Fisheries · completed claimed
Twelve Fish Landing Centres
First announced in 2011-12 and named again in 5 later budgets, most recently 2021-22. Districts: coastal, cuddalore, nagapattinam. Places named: Nagapattinam, Nagore, Cuddalore, Thoothukudi.
Allocated by budget year
Located at Nagapattinam · Nagapattinam district
See it on the map → All Fisheries projects →
What each budget said, year by year
2011-12 ` 74 crores
“Twelve new Fish Landing Centres in seven coastal districts have been taken up at a cost of ` 74 crores.”
“மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்துவதையும் மீனவர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதையும், இந்த அரசு முன்னுரிமைத் திட்டங்களாகக் கருதுகிறது. மாநிலத்தின் மொத்த கடல்மீன் உற்பத்தி செய்யக்கூடிய திறன் 7 இலட்சம் டன் ஆகும். ஆனால் 4.04 இலட்சம் டன் உற்பத்தியை மட்டுமே நாம் எட்டியுள்ளோம். அதேபோல் மாநிலத்தின் உள்நாட்டு மொத்த மீன்உற்பத்தி செய்யும் திறனான 4.5 இலட்சம் டன் ஆக இருந்தாலும், 1.71 இலட்சம் டன் உற்பத்தியை மட்டுமே தமிழ்நாடு அடைந்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு ஏற்ற படகுகளை நிறுத்தி வைக்கும் வசதி போதுமானதாக இல்லாததும், பதப்படுத்துதல், சேமிப்பு, சந்தை வசதிகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவையும் மீன் உற்பத்தியை அதிகரிப்பதில் தடைகளாக உள்ளன. உலக வங்கியின் சுனாமி மறுசீரமைப்புத் திட்ட நிதியிலிருந்து, 35.65 கோடி ரூபாய் செலவில் நாகப்பட்டினத்திலும், 27.56 கோடி ரூபாய் செலவில் பழையாற்றிலும் நவீன மீன்பிடி துறைமுகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 75 கோடி ரூபாய் செலவில் பூம்புகாரிலும், 60 கோடி ரூபாய் செலவில் இராமேஸ்வரத்திற்குத் தெற்கிலுள்ள மூக்கையூரிலும் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க மத்திய அரசிடமிருந்து நிதி உதவி கோரப்பட்டுள்ளது. இதுதவிர 7 கடலோர மாவட்டங்களில், 12 புதிய மீன் இறங்கு தளங்கள் 74 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.23 · ¶35 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.102.75 crores
“long pending projects at a cost of Rs.102.75 crores for improving the infrastructure at Nagapattinam and Pazhayar fishing harbours, new fish landing centres at Nagore and Thirumullaivasal in Nagapattinam District and Annankoil in Cuddalore District have finally been commenced by this Government.”
“மீன்களை சுகாதாரமான முறையில் கையாளவும், பதப்படுத்தவும் தேவையான வசதிகளை உருவாக்க, நீண்டகாலமாக நிலுவையிலிருந்த நாகப்பட்டினம், பழையாறு ஆகிய மீன்பிடித் துறைமுகங்களில் உள்ள கட்டமைப்பை மேம்படுத்தவும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அன்னன்கோயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், திருமுல்லைவாசல் ஆகிய இடங்களில் புதிய மீன் இறங்குதளம் அமைக்கவும், 102.75 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை இந்த அரசு தற்போது தொடங்கியுள்ளது. சென்னை மீன்பிடித் துறைமுகத்தை நவீனமயமாக்க, 16 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. 2012-2013 ஆம் ஆண்டில் தேசிய மீன் வள மேம்பாட்டு வாரியத்தின் உதவியோடு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலூர் மீன்பிடித் துறைமுகத்தைத் தரம் உயர்த்தவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னமுட்டம் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களின் மேம்பாட்டுப் பணிகளும் 2012-2013 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும். மேலும், நபார்டு வங்கி நிதியுதவியுடன் 50 கோடி ரூபாய் செலவில் ஒன்பது மீன் இறங்கு தளங்கள் மேம்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.27 · ¶42 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.245 crores
“Works relating to 23 fish landing centres and 4 fishing harbours at a total cost of Rs.245 crores are in progress. Fishing harbours are being upgraded at Cuddalore, Pazhayar, Nagapattinam and Thoothukudi.” financedept_2013-14_speech_en · p.22 · ¶51 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.152 crore
“A new Fishing Harbour at Poompuhar at a cost of Rs.78.50 crore and 23 Fish Landing Centres at a total cost of Rs.152 crore are being constructed.”
“கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள மீன்பிடிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், பழையாறு, நாகப்பட்டினம், தூத்துக்குடி, சின்னமுட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடித் துறைமுகங்கள், மொத்தம் 264.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. பூம்புகாரில் 78.50 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடித் துறைமுகமும், 152 கோடி ரூபாய் மொத்த செலவில் பல்வேறு இடங்களில் 23 மீன் இறங்கு தளங்களும் கட்டப்பட்டு வருகின்றன. 2014-2015 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகம் 60 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். அத்துடன், தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரம் 18 கோடி ரூபாய் செலவில் நிலைப்படுத்தப்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தவாறு இராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்தும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶38) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.21 · ¶38 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,100 crores
“Since May 2011, this Government has provided more than Rs.1,100 crores for developing such infrastructure.”
“மீன்பிடி துறைமுகங்கள், இறங்கு தளங்கள், பதப்படுத்தும் பூங்காக்கள், உள்நாட்டு உற்பத்தி வசதிகள் மற்றும் விற்பனை வசதிகள் போன்ற மீன்வளத் துறைக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இத்தகைய கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, 1100 கோடி ரூபாய்க்கும் மேலாக இந்த அரசு நிதியை வழங்கியுள்ளது. சூரை மீன்பிடி தூண்டில் படகுகளைப் பயன்படுத்தி ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் 51.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த அரசு தொடங்கியுள்ள திட்டம், மீனவர்களுக்கு கணிசமான வருவாயினை ஈட்டுவதற்கும், மாநிலத்தின் ஆழ்கடல் மீன்பிடித் திறனை வளர்ப்பதற்கும் உதவும். மீன்வளத் துறைக்காக தனிப் பல்கலைக்கழகத்தை நிறுவியதோடு, நாகப்பட்டினத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரியையும், பொன்னேரியில் மீன்வள ஆராய்ச்சி மையத்தையும் இந்த அரசு புதிதாக அமைத்துள்ளது. ன்படி, வரவு-செலவுத் திட்ட அறிக்கையுடன் இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் குறித்த அறிக்கை ஒன்றையும் மாநில அரசு சட்டப் பேரவையில் வைக்க வேண்டும். இச்சட்டத்தின், பிரிவு 3(2) ன்படி, வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை போன்ற நிதி நிலைக் குறியீடுகளுக்கான இலக்குகளை வரும் ஆண்டுகளுக்குக் குறிப்பிட்டும், அதற்கான அனுமானங்களைத் தெளிவாக விளக்கியும் இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின்படி, வரும் ஆண்டு மற்றும் 2017-2018 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்படுகிறது. நோக்கங்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சமச்சீரான வளர்ச்சி பெற்று, ஏழைகள், நலிவடைந்த பிரிவினர் ஆகியோரும் மாநில வளர்ச்சியில் பங்கேற்கும் வகையில் உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தத் தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்கி, உயர் பொருளாதார வளர்ச்சியை அடையும் வகையில் இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், கல்வி உதவித் தொகைகள் போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் சாலைகள், நீர்ப்பாசனம் மற்றும் மின்திட்டங்கள் போன்ற மூலதனச் செலவுகளுக்கு இந்த அரசு அதிக அளவில் செலவிட்டு வருகிறது. இவற்றுடன், தொடர்ந்து உயர்ந்துவரும் அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, புதிய பணியிடங்கள் தோற்றுவிப்பு மற்றும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற நிருவாகச் செலவினங்களுக்கான நிதித் தேவைகளையும் மாநில அரசு நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அதே வேளையில், பதினான்காவது நிதி ஆணையம் வகுத்துள்ள இலக்குகளுக்குட்பட்டு நிதிநிலை உறுதித்தன்மையை அடையவும் அரசு உறுதியாக உள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை அளவை கட்டுப்படுத்துதல், 2017-2018 ஆம் ஆண்டினைத் தவிர்த்து ஏனைய ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துதல் மற்றும் பதினான்காவது நிதி ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பிற்குள் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் அளவு சதவீதத்தை பராமரித்தல் முதலான நிதிநிலை இலக்குகள் 2016-2019 ஆண்டு காலத்திலும், அதனைத் தொடர்ந்தும் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டமானது உறுதி செய்கிறது. எதிர்காலக் கணிப்புகள் 2016-2017 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி பதினான்காவது நிதி ஆணையம் மதிப்பிட்ட அளவிலேயே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய போக்குகளின் அடிப்படையில், 2016-2017 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் மேலும் உயரும் எனவும், பண வீக்கம் மிதமான அளவில் இருக்குமெனவும் கணிக்கப்பட்டுள்ளது. |. வருவாய்க் கணக்கு வரவுகள் மத்திய அரசின் நிதி உதவி உள்ளிட்ட மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.152,004.23 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய்க் கணக்கு வரவுகளின் முக்கியக் கூறுகள் மற்றும் அவற்றின் வளர்ச்சி போக்குகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.22 · ¶30 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.209.25 crores
“Further, an amount of Rs.209.25 crores has been provided in this Revised Budget for developing fish landing facilities.” tnbudget_2016-17_speech_en_revised · p.26 · ¶48 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.433.97 crore
“A total sum of Rs.433.97 crore has been allocated for construction of fishing harbours and fish landing centres in the Revised Budget Estimates for 2021-22 and Rs.143.46 crore has been allocated for improvement to fish landing facilities.”
“தரங்கம்பாடி, திருவொற்றியூர், அழகன்குப்பம் மற்றும் ஆற்காட்டுத்துறையில் மீன்பிடிதி துறைமுகத் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை விரைந்து நிறைவு செய்யப்படும். புதிதாக 6 இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை அமைக்க மொத்தம் 6.25 கோடி ரூபாய் செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்துடன் இணைந்து, சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மொத்தம் 150 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களை அமைக்க மொத்தம் 433.97 கோடி ரூபாயும், மீன் இறங்கு தளங்களை மேம்படுத்த 143.46 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் நலனுக்காக ஒட்டுமொத்தமாக 1,149.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶52) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.24 · ¶52 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.1,374.64 crore
“Sanctions have been accorded for taking up 43 new fishing harbours, fish landing centres and associated infrastructure at a total cost of Rs.1,374.64 crore.” tnbudget_2021-22_speech_en_interim · p.34 · ¶52 · source PDF ↗ · on the map →
Linked projects
- Fisheries infrastructure development 2017-18 · sibling
- Fish landing centres and net mending facilities · sibling
- Fish landing centre at Kunthukal · sibling
- Nine fish landing centres along the coast · sibling
- Fishing harbour at Arcottuthurai · sibling
- Modernised fish landing centre, Mudasalodai · sibling
- Fish landing centres at four locations in Kanniyakumari · sibling
- New fishing harbours surveys · sibling
Nearby in the same sector
- VHF communication network for fishing crafts · 2 years · shares a district
- Fishing harbours at Vellapallam and Tarangambadi · 2 years · shares a district
- Modernised fish landing centre, Mudasalodai · 1 year · shares a district
- New fishing harbours at Colachel, Thengapattinam, Chinna Muttam and Poompuhar · 1 year · shares a district
- Fishing harbour at Arcottuthurai · 1 year · shares a district
- Fishing ban period relief assistance · 7 years