ற வியத்தகு வெற்றிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டிட இந்த அரசு முழு மூச்சோடு செயல்பட்டு வருகிறது. காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. காவேரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு, சட்டத்திற்குப் புறம்பாக அணை கட்ட எடுக்கும் முயற்சிகளைத் தடுக்க ஒரு இடைக்கால மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் அவற்றைத் தடுக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். போற்றுதலுக்குரிய மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியவாறு காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க உரிய நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து எடுக்கும். மேலும், முக்கிய நதிநீர் இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகளை இணைப்பதற்கான பணிகள் 369 கோடி ரூபாய் செலவில், நான்கு கட்டங்களாக நடந்து வருகின்றன. காவேரி-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 254.45 கோடி ரூபாய் செலவில் கட்டளையில் கதவணை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. வரும் நிதியாண்டிற்கு நதிநீர் இணைப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள 253.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.25 · ¶39 · source PDF ↗ · on the map →
2016-17
“Meanwhile, Tamil Nadu has already taken up the inter-linking of Tamirabarani, Karumeniyar and Nambiyar rivers in Tirunelveli and Thoothukudi Districts.” tnbudget_2016-17_speech_en_revised · p.31 · ¶59 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.300 crore
“A project linking Thamiraparani and Nambiyar rivers is being implemented in four stages and Rs.213 crore has been incurred in executing the first two stages. Land acquisition is in progress for implementing Phase III and IV and Rs.300 crore has been provided in the Budget Estimates 2017-2018 for this project.” tnbudget_2017-18_speech_en · p.30 · ¶54 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.100.88 crore
“As part of the intra- State river linkage project, the Government has spent a sum of Rs.349.36 crore so far for linking Tamiraparani river with Nambiyar river and Rs.100.88 crore has been allocated for this project in this Budget.”
“அத்திக்கடவு- அவிநாசி குடிநீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்தை, 1,789 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த இந்த அரசு விரைவில் அனுமதி வழங்க உள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் மூலம், காளிங்கராயன் அணையின் கீழ்ப்புறத்திலிருந்து 1.5 டிஎம்சி அடி உபரி நீரினை நீரேற்றம் செய்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 32 பொதுப்பணித் துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளங்கள் நிரப்பப்படும். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 250 கோடி ரூபாய் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையே ஆறுகளை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தாமிரபரணி ஆற்றினை நம்பியாற்றுடன் இணைக்கும் திட்டத்திற்கு, இதுவரையில் 349.36 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், 2018-2019 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100.88 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶49) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.32 · ¶49 · source PDF ↗ · on the map →
2021-22
“The Tamiraparani, Karumeniyar and Nambiyar linking project will be completed by 31st March 2022, and will benefit 56,909 acres of land in drought prone parts of Tirunelveli and Thoothukudi districts.” tnbudget_2021-22_speech_en_interim · p.38 · ¶57 · source PDF ↗ · on the map →
Linked projects
- Pennaiyar-Palar Link project · sibling
Nearby in the same sector
- Dam Rehabilitation and Improvement Project (DRIP) · 11 years
- Micro Irrigation Mission (State funds) · 11 years
- Climate Change Adaptation Programme in Cauvery Delta · 6 years
- Athikadavu - Avinashi Flood Canal Project · 6 years
- Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management (IAMWARM) Phase-II · 5 years
- Restoration of traditional water bodies · 4 years