Rural development · recurring
Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)
First announced in 2011-12 and named again in 12 later budgets, most recently 2026-27.
Allocated by budget year
See it on the map → All Rural development projects →
What each budget said, year by year
2011-12 ` 3,472 crores
“During 2011-2012, the proposed outlay for the scheme is ` 3,472 crores.”
“கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு நூறு நாள் வேலை வாய்ப்பை உறுதியளிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும். இத்திட்டத்தினால் வேளாண் பருவத்தில் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு பெருமளவில் தட்டுப்பாடு ஏற்படுவதாக புகார்கள் இருப்பதால், உச்ச வேளாண் பருவத்தின்போது இத்திட்டத்தின் கீழ் வேலைகள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது பற்றி மத்திய அரசுடன் இந்த அரசு கலந்தாலோசித்து உரிய நடவடிக்கையை எடுக்கும். உச்ச வேளாண் பருவ காலத்தை உள்ளூர் நிலவரத்திற்கு ஏற்ப மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முடிவு செய்வர். பிற மாநிலங்களின் அனுபவங்களை ஆராய்ந்த பிறகு, தனியார் விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்படும் வேலைகளுக்கும் இத்திட்டத்தைப் பயன்படுத்துவது பற்றி இந்த அரசு ஆய்வு செய்யும். 2011-2012 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் 3,472 கோடி ரூபாய் செலவிடப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.63 · ¶105 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 5,237 crores
“Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme being implemented with the Central assistance has created work of 66.48 crore man-days with a disbursement of ` 5,237 crores as wages in the last 5 years.”
“அனைத்துக் கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2006-2007 முதல் ரூபாய் 2,549 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் இந்த ஐந்தாண்டுகளில் இதுவரை, ரூபாய் 5,237 கோடி செலவில் 66.48 கோடி மனித நாட்களுக்கான வேலைவாய்ப்பு இந்த அரசால் வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலைநாட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களை, இந்த அரசு அமைத்து வருகிறது. 2008-2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை 95 சமத்துவபுரங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2011-2012 ஆம் ஆண்டிற்கு ரூபாய் 411 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.31 · ¶79 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.6,341.80 crores
“For the year 2013-2014, the allocation to the State stands at Rs.6,341.80 crores.”
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்ட பணிகளை முடிப்பதிலும், மொத்தச் செலவினத்திலும், நமது நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 2013-2014 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக நமது மாநிலத்திற்கு 6,341.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1.4.2013-லிருந்து இத்திட்டத்தில் அளிக்கப்படும் தினக்கூலி 132 ரூபாயிலிருந்து 148 ரூபாயாக உயர்த்தப்படும். இது நடப்பாண்டில் வழங்கப்படுவதை விட 16 ரூபாய் கூடுதல் ஆகும். ஊரகப் பகுதிகளுக்கு சாலை இணைப்]”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.47 · ¶115 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.6,000 crore
“The Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme will be implemented with more focus on public asset creation at a cost of Rs.6,000 crore during 2014-2015.”
“பொதுச் சொத்துக்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், 2014-2015 ஆம் ஆண்டில் 6,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் உருவாக்கப்படும் சொத்துகளை நிலைப்படுத்தி பராமரித்திட, கிராமப்புறக் கட்டமைப்புத் திட்டத்திற்கு மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தன்னிறைவுத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2014-2015 ஆம் ஆண்டில், 470 கோடி ரூபாய் செலவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டமும், 100 கோடி ரூபாய் செலவில் கிராமப்புற கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்புத் திட்டமும், 100 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமும் இந்த அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.39 · ¶78 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.5,248 crores
“A sum of Rs.5,248 crores is provided in the Budget Estimates 2015-2016 for this scheme.”
“நாட்டிலேயே மிக அதிக அளவாக, இதுவரை 25.15 கோடி மனித வேலை நாட்களை ஏற்படுத்தி, 2014-2015 ஆம் ஆண்டிலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தை தொடர்ந்து வகித்து வருகிறது. நடப்பாண்டில் 5,155.46 கோடி ரூபாய் செலவிலான பணிகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டப் பணிகளுக்காக 5,248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶71) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.43 · ¶71 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.7,155 crores
“In the Revised Budget Estimates 2016-2017, Rs.7,155 crores has been allocated for this scheme.”
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை! (MGNREGS) தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. தேசிய அளவிலான பல்வேறு விருதுகளை ஆண்டுதோறும் தமிழகத்திற்கு வழங்கி, மத்திய அரசு, மாநில அரசின் செயல்பாடுகளுக்கு உரிய அங்கீகாரம் அளித்து வருகிறது. கிராமப்புறங்களில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், கழிவறைகள் கட்டுதல், மரம் நடுதல், கோழிகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்புக் கொட்டகைகள் அமைத்தல் போன்ற சொத்துக்களை உருவாக்கும் பணிகளில் இத்திட்ட நிதியை மாநில அரசு பயன்படுத்தி வருகிறது. இம்முயற்சிகளைப் பாராட்டி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதற்கான விருதினை” 2015-2016 ஆம் ஆண்டிலும் தமிழகம் பெற்றுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்காக 7,155 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶89) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.45 · ¶89 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.1,000 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.1,000 crore has been provided for the MGNREGS.”
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை! (MGNREGS) தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தின் இத்திட்டச் செயலாக்கம் குறித்து மத்திய அரசு வெகுவாகப் பாராட்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், கழிவறைகள் கட்டுதல், மரம் நடுதல், கோழி மற்றும் கால்நடைகள் வளர்ப்புக் கொட்டகைகள் அமைத்தல் போன்ற புதுமையான பணிகளைத் தழுவி, தற்போது தேசிய அளவில் இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நிலவி வரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை நாட்களின் எண்ணிக்கை நூறிலிருந்து நூற்று ஐம்பதாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், தொழிலாளர் கூலிக்கான (wage component) தொகை முழுவதையும் இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு வங்கி மூலம் மத்திய அரசே நேரடியாக விடுவித்து வருகிறது. பொருட்களுக்கான செலவில் (material component) மத்திய அரசு அதன் பங்கான 75 சதவீதத்தை, மாநில வரவு-செலவுத் திட்டத்தின் வழியாக விடுவித்து வருகிறது. இதனால், மாநில அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை பெருமளவில் குறைந்துள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶84) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.48 · ¶84 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.1,000 crore
“In 2018-2019, the Government estimates that Rs.5,200 crore will be directly received as grants from the Government of India and Rs.1,000 crore has been provided as State's share in the Budget.”
““மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை” சிறப்பாகச் செயல்படுத்தி, மத்திய அரசின் பாராட்டுதலை தமிழ்நாடு தொடர்ந்து பெற்று வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டில் இதுவரை, 22.77 கோடி மனித நாட்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 5,186.19 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மொத்த வேலை நாட்களில் 19.50 கோடி வேலை நாட்கள் பெண்களின் பங்களிப்பைப் பெற்று, நாட்டிலேயே தமிழ்நாடு பெண்களின் பங்களிப்பில் முதன்மையாகத் திகழ்கிறது. இத்திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டில் 5,200 கோடி ரூபாயை மத்திய அரசிடமிருந்து நேரடியாக மானியமாகப் பெறப்படும் எனக் கருதி, 1,000 கோடி ரூபாய் மாநில அரசின் பங்காக வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶76) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.47 · ¶76 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.375 crore
“In the Budget for 2020-21, Rs.375 crore is provided towards the State’s share of MGNREGS.”
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில், மொத்தமாக 8 தேசிய விருதுகளை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில், 20.74 கோடி மனித உழைப்பு வேலை உருவாக்கப்பட்டு, 3,678.06 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான மாநில அரசின் பங்காக 375 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶75) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.43 · ¶75 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.5,998.99 crore
“Out of the targeted 32 crore person days for Tamil Nadu in 2020-21, till date 28.62 crore person days of employment at a cost of Rs.5,998.99 crore has been generated.”
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 2020-21 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 32 கோடி மனித வேலை நாட்களில், இதுவரை 5,998.99 கோடி ரூபாய் செலவில் 28.62 கோடி மனித வேலை நாட்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக, 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 26 தேசிய விருதுகளை தமிழ்நாடு பெற்றுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶69) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.45 · ¶69 · source PDF ↗ · on the map →
2022-23 Rs.2,800 crore
“An amount of Rs.2,800 crore has been provided for Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme”
“மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2,800 கோடி ரூபாயும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 705 கோடி ரூபாயும், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்திற்கு 656 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.37 · ¶105 · source PDF ↗ · on the map →
2023-24
“For 2023-24, 35 crore person days have been planned to be generated under the scheme.”
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இவ்வாண்டு இதுவரை, 10,914 கோடி ரூபாய் செலவில்: 30.87 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், 35 கோடி வேலை நாட்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மதிப்பிடுகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 22,562 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புர மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶75) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.33 · ¶75 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.3,300 crore
“An allocation of Rs.3,300 crore has been earmarked for this scheme in the Budget Estimates.”
“ஊரகப் பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு சமூகப் பாதுகாப்பு வழங்கிடும் விதமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நாட்டிலேயே மிகச் சிறப்பாகச் செயல்படுத்திடும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் 92 இலட்சம் பயனாளிகளில், 26 இலட்சம் ஆதி திராவிடர்களும் 16 இலட்சம் பழங்குடியினர்களும் அடங்குவர். அதிலும் குறிப்பாக, 79 இலட்சம் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயணடைவது குறிப்பிடத்தக்கது. 2024-25 ஆம் ஆண்டில் அஇத்திட்டத்திற்காக 3,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 33, நெகிழிக் கழிவுகள் உள்ளிட்ட மட்காத குப்பைகள், கிராமப்புறங்களின் சுற்றுச்சூழலை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகிடுவதைத் தவிர்க்க, முறையான திடக்கழிவு மேலாண்மைக் கட்டமைப்புகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் உருவாக்கி, மட்காத குப்பைகளை முறையாகச் சேகரித்து மறுசுழற்சி செய்தல், தொழில் நிறுவனங்களின் எரிபொருள் பயன்பாட்டிற்கு வழங்குதல் போன்ற பணிகளைச் செயல்படுத்தி சுகாதாரமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் நோக்கோடு, ஒரு புதிய நிறுவனம் ஏற்படுத்தப்படும். வறுமை ஒழிப்பு 34, கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிடும் வகையில், தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூகநலத் திட்டங்களின் வாயிலாக வறுமையை குறைப்பதில் நமது மாநிலம் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதை அங்கீகரிக்கும் வகையில் ஒன்றிய அரசின் நிதி ஆயோக்: சமீபத்திய தனது அறிக்கையில் பன்முக வறுமைக் குறியீட்டின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் சதவிதம் மிகக் குறைவாக 2.2 சதவிதம் மட்டுமே என அறிவித்துள்ளது. இருப்பினும், தற்போது மிகவும் வறியநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிட அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறியநிலையில் உள்ள சுமார் ஐந்து இலட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது. 35, ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, விடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராமசபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுக்க மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு-௮சலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் 36, தமிழ்நாட்டில் நகர்ப்பகுதிகளில் உள்ள விடுகளுக்கு குடிநீர் இணைணப்பு, பொது சுகாதாரம், இணைப்புச் சாலைகள், தெருவிளக்குகள், நவின மின் மயானம், நூகைங்கள் மற்றும் கணினியுடன் கூடிய அறிவுசார் மையங்கள், பாதாளச் சாக்கடை மற்றும் சமுதாய அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 1328 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவுற்று 1659 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தினைச் செயல்படுத்திட, வரும் நிதியாண்டில் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அம்ருத் 20 திட்டத்தில், 4942 கோடி ரூபாய், ஒன்றிய அரசு பங்களிப்புடனும் 9,047 கோடி ரூபாய் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடனும், திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2024-25 ஆம் ஆண்டில், பல்வேறு திட்ட நிதிகளைத் திரட்டி நகர்ப்புர உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.16 · ¶32 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.12,642 crore
“the Government has already announced the implementation of this scheme with a total financial allocation of Rs.12,642 crore, including an unprecedented State contribution of Rs.5,057 crore.”
“தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம், தமிழ்நாடு திட்டத்தின் புதிய நிதிப் பங்கீட்டு முறையால் மாநிலத்தின் நிதிநிலைக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. டமொத்த திட்ட நிதியில் மாநில அரசின் பங்களிப்பாக, இதுவரை இல்லாத வகையில் 40 சதவித நிதியினை ஏற்க வேண்டிய கட்டாயம் மாநில அரசிற்கு ஏற்பட்டுள்ளது. மாநில அரசு இந்த நிதிப் பங்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. எனினும், ஊரக ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பெரிதும் சார்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் இதுவரை இல்லாத அளவிலான 5,057 கோடி ரூபாய் பங்களிப்புடன் மொத்தம் 12,642 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶135) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.66 · ¶135 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- MLA Constituency Development Scheme (MLACDS) · 10 years
- Devolution grants to local bodies · 7 years
- Tamil Nadu Village Habitation Improvement Scheme (THAI) · 6 years
- State Balanced Growth Fund (SBGF) · 6 years
- Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM) · 6 years
- Swachh Bharat Mission (Gramin) · 6 years