Agriculture · dormant
Pulse Production Programme
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2016-17 and not named in any budget since.
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2016-17
“A special self-sufficiency Pulse Production Programme will be launched this year, specifically for promoting cultivation of green gram, black gram and red gram under irrigated conditions.”
“பல்வேறு திட்டங்களின் கீழ் கிடைக்கப்பெறும் நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து நிலையான வேளாண் வளர்ச்சிக்கு கீழ்க்காணும் உத்திகளைப் பயன்படுத்தி ஒரு விரிவான அணுகுமுறை கடைபிடிக்கப்படும். © நவீன தொழில்நுட்பங்கள் கூடுதல் முனைப்புடன் விவசாயிகளிடையே கொண்டு செல்லப்படும். 2016-2017 ஆம் ஆண்டில், 27.50 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் திருந்திய நெல் சாகுபடி முறையும் (System of Rice _ Intensification), 43,688 ஏக்கர் நிலப்பரப்பில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையும் (Sustainable Sugarcane Initiative) விரிவாக்கம் செய்யப்படும். பருத்தி மற்றும் காய்கறி சாகுபடியில் துல்லியப் பண்ணைய முறை ஊக்குவிக்கப்படும். 6 தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவு செய்யும் வகையில், சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க, சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில், மானாவாரி நில விவசாயத்திற்கு ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். நீர் ஆதாரங்களை மேம்படுத்தி, மழைநீரைச் சேமித்து, விரயமின்றி பயன்படுத்தும் வழிமுறைகள் இத்திட்டத்தின் முக்கியக் கூறாக விளங்கும். பண்ணை அளவிலான வருவாயைப் பெருக்க, கறவை மாடுகள் மற்றும் கோழிகள் வளர்ப்பை உள்ளடக்கிய கலப்புப் பண்ணைய முறை மானாவாரிப் பகுதிகளில் ஊக்குவிக்கப்படும். பாசன வசதிகளைக் கொண்ட நிலங்களில், பச்சைப் பயறு, உளுந்து, துவரை போன்ற பயறுவகை சாகுபடியினை ஊக்குவித்து, பயறு உற்பத்தியில் தன்னிறைவுக்கான ஒரு சிறப்புத் திட்டம் இந்த ஆண்டில் துவங்கப்படும். பயறு உற்பத்தியில் 9.80 இலட்சம் மெட்ரிக் டன் அளவை அடையும் நோக்கத்துடன், 27.50 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் பயறு சாகுபடி மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய முயற்சிகளினால், நமது மாநிலம் பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் என நான் நம்புகிறேன். நுண்ணீர்ப் பாசனத்திற்கு மானியம் வழங்கும் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும். 2016-2017 ஆம் ஆண்டில், வேளாண் பயிர்கள் பயிரிடப்படவுள்ள 28,540 ஏக்கர் பரப்பிலும், தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்படவுள்ள 86,707 ஏக்கர் பரப்பிலும் நுண்ணீர்ப் பாசன முறை 319 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். ° பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், பண்ணை இயந்திரங்கள் பயன்படுத்துவதை பல்வேறு நிலைகளில் ஊக்குவிக்கும் தற்போதைய முயற்சிகள் தொடரும். கனரக இயந்திரங்கள் வேளாண் பொறியியல் துறையின் மூலம் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படும். விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 50 சதவீத மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் வாங்கிட வழிவகை செய்யப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கு 40 சதவீத மானியத்தில் வேளாண் இயந்திரங்களை வழங்கி, அவற்றை வாடகைக்கு வழங்கும் மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். இதுவரை, 20.99 கோடி ரூபாய் செலவில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் 212 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2016-2017 ஆம் ஆண்டில், மேலும் 32.45 கோடி ரூபாய் செலவில் 324 மையங்கள் அமைக்கப்படும். 2016-2017 ஆம் ஆண்டிற்கு, பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶34) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.18 · ¶34 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years