Rural development · recurring

Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)

12 budgets named it 14 year span 35,929 ₹ crore allocated 6,000 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2011-12 and named again in 11 later budgets, most recently 2024-25.

Allocated by budget year

See it on the map → All Rural development projects →

What each budget said, year by year

2011-12 ` 3,472 crores continuation AIADMK · revised

“During 2011-2012, the proposed outlay for the scheme is ` 3,472 crores.”
“கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு நூறு நாள்‌ வேலை வாய்ப்பை உறுதியளிக்கும்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம்‌ தீவிரமாக செயல்படுத்தப்படும்‌. இத்திட்டத்தினால்‌ வேளாண்‌ பருவத்தில்‌ விவசாய கூலித்‌ தொழிலாளர்களுக்கு பெருமளவில்‌ தட்டுப்பாடு ஏற்படுவதாக புகார்கள்‌ இருப்பதால்‌, உச்ச வேளாண்‌ பருவத்தின்போது இத்திட்டத்தின்‌ கீழ்‌ வேலைகள்‌ எடுத்துக்‌ கொள்வதை தவிர்ப்பது பற்றி மத்திய அரசுடன்‌ இந்த அரசு கலந்தாலோசித்து உரிய நடவடிக்கையை எடுக்கும்‌. உச்ச வேளாண்‌ பருவ காலத்தை உள்ளூர்‌ நிலவரத்திற்கு ஏற்ப மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ முடிவு செய்வர்‌. பிற மாநிலங்களின்‌ அனுபவங்களை ஆராய்ந்த பிறகு, தனியார்‌ விவசாய நிலங்களில்‌ மேற்கொள்ளப்படும்‌ வேலைகளுக்கும்‌ இத்திட்டத்தைப்‌ பயன்படுத்துவது பற்றி இந்த அரசு ஆய்வு செய்யும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டு இத்திட்டத்தின்‌ கீழ்‌ 3,472 கோடி ரூபாய்‌ செலவிடப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.63 · ¶105 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2011-12 ` 5,237 crores continuation DMK · interim

“Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme being implemented with the Central assistance has created work of 66.48 crore man-days with a disbursement of ` 5,237 crores as wages in the last 5 years.”

tnbudget_2011-12_speech_en_interim · p.31 · ¶79 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.6,341.80 crores continuation AIADMK

“For the year 2013-2014, the allocation to the State stands at Rs.6,341.80 crores.”

financedept_2013-14_speech_en · p.47 · ¶115 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.6,000 crore continuation project cost AIADMK

“The Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme will be implemented with more focus on public asset creation at a cost of Rs.6,000 crore during 2014-2015.”
“பொதுச்‌ சொத்துக்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம்‌ அளிக்கும்‌ வகையில்‌, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்‌ திட்டம்‌, 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 6,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்படும்‌. இத்திட்டத்தில்‌ உருவாக்கப்படும்‌ சொத்துகளை நிலைப்படுத்தி பராமரித்திட, கிராமப்புறக்‌ கட்டமைப்புத்‌ திட்டத்திற்கு மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ தன்னிறைவுத்‌ திட்டத்திற்கு 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌, 470 கோடி ரூபாய்‌ செலவில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டுத்‌ திட்டமும்‌, 100 கோடி ரூபாய்‌ செலவில்‌ கிராமப்புற கட்டடங்கள்‌ பராமரிப்பு மற்றும்‌ புனரமைப்புத்‌ திட்டமும்‌, 100 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டமும்‌ இந்த அரசால்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.39 · ¶78 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.5,248 crores continuation AIADMK

“A sum of Rs.5,248 crores is provided in the Budget Estimates 2015-2016 for this scheme.”
“நாட்டிலேயே மிக அதிக அளவாக, இதுவரை 25.15 கோடி மனித வேலை நாட்களை ஏற்படுத்தி, 2014-2015 ஆம்‌ ஆண்டிலும்‌ மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்‌ திட்டத்தை செயல்படுத்துவதில்‌ தமிழகம்‌ முதலிடத்தை தொடர்ந்து வகித்து வருகிறது. நடப்பாண்டில்‌ 5,155.46 கோடி ரூபாய்‌ செலவிலான பணிகள்‌ இத்திட்டத்தில்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டப்‌ பணிகளுக்காக 5,248 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶71) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.43 · ¶71 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.7,155 crores continuation AIADMK · revised

“In the Revised Budget Estimates 2016-2017, Rs.7,155 crores has been allocated for this scheme.”

tnbudget_2016-17_speech_en_revised · p.45 · ¶89 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.1,000 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.1,000 crore has been provided for the MGNREGS.”

tnbudget_2017-18_speech_en · p.48 · ¶84 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.1,000 crore continuation AIADMK

