Industry · dormant
Polymers Conversion Industrial Park
First announced in 2012-13 and named again in 3 later budgets, most recently 2018-19. Districts: thiruvallur, tiruvallur. Places named: Ponneri.
Allocated by budget year
Located at Ponneri · Tiruvallur district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2012-13 Rs.160 crores
“TIDCO has proposed to set up a Polymers Conversion Industrial Park with an investment of Rs.160 crores at Vayalur in Tiruvallur District.”
“திருவள்ளூர் மாவட்டம் வயலூரில், 160 கோடி ரூபாய் முதலீட்டில் பாலிமர் மாற்றுத் தொழில் பூங்காவை அமைக்க தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் உத்தேசித்துள்ளது. பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க, மேலும் 20,000 ஏக்கர் அளவிலான நில வங்கியை ஏற்படுத்தும் பணியில் சிப்காட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தொழில் வளர்ச்சிக்கு உகந்த வழித்தடங்களை ஊக்குவிக்கும் வகையில், எண்ணூர் துறைமுகத்திற்கான இணைப்பை மேலும் வலுப்படுத்தவும், வடசென்னைப் பகுதியில் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கவும், வடக்கு துறைமுக இணைப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இத்தோடு தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் சென்னை வெளிவட்டச் சாலை-!, எண்ணூர்-மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகியன வடசென்னையின் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் என நம்புகிறேன். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶56) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.36 · ¶56 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.264 crores
“Sanction has also been accorded to set up a Heavy Engineering Components Manufacturing Hub in Ponneri Taluk of Thiruvallur District at a cost of Rs.700 crores and a Polymer Industries Park at Voyalur, Ponneri Taluk at a cost of Rs.264 crores.”
“கோயம்புத்தூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு உயிரி தொழில் பூங்கா-।।। (TICEL) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் 700 கோடி ரூபாய் செலவில், கனரகத் தொழில் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி மையத்தையும், பொன்னேரி வட்டத்தில் உள்ள வயலூரில் 264 கோடி ரூபாய் செலவில் பாலிமர் தொழிற் பூங்காவையும் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு எடுத்த அயராத முயற்சிகள் மூலமாக, சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக பொன்னேரி தொழில் முனையம் அமைக்கவும், இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய தொழில் முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் ஒன்றினை அமைத்திடவும் கொள்கை அளவிலான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶51) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.35 · ¶51 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.294 crores
“Tamil Nadu Industrial Development Corporation (TIDCO), in association with the SIPCOT, is establishing a Polymer Industries Park in about 306 acres of land in Ponneri Taluk of Thiruvallur District at a total cost of Rs.294 crores.”
“சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், பொன்னேரி தொழில் முனையத்தை தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலமாக (NIMZ) மேம்படுத்துவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO), சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் சுமார் 306 ஏக்கர் பரப்பளவில் பாலிமர் தொழிற் பூங்காவினை 294 கோடி ரூபாய் செலவில் அமைத்து வருகிறது. இப்பூங்காவில், சிறு மற்றும் நடுத்தர பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் 84 அலகுகள் இடம் பெறும். ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வல்லம் வடகாலில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் வான்வெளிப் பூங்கா (Aerospace Park) அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வானூர்தி வடிவமைப்பு, வானூர்திகளுக்கான உதிரிப் பாகங்கள் தயாரிப்பு, பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் வசதிகளுடன் இப்பூங்கா செயல்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.41 · ¶79 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.264 crore
“Tamil Nadu Industrial Development Corporation (TIDCO), in association with SIPCOT, is establishing a Plastic Industries Park in Ponneri Taluk of Thiruvallur District with an investment of Rs.264 crore.”
“காஞ்சிபுரம் மாவட்டத்தில், வல்லம்-வடகால் சிப்காட் தொழிற்பேட்டையில், 268 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் வானூர்தி பூங்காவில் 350 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வானூர்திகளுக்கான உயர் கணினிப் பொறியியல் மற்றும் வடிவமைப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் 264 கோடி ரூபாய் முதலீட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திப் பூங்கா ஒன்றினை சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் உருவாக்கி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 130 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவப் பூங்காவினை உருவாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முக்கிய பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அதன் இரண்டாவது அலகின் திறனை 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் அதிகரிக்க உள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தொழில் துறைக்காக 2,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶77) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.43 · ¶77 · source PDF ↗ · on the map →
2018-19
“Plastic Industrial Park at Ponneri”
“புதிய தொழில் அலகுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 5,023 ஏக்கர் அளவிலான நில வங்கியினை சிப்காட் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. புதிய முதலீட்டாளர்களுக்குப் போதுமான நிலத்தினை ஒதுக்கீடு செய்வதற்கு, கூடுதலாக 9,030 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் நிறுவனம் நில வங்கியை விரிவுபடுத்தும். சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் மற்றும் மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடத் திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் தொழில் மேம்பாட்டிற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும். தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில் வானூர்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டைசல் உயிர்ப் பூங்கா, பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழிற்பூங்கா மற்றும் செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா அமைக்க சிறப்பு முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. வளர்ச்சியடைந்த வாகன தயாரிப்புத் துறையினை அடித்தளமாகக் கொண்டு, வானூர்திப் பூங்கா மற்றும் பாதுகாப்பு உபகரண உற்பத்திக்கான தொழில் வழித்தடத்தையும் அமைக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இதன் மூலம், 10,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.42 · ¶68 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains National Investment and Manufacturing Zone (NIMZ) and Ponneri Industrial Node · 2016-17 –2020-21
- runs alongside SIPCOT industrial park, Sengipatti (Thanjavur) · 2024-25
- runs alongside Industrial park at Kallapalayam · 2021-22
- runs alongside CODISSIA Industrial Park and Madurai Engineering Cluster · 2021-22
- runs alongside Industrial park, Cheyyar · 2011-12
- runs alongside Industrial park, Vadakal, Thiruperumbudur · 2011-12
- runs alongside Heavy Engineering Components Manufacturing Hub · 2016-17
- part of Industrial parks / investment initiatives · 2018-19
Nearby in the same sector
- National Investment and Manufacturing Zone (NIMZ) and Ponneri Industrial Node · 2 years · shares a district
- SIPCOT Skill Development Centres · 1 year · shares a district
- Heavy Engineering Components Manufacturing Hub · 1 year · shares a district
- SIPCOT Plug and Play facilities · 1 year · shares a district
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years