Other · dormant
Vision 2023 (Volume II) infrastructure programme
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2013-14 and not named in any budget since.
See it on the map → All Other projects →
What each budget said, year by year
2013-14 Rs.15 lakh crores
“The Vision 2023 Document envisages a total investment of Rs.15 lakh crores during the next ten years.”
“பொருளாதாரத்தில் உயர் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பல முக்கியக் கட்டமைப்புத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடுகள் செய்வதற்கு, இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கும். இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களின் கால அளவை மனதில் கொண்டு, செயல்படுத்தத்தக்க, முக்கியக் கட்டமைப்புத் திட்டங்களின் தொகுப்பைக் கொண்டுள்ள தொலைநோக்குத் திட்டம் 2023-ன் இரண்டாவது பகுதிக்கு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் முதல் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில், 15 இலட்சம் கோடி ரூபாய் அளவிலான மொத்த முதலீடுகள் பெறுவதை தொலைநோக்குத் திட்டம் 2023 இலக்காகக் கொண்டுள்ளது. வேளாண்மை மற்றும் பாசனத் துறையில் 127,250 கோடி ரூபாயும், நகர்ப்புர கட்டமைப்புத் துறையில் 2,59,000 கோடி ரூபாயும் போக்குவரத்து மற்றும் சாலைத் துறையில் 3,65,927 கோடி ரூபாயும், மனித ஆற்றல் மேம்பாட்டிற்காக 60,120 கோடி ரூபாயும் இதனுள் அடங்கும். 2023 ஆம் ஆண்டு வாக்கில் கட்டமைப்புத் துறையில் 60 சதவீத முதலீடு, தனியார் துறையிடமிருந்து பெறப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் வேகமான கட்டமைப்பு வளர்ச்சிக்கான, தெளிவான கொள்கை மற்றும் நடைமுறை அமைப்பினை ஏற்படுத்தும் நோக்குடன் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகளில் ஒளிவுமறைவின்மை (பொதுத் துறை தனியார் துறை பங்கேற்புக் கொள்முதல்) விதிகளோடு, தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு சட்டம், விதிகள் மற்றும் வரைமுறைகள் நடப்பு ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளன. 2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக 2,000 கோடி ரூபாயும், திட்ட வடிவமைப்பு நிதிக்காக 200 கோடி ரூபாயும் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளன. முதன்மைத் துறை வேளாண்மை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶27) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.12 · ¶27 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Infrastructure Development Board and Vision 2025 · 4 years
- Infrastructure Development Fund · 3 years
- Project Preparation Fund · 3 years
- Local Body elections · 3 years
- Revenue Department office buildings · 3 years
- Tamil Nadu Infrastructure Fund (AIF-I via TNIFMC) · 2 years