“In 2018-2019, the Government estimates that Rs.5,200 crore will be directly received as grants from the Government of India and Rs.1,000 crore has been provided as State's share in the Budget.”
““மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்‌ திட்டத்தை” சிறப்பாகச்‌ செயல்படுத்தி, மத்திய அரசின்‌ பாராட்டுதலை தமிழ்நாடு தொடர்ந்து பெற்று வருகிறது. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ இதுவரை, 22.77 கோடி மனித நாட்களுக்கு வேலைவாய்ப்புகள்‌ ஏற்படுத்தப்பட்டு, 5,186.19 கோடி ரூபாய்‌ பயனாளிகளுக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, மொத்த வேலை நாட்களில்‌ 19.50 கோடி வேலை நாட்கள்‌ பெண்களின்‌ பங்களிப்பைப்‌ பெற்று, நாட்டிலேயே தமிழ்நாடு பெண்களின்‌ பங்களிப்பில்‌ முதன்மையாகத்‌ திகழ்கிறது. இத்திட்டத்தில்‌ 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 5,200 கோடி ரூபாயை மத்திய அரசிடமிருந்து நேரடியாக மானியமாகப்‌ பெறப்படும்‌ எனக்‌ கருதி, 1,000 கோடி ரூபாய்‌ மாநில அரசின்‌ பங்காக வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶76) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.47 · ¶76 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.375 crore continuation AIADMK

“In the Budget for 2020-21, Rs.375 crore is provided towards the State’s share of MGNREGS.”
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்‌ திட்டத்தை செயல்படுத்துவதில்‌ தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாகத்‌ திகழ்ந்து வருகிறது. 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்‌ திட்டத்தை செயல்படுத்துவதில்‌, மொத்தமாக 8 தேசிய விருதுகளை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. 2019-20 ஆம்‌ ஆண்டில்‌, 20.74 கோடி மனித உழைப்பு வேலை உருவாக்கப்பட்டு, 3,678.06 கோடி ரூபாய்‌ ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்‌ திட்டத்திற்கான மாநில அரசின்‌ பங்காக 375 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶75) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.43 · ¶75 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.5,998.99 crore continuation project cost AIADMK · interim

“Out of the targeted 32 crore person days for Tamil Nadu in 2020-21, till date 28.62 crore person days of employment at a cost of Rs.5,998.99 crore has been generated.”

tnbudget_2021-22_speech_en_interim · p.45 · ¶69 · source PDF ↗ · on the map →

2022-23 Rs.2,800 crore continuation DMK

“An amount of Rs.2,800 crore has been provided for Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme”

financedept_2022-23_speech_en · p.37 · ¶105 · source PDF ↗ · on the map →

2023-24 continuation DMK

“For 2023-24, 35 crore person days have been planned to be generated under the scheme.”

financedept_2023-24_speech_en · p.33 · ¶75 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.3,300 crore continuation DMK

“An allocation of Rs.3,300 crore has been earmarked for this scheme in the Budget Estimates.”
“ஊரகப்‌ பகுதிகளில்‌ ஏழை எளிய மக்களுக்கு ஒரு சமூகப்‌ பாதுகாப்பு வழங்கிடும்‌ விதமாக ஐக்கிய முற்போக்குக்‌ கூட்டணி அரசால்‌ அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தை நாட்டிலேயே மிகச்‌ சிறப்பாகச்‌ செயல்படுத்திடும்‌ மாநிலமாகத்‌ தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயனடைந்து வரும்‌ 92 இலட்சம்‌ பயனாளிகளில்‌, 26 இலட்சம்‌ ஆதி திராவிடர்களும்‌ 16 இலட்சம்‌ பழங்குடியினர்களும்‌ அடங்குவர்‌. அதிலும்‌ குறிப்பாக, 79 இலட்சம்‌ பெண்கள்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயணடைவது குறிப்பிடத்தக்கது. 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ அஇத்திட்டத்திற்காக 3,300 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 33, நெகிழிக்‌ கழிவுகள்‌ உள்ளிட்ட மட்காத குப்பைகள்‌, கிராமப்புறங்களின்‌ சுற்றுச்சூழலை மிகவும்‌ பாதிப்பிற்கு உள்ளாகிடுவதைத்‌ தவிர்க்க, முறையான திடக்கழிவு மேலாண்மைக்‌ கட்டமைப்புகளை உள்ளாட்சி அமைப்புகளின்‌ மூலம்‌ உருவாக்கி, மட்காத குப்பைகளை முறையாகச்‌ சேகரித்து மறுசுழற்சி செய்தல்‌, தொழில்‌ நிறுவனங்களின்‌ எரிபொருள்‌ பயன்பாட்டிற்கு வழங்குதல்‌ போன்ற பணிகளைச்‌ செயல்படுத்தி சுகாதாரமான தமிழ்நாட்டை உருவாக்கிடும்‌ நோக்கோடு, ஒரு புதிய நிறுவனம்‌ ஏற்படுத்தப்படும்‌. வறுமை ஒழிப்பு 34, கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிடும்‌ வகையில்‌, தமிழ்நாட்டில்‌ அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூகநலத்‌ திட்டங்களின்‌ வாயிலாக வறுமையை குறைப்பதில்‌ நமது மாநிலம்‌ மிகச்‌ சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதை அங்கீகரிக்கும்‌ வகையில்‌ ஒன்றிய அரசின்‌ நிதி ஆயோக்‌: சமீபத்திய தனது அறிக்கையில்‌ பன்முக வறுமைக்‌ குறியீட்டின்படி, தமிழ்நாட்டில்‌ வறுமைக்‌ கோட்டிற்குக்‌ கீழே வாழும்‌ மக்களின்‌ சதவிதம்‌ மிகக்‌ குறைவாக 2.2 சதவிதம்‌ மட்டுமே என அறிவித்துள்ளது. இருப்பினும்‌, தற்போது மிகவும்‌ வறியநிலையில்‌ வாழ்ந்து கொண்டிருக்கும்‌ கடைக்கோடி ஏழைக்‌ குடும்பங்களையும்‌ கண்டறிந்து, அவர்களின்‌ வாழ்க்கைத்‌ தரத்தை முன்னேற்றிட அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும்‌ இரண்டு ஆண்டுகளில்‌ மிகவும்‌ வறியநிலையில்‌ உள்ள சுமார்‌ ஐந்து இலட்சம்‌ ஏழைக்‌ குடும்பத்தினருக்கு அரசின்‌ உதவிகள்‌ அனைத்தையும்‌ ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில்‌ அவர்களை வறுமையில்‌ இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது. 35, ஆதரவற்றோர்‌, தனித்து வாழும்‌ முதியோர்‌, ஒற்றைப்‌ பெற்றோர்‌ குடும்பங்கள்‌, பெற்றோரை இழந்த குழந்தைகள்‌, மனநலம்‌ குன்றியவர்கள்‌, மாற்றுத்திறனாளிகள்‌, சிறப்புக்‌ குறைபாடு உடைய குழந்தைகள்‌ உள்ள குடும்பங்கள்‌ போன்ற சமூகத்தின்‌ விளிம்புநிலையில்‌ வாழ்ந்திடும்‌ மக்கள்‌ அனைவரும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ அடையாளம்‌ காணப்பட்டு, அவர்களுக்குத்‌ தேவையான அடிப்படை வசதிகள்‌ மட்டுமன்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன்‌ மேம்பாடு, விடுகள்‌ போன்ற அனைத்து உதவிகளும்‌ வழங்கப்படும்‌. அரசிடம்‌ உள்ள தரவுகள்‌, கள ஆய்வு, மக்கள்‌ பங்கேற்புடன்‌ கலந்துரையாடல்‌, கிராமசபை ஆகியவற்றின்‌ மூலம்‌ மாநிலம்‌ முழுக்க மிகவும்‌ ஏழைக்‌ குடும்பங்கள்‌ கண்டறியப்படும்‌. முதலமைச்சரின்‌ தாயுமானவர்‌ திட்டம்‌ என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில்‌, மக்கள்‌ பிரதிநிதிகள்‌, தொண்டு நிறுவனங்கள்‌ மற்றும்‌ வங்கிகளின்‌ பங்கேற்பும்‌ உறுதி செய்யப்படும்‌. இந்த வரவு-௮சலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறைக்கு 27,922 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிருவாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ 36, தமிழ்நாட்டில்‌ நகர்ப்பகுதிகளில்‌ உள்ள விடுகளுக்கு குடிநீர்‌ இணைணப்பு, பொது சுகாதாரம்‌, இணைப்புச்‌ சாலைகள்‌, தெருவிளக்குகள்‌, நவின மின்‌ மயானம்‌, நூகைங்கள்‌ மற்றும்‌ கணினியுடன்‌ கூடிய அறிவுசார்‌ மையங்கள்‌, பாதாளச்‌ சாக்கடை மற்றும்‌ சமுதாய அடிப்படைக்‌ கட்டமைப்புகளை உருவாக்கும்‌ நோக்கத்தோடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கலைஞர்‌ நகர்ப்புர மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, கடந்த 3 ஆண்டுகளில்‌ 1328 கோடி ரூபாய்‌ மதிப்பிலான பணிகள்‌ முடிவுற்று 1659 கோடி ரூபாய்‌ மதிப்பிலான பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தினைச்‌ செயல்படுத்திட, வரும்‌ நிதியாண்டில்‌ 1000 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்படும்‌. அம்ருத்‌ 20 திட்டத்தில்‌, 4942 கோடி ரூபாய்‌, ஒன்றிய அரசு பங்களிப்புடனும்‌ 9,047 கோடி ரூபாய்‌ மாநில அரசு மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ பங்களிப்புடனும்‌, திட்டப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2024-25 ஆம்‌ ஆண்டில்‌, பல்வேறு திட்ட நிதிகளைத்‌ திரட்டி நகர்ப்புர உள்ளாட்சிப்‌ பகுதிகளில்‌ 4,457 கி.மீ. நீளமுள்ள சாலைகள்‌ 2,500 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ புதுப்பிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.16 · ¶32 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector