Rural development · dormant

Tamil Nadu Rural Transformation Project

6 budgets named it 6 year span 2,635 ₹ crore allocated 921 ₹ crore whole-project cost AIADMK / DMK governments 1 district

First announced in 2016-17 and named again in 5 later budgets, most recently 2021-22. Districts: 26.

Allocated by budget year

See it on the map → All Rural development projects →

What each budget said, year by year

2016-17 Rs.900 crores continuation AIADMK · interim

“I am glad to inform this House that due to the concerted efforts taken by this Government, the World Bank has agreed to extend Rs.900 crores financial support to the ‘Tamil Nadu Rural Transformation Project’, as a continuation of the ‘Pudhu Vazhvu Project’ to cover another 95 blocks.”
“தமிழகத்தில்‌ உள்ள 385 வட்டாரங்களுள்‌, 2005 ஆம்‌ ஆண்டு முதல்‌ 120 வட்டாரங்களில்‌ உலக வங்கி உதவியுடன்‌ செயல்படுத்தப்பட்டுவரும்‌ *புதுவாழ்வுத்‌ திட்டம்‌”, வறுமை ஒழிப்பில்‌ பன்முக அணுகுமுறையினைப்‌ பயன்படுத்துவதில்‌ ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. இத்திட்டத்தின்‌ பங்கேற்பு மதிப்பீட்டு முறையில்‌, 9.8 இலட்சம்‌ ஏழைக்‌ குடும்பங்கள்‌ வறுமையில்‌ உள்ள குடும்பங்களாகக்‌ கண்டறியப்பட்டுள்ளன. “தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம்‌* மற்றும்‌ “தேசிய கிராமப்புற வாழ்வாதாரத்‌ திட்டம்‌” ஆகியவற்றை இணைத்து, 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ புதிதாகத்‌ தொடங்கப்பட்ட 'தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்திலும்‌” இதே போன்ற அணுகுமுறையுடன்‌ மீதமுள்ள 265 வட்டாரங்களில்‌, இந்த இயக்கம்‌ மூன்று கட்டங்களாகச்‌ செயல்படுத்தப்பட உள்ளது. முதல்‌ கட்டத்தில்‌ 60 வட்டாரங்களில்‌ ஏற்கெனவே இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரசு மேற்கொண்ட சிறப்பான முயற்சிகளால்‌, மேலும்‌ 95 வட்டாரங்களில்‌ புதுவாழ்வுத்‌ திட்டத்தின்‌ தொடர்ச்சியாக, தமிழ்நாடு கிராமப்புற புதுவாழ்வுத்‌ திட்டத்தை” செயல்படுத்த, 900 கோடி ரூபாய்‌ நிதியுதவி அளிக்க உலக வங்கி முன்வந்துள்ளது என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶8) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.7 · ¶8 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.900 crores new project project cost AIADMK · revised

“The 'Tamil Nadu Rural Transformation Project' will be taken up with the World Bank assistance at a cost of Rs.900 crores in 120 Blocks.”

tnbudget_2016-17_speech_en_revised · p.6 · ¶7 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.1,000 crore new project AIADMK

“In the next phase, the World Bank assisted Tamil Nadu Rural Transformation Project (TNRTP) will be launched in 2017-2018 to cover an additional 120 blocks with an outlay of Rs.1,000 crore.”

tnbudget_2017-18_speech_en · p.9 · ¶11 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.100 crore new project AIADMK

“the Government will commence the implementation of the Tamil Nadu Rural Transformation Project (TNRTP) funded by the World Bank, in 120 blocks of 26 districts at an estimated cost of Rs.920.63 crore. This project will promote SHG led micro-enterprises at the village level and federate them to create producer companies at the block or district level to help the rural enterprises reap the benefits of economies of scale. An allocation of Rs.100 crore has been provided in the Budget Estimates 2018-2019 for this project.”
“வறுமை ஒழிப்பிற்கான இயக்கத்தினை ஒருமுகப்படுத்தி செயல்படுத்துவதற்கான முகமையாக, தமிழ்நாடு மகளிர்‌ நல மேம்பாட்டு நிறுவனம்‌ செயல்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம்‌ ஆகியவற்றுடன்‌ நிலைக்கத்தக்க வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி, ஊரக மற்றும்‌ நகர்ப்புரப்‌ பகுதிகளில்‌ வறுமையை அறவே அகற்ற வேண்டும்‌ என்பதுதான்‌ இந்த இயக்கத்தின்‌ குறிக்கோளாகும்‌. 'புதுவாழ்வு திட்டத்தின்‌” மூலம்‌, கிராம அளவில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ அமைக்கப்பட்டு, அவர்களுக்குத்‌ திறன்‌ பயிற்சியும்‌, வங்கிகள்‌ மூலம்‌ கடனுதவியும்‌ வழங்கப்பட்டுள்ளன. இந்தத்‌ திட்டத்தினால்‌ கிடைக்கப்‌ பெற்ற அனுபவத்தின்‌ அடிப்படையில்‌ அதன்‌ பயன்களை நிலைப்படுத்தும்‌ வகையில்‌, 920.63 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத்‌ திட்டத்தினை உலக வங்கி நிதியுதவியுடன்‌, 26 மாவட்டங்களில்‌ உள்ள 120 வட்டாரங்களில்‌ இந்த அரசு செயல்படுத்த உள்ளது. கிராமங்களில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ மூலமாக குறுந்தொழில்களைத்‌ தொடங்குவதற்கும்‌, அவற்றை வட்டார / மாவட்ட அளவில்‌ சீரிய முறையில்‌ ஒருங்கிணைத்து, உற்பத்தியாளர்‌ கூட்டமைப்பு நிறுவனங்களாக உருவாக்குவதற்கும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌. இதன்‌ மூலம்‌ பொருளாதார அளவின்‌ பலன்களை (Economies of Scale) சிறிய முதலீட்டில்‌ தொடங்கப்படும்‌ கிராமப்புறத்‌ தொழில்‌ நிறுவனங்களும்‌ பெற இயலும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாநிலத்தில்‌ உள்ள 265 வட்டாரங்களில்‌ “தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமும்‌”, 'தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமும்‌” செயல்படுத்தப்பட்டு வருவதால்‌, மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள அனைத்து வட்டாரங்களிலும்‌ வறுமை ஒழிப்புத்‌ திட்டங்கள்‌ செயல்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத்‌ திட்டங்களுக்கும்‌ மொத்தமாக 519.81 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶10) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.7 · ¶10 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.172 crore continuation AIADMK

