Agriculture · dormant

Precision Farming programme

1 budget named it 1 year span ₹ crore allocated 21 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2011-12 ` 20.93 crores continuation project cost AIADMK · revised

“Precision Farming will be adopted on 22,000 acres at a cost of ```` 20.93 crores”
“நெல்‌, கரும்பு, பருத்தி, பயறு வகைகள்‌, எண்ணெய்‌ வித்துக்கள்‌ போன்ற முக்கிய பயிர்களின்‌ உற்பத்தித்‌ திறனைப்‌ பெருக்கவும்‌, காய்கறிகள்‌, பூக்கள்‌, பழங்கள்‌ போன்ற அதிக வருவாய்‌ ஈட்டுகின்ற தோட்டக்கலைப்‌ பயிர்கள்‌ பயிரிடும்‌ பரப்பை விரிவுபடுத்தவும்‌ இந்த அரசு கவனம்‌ செலுத்தும்‌. முன்னோடி தொழில்நுட்பங்களான திருந்திய நெல்‌ சாகுபடித்‌ திட்டம்‌, நவீன முறையில்‌ கரும்பு உற்பத்தித்‌ திறனை உயர்த்தும்‌ திட்டம்‌, துல்லிய பண்ணையம்‌, பி.டி. பருத்தியைப்‌ பரவலாக்குதல்‌, பயறு வகைகள்‌, எண்ணெய்‌ வித்துக்கள்‌ ஆகியவற்றில்‌ உகந்த பயிர்‌ மேலாண்மையைக்‌ கடைப்பிடித்தல்‌, பசுமைக்‌ குடில்‌, துல்லிய பண்ணையம்‌ முறைகளில்‌ காய்கறிகளைப்‌ பயிரிடுதல்‌, தோட்டக்கலைப்‌ பயிர்களுக்கான அடர்‌ நடவு முறை போன்றவை தீவிரமாக பரவலாக்கப்படும்‌. நெல்‌ உற்பத்தித்‌ திறனை உயர்த்த 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 22.24 இலட்சம்‌ ஏக்கரில்‌ திருந்திய நெல்‌ சாகுபடி மேற்கொள்ளப்படும்‌. இதே போன்று 14,000 ஏக்கரில்‌ நவீன முறையில்‌ கரும்பு உற்பத்தித்‌ திறன்‌ உயர்த்தும்‌ திட்டம்‌ மேற்கொள்ளப்படும்‌. கரும்பு உற்பத்தித்‌ திறனை உயர்த்துவதற்காக, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில்‌ 2.45 இலட்சம்‌ ஏக்கரில்‌ இத்திட்டத்தை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயறு வகைகளை இறவையில்‌ அதிகப்‌ பரப்பில்‌ தனிப்‌ பயிராக சிறந்த பயிர்‌ மேலாண்மையுடன்‌ சாகுபடி மேற்கொள்வதன்‌ மூலம்‌, அதன்‌ உற்பத்தித்‌ திறன்‌ அதிகரிக்கப்படும்‌. பழங்கள்‌ மற்றும்‌ காய்கறிகளின்‌ உற்பத்தித்‌ திறனை உயர்த்திடும்‌ வகையில்‌ 20.93 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ 22,000 ஏக்கர்‌ பரப்பில்‌ துல்லிய பண்ணையமும்‌, நான்கு இலட்சம்‌ சதுர மீட்டர்‌ பரப்பில்‌ பசுமைக்‌ குடில்‌ முறையும்‌ மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶23) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.13 · ¶23 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector