Industry · dormant
Aerospace Park, Vallam Vadagal
3 budgets named it 3 year span — ₹ crore allocated 350 ₹ crore whole-project cost AIADMK government 1 district
First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2018-19. Districts: kancheepuram. Places named: Kanchipuram.
Allocated by budget year
Located at Kanchipuram · Kancheepuram district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2016-17
“Approval has also been granted for the implementation of an aerospace park in an area of about 250 acres in SIPCOT Industrial Park at Vallam Vadagal in Sriperumbudur Taluk.”
“சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், பொன்னேரி தொழில் முனையத்தை தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலமாக (NIMZ) மேம்படுத்துவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO), சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் சுமார் 306 ஏக்கர் பரப்பளவில் பாலிமர் தொழிற் பூங்காவினை 294 கோடி ரூபாய் செலவில் அமைத்து வருகிறது. இப்பூங்காவில், சிறு மற்றும் நடுத்தர பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் 84 அலகுகள் இடம் பெறும். ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வல்லம் வடகாலில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் வான்வெளிப் பூங்கா (Aerospace Park) அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வானூர்தி வடிவமைப்பு, வானூர்திகளுக்கான உதிரிப் பாகங்கள் தயாரிப்பு, பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் வசதிகளுடன் இப்பூங்கா செயல்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.41 · ¶79 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.350 crore
“An Aerospace Park is being established on 268 acres of land in Vallam-Vadagal SIPCOT Industrial Estate, Kancheepuram at an estimated project cost of Rs.350 crore for advanced computing and design engineering centre for manufacturing aerospace components and providing maintenance and repair services.”
“காஞ்சிபுரம் மாவட்டத்தில், வல்லம்-வடகால் சிப்காட் தொழிற்பேட்டையில், 268 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் வானூர்தி பூங்காவில் 350 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வானூர்திகளுக்கான உயர் கணினிப் பொறியியல் மற்றும் வடிவமைப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் 264 கோடி ரூபாய் முதலீட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திப் பூங்கா ஒன்றினை சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் உருவாக்கி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 130 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவப் பூங்காவினை உருவாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முக்கிய பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அதன் இரண்டாவது அலகின் திறனை 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் அதிகரிக்க உள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தொழில் துறைக்காக 2,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶77) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.43 · ¶77 · source PDF ↗ · on the map →
2018-19
“Aero Space Park at Vallam Vadagal in Kancheepuram district”
“புதிய தொழில் அலகுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 5,023 ஏக்கர் அளவிலான நில வங்கியினை சிப்காட் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. புதிய முதலீட்டாளர்களுக்குப் போதுமான நிலத்தினை ஒதுக்கீடு செய்வதற்கு, கூடுதலாக 9,030 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் நிறுவனம் நில வங்கியை விரிவுபடுத்தும். சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் மற்றும் மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடத் திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் தொழில் மேம்பாட்டிற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும். தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில் வானூர்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டைசல் உயிர்ப் பூங்கா, பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழிற்பூங்கா மற்றும் செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா அமைக்க சிறப்பு முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. வளர்ச்சியடைந்த வாகன தயாரிப்புத் துறையினை அடித்தளமாகக் கொண்டு, வானூர்திப் பூங்கா மற்றும் பாதுகாப்பு உபகரண உற்பத்திக்கான தொழில் வழித்தடத்தையும் அமைக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இதன் மூலம், 10,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.42 · ¶68 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Aero Space Park and defense manufacturing corridor · 2018-19 –2021-22
- part of Industrial parks / investment initiatives · 2018-19
Nearby in the same sector
- MSME Cluster Development Programme · 4 years · shares a district
- Medi Park Project · 3 years · shares a district
- SIPCOT Skill Development Centres · 1 year · shares a district
- Industrial parks / investment initiatives · 1 year · shares a district
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years