Agriculture · dormant
Farmer Producer Groups / Farmer Producer Organisations
5 budgets named it 5 year span 601 ₹ crore allocated 100 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2017-18 and named again in 4 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2017-18 Rs.100 crore
“A total allocation of Rs.100 crore has been made for this purpose for 2017-2018.”
“பயிர் சாகுபடியில் உள்ள 8118 இலட்சம் நில உடமைகளில் சிறு, குறு விவசாயிகள் வசம் உள்ள 74.47 இலட்சம் நில உடமைகள் சிறிய நில உடமைகளாக இருப்பதால், இச்சிறு நில உடமைகளில், வேளாண்மை மேம்பாடு பெரும் சவாலாக உள்ளது. அத்தகைய சிறு, குறு விவசாயிகளால், தேவைப்படும் கடன் வசதியைப் பெறுவதற்கோ, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவோ, உற்பத்திப் பொருட்களின் மதிப்பைக் கூட்டி அதிக இலாபம் ஈட்டவோ இயலுவதில்லை. எனவே, ஒருங்கிணைந்து கடன் வசதி பெறுதல், சிறந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றுதல், முன் மற்றும் பின் சந்தை இணைப்பு தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை சிறப்பான முறையில் மேற்கொள்ள கூட்டுப் பண்ணைய முறையை ஊக்குவிக்கும் வகையில், சிறு, குறு விவசாயிகளை ஒன்றிணைத்து, “உழவர் உற்பத்தியாளர் குழுக்களாகவும் (Farmer Producer Groups)”, இக்குழுக்களை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாகவும் (Farmer Producer organization) உருவாக்குவதற்கு, புதுமையான ஒரு திட்டத்தினை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில், இரண்டு இலட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில், முன்னோடித் திட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டு) ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் 100 விவசாயிகள் கொண்ட, 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களைத் தொடங்க ஊக்குவிக்கப்படும். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) மற்றும் சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பு (Small Farmer Agri Business Consortium) மூலம் வழங்கப்படும் நிதியுதவி மற்றும் கடன் வசதிகளைப் பெற உதவி செய்வதுடன், ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் மூலதன நிதியாக 5 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும். 2017-2018 ஆம் ஆண்டில், இத்திட்டத்திற்காக மொத்தம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வரும் ஐந்து ஆண்டுகளில் 40 இலட்சம் விவசாயிகள் ஒருங்கிணைக்கப்படுவர். அதற்கேற்ப, இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு படிப்படியாக அதிகரிக்கப்படும். கால்நடை பராமரிப்பு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.21 · ¶35 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.100.42 crore
“this Government will promote 2,000 new Farmer Producer Groups covering two lakh small and marginal farmers at a cost of Rs.100.42 crore during 2018-2019. Of these, 500 groups will eventually be upgraded to 50 Farmer Producer Companies with financial support of Rs.10 crore.”
“தொகுப்பு (Clusters) அடிப்படையில் 25 மாவட்டங்களில் உள்ள 10 இலட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களை மேம்படுத்த 2016-2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான சிறப்புத் திட்டத்தில் (Mission on Sustainable Dry Land Agriculture), 2017-2018 ஆம் ஆண்டில் 175.16 கோடி ரூபாய் செலவில் 400 மானாவாரித் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்புகளில் உற்பத்தியைத் தொடர்ந்து மேம்படுத்துவதுடன், மேலும் 400 புதிய மானாவாரித் தொகுப்புகளை ஏற்படுத்த 2018-2019 ஆம் ஆண்டில் 32116 கோடி ரூபாய் செலவிடப்படும். மற்றுமொரு புதுமை முயற்சியாக வேளாண் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கிடையே கூட்டுப் பண்ணைய செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 2017-2018 ஆம் ஆண்டில் இந்த அரசு கூட்டுப் பண்ணைய திட்டத்தை தொடங்கியது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 391 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தில், 2018-2019 ஆம் ஆண்டில் 100.42 கோடி ரூபாய் செலவில் இரண்டு இலட்சம் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைக்கும் வகையில் 2,000 புதிய வேளாண் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்படும். இவற்றில் 500 குழுக்கள் 10 கோடி ரூபாய் அரசு நிதியுதவியுடன் 50 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாகத் தரம் உயர்த்தப்படும். மேலும் ஒரு புதுமை முயற்சியாக, பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த நடவடிக்கைகளை விவசாயிகள் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த 2018-2019 ஆம் ஆண்டில் *ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தை” இந்த அரசு தொடங்கும். சோதனை முறையில் ஐந்து வட்டாரங்களில் தலா 1000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்கள் உரிய தொழில்நுட்ப உதவியை வழங்கும். இந்த முயற்சி, பாரம்பரியமாக நாம் பின்பற்றி வந்த நிலைக்கத்தக்க விவசாய முறைகளுக்கு விவசாயிகளை திரும்பக் கொண்டு செல்லும் என நம்புகிறேன். இத்திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.20 · ¶30 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.100.42 crore
“During 2019-2020, this Government will form 2,000 Farmers Producers Groups and 100 FPOs, with a financial allocation of Rs.100.42 crore.”
“பெரு விவசாயிகள் அடையும் பொருளாதாரப் பயன், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுதல் போன்ற பல்வேறு பயன்களை சிறு, குறு விவசாயிகளும் பெற 2017-2018 ஆம் ஆண்டில் புதுமை முயற்சியாக கூட்டுப் பண்ணைய திட்டத்தை” இந்த அரசு அறிமுகப்படுத்தியது. சிறு, குறு விவசாயிகள் கொண்ட, உழவர் ஆர்வலர் குழுக்கள் (Farmers Interest Groups) தொடங்கப்பட்டு, அத்தகைய உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் (Farmers Producer Groups) உருவாக்கப்படுகிறது. இறுதியாக உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக (Farmer Producer Company) உருவாகும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, மாநிலத்தில் 20,000 உழவர் ஆர்வலர் குழுக்களும், 4,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 483 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், அரசு மற்றும் நபார்டு வங்கி போன்ற இதர முகமைகள் மூலம் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. 2019-2020 ஆம் ஆண்டில், 100.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் அமைக்கப்படும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் நிலைத்துச் செயல்பட அவற்றை ஒருங்கிணைப்பது அவசியத் தேவையாக உள்ளது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை மாநில அளவிலும், மண்டல அளவிலும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ஊக்கமளிக்க, தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்புக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶26) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.16 · ¶26 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.100.56 crore
“The Government has released the ‘Policy for Promotion of Farmer Producer Organisations’ as was announced in the Budget speech of 2019-20. The scheme will be implemented in 2020-21 with a budget allocation of Rs.100.56 crore.”
“சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பண்ணைய முறை, தற்போது 28 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 2020-21 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. கூட்டுப்பண்ணைய முறையின் தொடர் முயற்சியாக, சிறு மற்றும் குறு விவசாயிகள், உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டதன் விளைவாக, கடந்த ஆண்டுகளில் ஆறு இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஏற்கெனவே 75 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது, 45 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2019-20 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் அறிவித்தவாறு, அரசு, “தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்புக் கொள்கையினை வெளியிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100.56 கோடி ரூபாயில் நிதி ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.22 · ¶36 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.300 crore
“the Collective Farming initiative launched in 2017-18 continues to be implemented to cover 8 lakh small and marginal farmers who have come together to form 40,000 Farmers Interest Groups and 8,000 Farmer Producer Groups. Corpus fund of Rs.300 crore has been released and 25,228 items of farm machinery have been purchased and utilised by the Farmer Producer Groups.”
“மாநிலத்திலுள்ள விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திட, தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டு, மூன்றாண்டு காலத்தில் மேலும் 25 இலட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் இதன் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. நடப்பு ஆண்டில் கோடை உழவு, மானிய விலையில் விதை விநியோகம், வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் மதிப்புக் கூட்டும் மையங்களை நிறுவுதல் போன்ற பணிகள் மூலம் 7.5 இலட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களிலிருந்து மீண்டு வருவதற்கு, 2017-18 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூட்டுப் பண்ணைய முறை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 8 இலட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒன்று சேர்ந்து, 40,000 உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் 8,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைத்துள்ளனர். மூலதன நிதியாக 300 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. மேலும், 25,228 வேளாண் இயந்திரங்கள் உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த பண்ணைய முறை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதன் மூலம், நடப்பாண்டில் மேலும் 12,022 நில உடைமைதாரர்கள் பயன்பெறுவார்கள்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.28 · ¶39 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years