Culture & tourism · dormant
Robert Caldwell Research Chair
1 budget named it 1 year span 1 ₹ crore allocated AIADMK government
First announced in 2020-21 and not named in any budget since.
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2020-21 Rs.1 crore
“A Research Chair in the name of the renowned Tamil scholar Robert Caldwell with a grant of Rs.1 crore will be established in Tamil University to conduct research in the area of comparative study of grammar (Oppilakkanam).”
“தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமையை கொண்டாடி உலகறிய செய்ய இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக, ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஹூஸ்டன் பல்கலைக்கழகம், வாரணாசி இந்து பல்கலைக்கழகம் மற்றும் கெளஹாத்தி பல்கலைக்கழகம் உட்பட, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகழ்ப்பெற்ற பல்கலைக்கழகங்களில், தமிழ்மொழி கற்பித்தலைக் கொண்டுவர சீரிய முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டில் சிகாகோ மாநகரில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பாரிஸ் நகரில் நடைபெற்ற நான்காவது ஐரோப்பிய தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு ஆகியவற்றிற்கு இந்த அரசு நிதியுதவி அளித்துள்ளது. ஒரு கோடி ரூபாய் மானியத்தில், தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கையை இந்த அரசு நிறுவ உள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தமிழ் வளர்ச்சித் துறைக்காக 74.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய்க் கணக்கில் செலவுகள் வருவாய்க் கணக்கு செலவுகள் 2019-20 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் 2,12,035.93 கோடி ரூபாயைக் காட்டிலும், 2019-20 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகள் 2,16,932.51 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. அகவிலைப்படி உயர்வினாலும். இந்த ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட செலவினங்களாலும் இது உயர்ந்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் 2,40,992.78 கோடி ரூபாயாகும். வருவாய் கணக்கில் செலவினம் 2021-22 ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் 2,67,949.42 கோடி ரூபாய் எனவும், 2022-23 இல் 2,97,055.44 கோடி ரூபாய் எனவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் முக்கியக் கூறுகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. = பொறுப்பேற்ற ஊதியச் செலவினங்களுக்காக 2020-21-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் 64,208.55 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22-ஆம் ஆண்டிற்கு 72,369.60 கோடி ரூபாயாகவும், 2022-23-ஆம் ஆண்டிற்கு 81415.80 கோடி ரூபாயாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுக்கான மதிப்பீடுகளில் தற்போதைய போக்கு மற்றும் பொருளாதர நிலையின் அடிப்படையிலும், வருங்காலங்களில் அகவிலைப்படி உயர்விற்கான சாத்தியங்களின் அடிப்படையிலும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில், சம்பளம் அல்லாத, செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பிற்கான செலவினம் 13,53127 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. போக்குகளின் அடிப்படையிலும், வருங்காலப் பொருளாதார நிலவரப்படியும், 2021-22 ஆம் ஆண்டிற்கு 15,425.65 கோடி ரூபாயாகவும், 2022-23ஆம் ஆண்டிற்கு 17,585.24 கோடி ரூபாயாகவும் முன்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பேற்ற செலவுகளான, ஒய்வூதியம் மற்றும் ஏனைய ஒய்வுக்காலப் பயன்களுக்கான மதிப்பீடு 2020-21 ஆம் ஆண்டிற்கு 32,009.35 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், போக்குகளின் அடிப்படையிலும், மாநிலத்தின் ஓய்வூதியப் பொறுப்புகளின் அடிப்படையிலும் 2021-22 மற்றும் 2022-23-ஆம் ஆண்டுகளில் 12.0 சதவீதமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடப்பு ஆண்டில் செய்யப்பட்ட ஒப்பளிப்புகளான, பொங்கல் பரிசு, மாணக்கர்களுக்கான பேருந்து அனுமதிச் சீட்டு சலுகைக்கான கூடுதல் பொறுப்பு மற்றும் மின் மானியங்கள் ஆகிய காரணங்களால் மானியங்கள் மற்றும் உதவித் தொகைகளுக்கான 2019-20ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டு வரவு-செலவு 2019-20ஆம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீடுகளைக் காட்டலும் 4,020.68 கோடி ரூபாய் உயர்ந்து 87,487.48 கோடி ரூபாயாக உள்ளது. 2020-21ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடு 94,099.94 கோடி ரூபாயாகும். தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்கள் மற்றும், நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்களாலும், 2021-22 ஆம் ஆண்டுக்கான செலவினம், 101,627.93 கோடி மதிப்பீட்டு ரூபாயாக உயர்ந்துள்ளது. நடைமுறையிலுள்ள திட்டச் செலவினங்களில், மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் பொறுப்புகளும் அடங்கும். அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு உதய் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மானியமான 4,563 கோடி ரூபாய், இந்நிறுவனத்தின் கடன்களுக்கான வட்டி செலுத்தும் வகையில் ஆண்டு ஒன்றுக்கு 1779 கோடி ரூபாய் மற்றும் 2021-ஆம் ஆண்டிற்கு மட்டுமேயான 4,265.56 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் செலவினம் உட்பட, 2021-22 வரையிலான ஐந்தாண்டுகளுக்கான நட்டங்களை அரசு ஏற்றுக்கொண்ட வகையிலும் அரசின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இதுபோன்ற எதிர்பாரா நிதிச் செலவினங்களும் இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டத்திற்கான மதிப்பீடுகளை தயாரித்து கணிக்கையில் கணக்கில் எடுத்துக்கொள்ளபட்டுள்ளன. இதனால், மானியங்கள் மற்றும் நிதி உதவிகள் உள்ளிட்ட இனங்களின் மதிப்பீடு 2022-23 இல் 108,74189 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶11) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.7 · ¶11 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Renovation of 250 ancient temples · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years