“Consolidating the gains of Pudhuvazhvu Project, Tamil Nadu Rural Transformation Project has been launched in 2018-2019 with the financial support of the World Bank at an estimated total cost of Rs.918.20 crore. This project covers 3,994 village panchayats in 120 blocks of 26 districts and focuses mainly on the promotion of rural micro-enterprises. A sum of Rs.172 crore has been provided for this project for the year 2019-2020.”

tnbudget_2019-20_speech_en · p.40 · ¶69 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.163.35 crore continuation AIADMK

“The World Bank assisted Tamil Nadu Rural Transformation Project is being implemented in 120 blocks in 26 districts at a total cost of Rs.918.20 crore, focusing on promoting entrepreneurship in rural areas especially amongst women, Scheduled Tribes, Scheduled Castes and differently abled persons. A sum of Rs.163.35 crore has been provided in the Budget Estimates for 2020-21 for implementation of the project.”
“கிராமப்புற, நகர்ப்புரப்‌ பகுதிகளுக்கான வாழ்வாதார இயக்கங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம்‌ மாநிலத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும்‌, அதாவது 388 வட்டாரங்களிலும்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இந்த இயக்கத்தின்‌ கீழ்‌, 83,257 சுய உதவிக்‌ குழுக்கள்‌ உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்திற்காக, வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 450.65 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீன்‌ தயாள்‌ உபாத்தியாய கிராமப்புறத்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, மொத்தமாக 1,08,416 இளைஞர்கள்‌ 2014-15 முதல்‌ இது வரையில்‌ பயிற்சி பெற்றுள்ளனர்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ இந்த திட்டத்திற்காக 299.60 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, 28,063 இளைஞர்களுக்குப்‌ பயிற்சி வழங்கப்படும்‌. தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத்‌ திட்டம்‌ (Tamil Nadu Rural Transformation Project) 26 மாவட்டங்களில்‌ உள்ள 120 வட்டாரங்களில்‌ உலக வங்கியின்‌ நிதியுதவியுடன்‌, 918.20 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொழில்‌ முனைவோர்களை ஊரகப்பகுதிகளில்‌ ஊக்குவிப்பதற்காக, அதிலும்‌ குறிப்பாக, பெண்கள்‌, பழங்குடியினர்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகளை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்காக இத்திட்டம்‌ செயல்படுத்தப்படுகிறது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ இத்திட்டத்தைச்‌ செயல்படுத்துவதற்காக 163.35 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.44 · ¶78 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.212.69 crore continuation project cost DMK · revised

“The Tamil Nadu Rural Transformation Project will be revitalised and implemented at a total outlay of Rs.212.69 crore during 2021-22.”
“தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்‌ திட்டம்‌ புதுப்பிக்கப்பட்டு 36,218 சுய உதவிக்குழுக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 809.79 கோடி ரூபாய்‌ செலவில்‌ 2021-22 ஆம்‌ ஆண்டில்‌ செயல்படுத்தப்படும்‌. நடப்பு ஆண்டில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளின்‌ உதவியுடன்‌ 5,500 கோடி ரூபாய்‌ சிறப்பு கோவிட்‌ கடன்‌ உட்பட 20,000 கோடி ரூபாய்‌ கடன்‌ உறுதிசெய்யப்படும்‌. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்‌ திட்டம்‌ சீரமைக்கப்பட்டு 2021-22 ஆம்‌ ஆண்டில்‌ மொத்தம்‌ 212.69 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்படும்‌. நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.31 · ¶68 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.300 crore continuation AIADMK · interim

“The Tamil Nadu Rural Transformation Project assisted by the World Bank was very effectively leveraged in 2020-21 to deliver a COVID Assistance Package worth Rs.300 crore. So far, 2,53,457 beneficiaries have already been assisted.”

tnbudget_2021-22_speech_en_interim · p.45 · ¶71 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector