Agriculture · dormant
Agricultural markets infrastructure integration
2 budgets named it 4 year span — ₹ crore allocated 15 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2013-14 and named again in 1 later budget, most recently 2016-17.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2013-14 Rs.15 crores
“Infrastructure facilities would be upgraded in select agricultural markets and they will be functionally integrated at a cost of Rs.15 crores using the NADP funds.”
“தேவையான சேமிப்பு வசதிகள், சந்தை நிலவரம் பற்றிய தகவல்கள் பரிமாற்றம், ச்தைகளை அடைவதற்கு உரிய போக்குவரத்து வசதிகள் ஆகியன இல்லாததால், தமது விளைபொருட்களை விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்க நேரிடுகிறது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், 15 கோடி ரூபாய் செலவில் குறிப்பிட்ட வேளாண் சந்தைகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு,) அவற்றின் செயல்பாடு ஒருங்கிணைக்கப்படும். மேலும், எம்.சி.எக்ஸ் (MCX) மற்றும் என்.சி.டெக்ஸ் (NCDEX) போன்ற பொருட் சந்தைகளோடும் (commodity exchange) இவை இணைக்கப்படும். இம்முயற்சிகள் பொருட்சேதத்தைக் குறைப்பதோடு, சந்தை நிலவரம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் உதவும். சேமிப்புக் கிடங்கு வசதிகளை அதிகரிப்பதற்கான இந்த அரசின் முயற்சிகளும் தொடரும். அறுவடைக்குப் பின் வேளாண் விளைபொருட்களைக் கையாண்டு பதப்படுத்தும் வசதிகளை வலுப்படுத்தும் முயற்சி வேளாண் விளைபொருட்களின் விலையை, குறிப்பாக, கெட்டுப்போகக்கூடிய விளைபொருட்களின் விலையை நிலைப்படுத்தும் தேசிய உணவு பதப்படுத்தும் இயக்கத்தில் (National Mission for Food Processing), வேளாண் விளைபொருள் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவநிலை - பாதிப்பால் ஏற்படும் இழப்பைக் குறைத்தல்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.16 · ¶35 · source PDF ↗ · on the map →
2016-17
“As a major initiative, this Government is formulating a project for upgrading and integrating the agricultural markets and linking them with commodity markets with sufficient financial support.”
“வேளாண் சந்தைகளை மேம்படுத்தி, தேசிய அளவில் விளைபொருட்களுக்கான சந்தைகளுடன் ஒருங்கிணைக்கும் வகையில், போதுமான நிதியுதவியுடன் செயல்படுத்த, ஒரு திட்டத்தை இந்த அரசு வடிவமைத்து வருகிறது. இது வேளாண்மைத் துறையில் ஒரு மாபெரும் முயற்சியாக அமையும். வேளாண் பொருட்களுக்கான சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்த, தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம் (Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act) 1987-ல் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶38) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.22 · ¶38 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Market infrastructure in 38 markets (e-trading/eNAM) · 2018-19
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years