Other · dormant

Guideline value and registration fee revision

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2023-24 and not named in any budget since.

See it on the map → All Other projects →

What each budget said, year by year

2023-24 policy DMK

“Since, the market value has risen steeply, as an interim measure, the Government has decided to revise the guideline value to the rates prevailing till 8-6-2017 and to reduce the registration fee to 2 per cent.”
“0104.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின்‌ வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல்‌ ஒரே சீராக 33 சதவிதம்‌ குறைக்கப்பட்டது. மேலும்‌, விற்பனை, நன்கொடை, பரிமாற்றம்‌ மற்றும்‌ குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக்‌ கட்டணம்‌ ஒரு சதவிதத்திலிருந்து நான்கு சதவிதமாக உயர்த்தப்பட்டது. சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும்‌, பதிவுக்‌ கட்டணத்தைக்‌ குறைக்கவும்‌ பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள்‌ வந்த வண்ணம்‌ உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில்‌ திருத்தத்தைப்‌ பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. இக்குழு நிலஅளவை எண்‌ வாரியாக திருத்தம்‌ மேற்கொள்ள கால அவகாசம்‌ தேவைப்படும்‌. ஆகவே, வெளிச்சந்தையில்‌ சொத்துகளின்‌ மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால்‌, இக்குழுவின்‌ அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம்‌ வாங்குபவர்களின்‌ சுமையைக்‌ குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவிதத்திலிருந்து 2 சதவிதமாகக்‌ குறைக்கவும்‌ அரசு முடிவு செய்துள்ளது. இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம்‌ ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில்‌ 5 சதவிதம்‌ முத்திரைத்‌ தீர்வை, 2 சதவிதம்‌ சொத்து மாற்று வரி மற்றும்‌ 2 சதவிதம்‌ பதிவுக்‌ கட்டணம்‌ செலுத்த வேண்டும்‌. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவிதம்‌ முத்திரைத்‌ தீர்வை, 2 சதவிதம்‌ பதிவுக்‌ கட்டணம்‌ செலுத்த வேண்டும்‌. இந்த நடவடிக்கைகள்‌ எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக்‌ கடன்‌ மூலம்‌ விடு வாங்குபவர்களுக்கு பெரிதும்‌ பயனளிக்கும்‌. மகளிர்‌ உரிமைத்‌ தொகை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶144) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.58 · ¶144 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector