Environment · dormant

Biodiversity Conservation and Greening Project

8 budgets named it 8 year span 2,005 ₹ crore allocated 686 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2011-12 and named again in 7 later budgets, most recently 2018-19.

Allocated by budget year

See it on the map → All Environment projects →

What each budget said, year by year

2011-12 ` 686 crores new project AIADMK · revised

“the Biodiversity conservation and Greening project with Japanese assistance with an outlay of ```` 686 crores will be started during 2011-2012.”
“தமிழ்நாட்டின்‌ மொத்த நிலப்பரப்பில்‌ 21.76 விழுக்காடு காடுகள்‌, மரங்கள்‌ உள்ள பகுதிகளாக உள்ளன. மாநிலத்தின்‌ நிலப்பரப்பில்‌ 33 விழுக்காடு வனப்பகுதியாக இருக்க வேண்டும்‌ என்ற இலக்கை அடையவேண்டும்‌ என்பது தேசிய வனக்‌ கொள்கையாகும்‌. எனவே, வனத்துறை, தனியார்‌ நிலங்களில்‌ மரங்கள்‌ வளர்க்கும்‌ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ 121500 ஏக்கர்‌ தனியார்‌ நிலங்களில்‌ 43.74 கோடி ரூபாய்‌ செலவில்‌ 3 கோடி மரக்‌ கன்றுகள்‌ நடப்பட்டுள்ளன. இதனால்‌ 71454 விவசாயிகள்‌ பயனடைந்துள்ளனர்‌. இத்திட்டம்‌ 2011-2012 ஆம்‌ ஆண்டிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. தமிழ்நாடு காடு வளர்ப்புத்‌ திட்டம்‌-இரண்டாம்‌ கட்டப்பணிகளின்‌ (Tamil Nadu Afforestation Project Il) தொடர்ச்சியாக, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ ஜப்பானிய உதவியுடன்‌ 686 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பல்லுயிரினப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமைத்‌ திட்டம்‌ (Biodiversity Conservation and Greening Project) தொடங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.28 · ¶45 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2011-12 ` 686 crores new project project cost DMK · interim

“The Tamil Nadu Forest Department is taking action to implement “Tamil Nadu Bio Diversity Conservation and Greening Project” with the assistance of Japan International Co operation Agency at a cost of ` 686 crores during the period from 2011-2012 to 2018-2019. For this scheme ` 38.14 crores has been allocated in the year 2011-2012.”

tnbudget_2011-12_speech_en_interim · p.14 · ¶33 · source PDF ↗ · on the map →

2012-13 Rs.50 crores continuation AIADMK

“This Government has launched the Japan International Co- operation Agency (JICA) aided Tamil Nadu Bio-diversity Conservation and Greening Project with an outlay of Rs.686 crores in the current year. This project, which will continue till 2018-2019, focuses on bio-diversity conservation through protection of forest and socio economic development of people living in the forest fringe areas and tribal communities. Rs.50 crores has been allocated for this project for the coming financial year.”
“நமது மாநிலத்தில்‌, அருகிவரும்‌ வனவிலங்குகளின்‌ எண்ணிக்கையும்‌, வனப்‌ பரப்பும்‌ அதிகரித்து வருகின்றன என்ற செய்தியை மகிழ்ச்சியுடன்‌ தெரிவிக்க விரும்புகிறேன்‌. இந்த ஆண்டு ஜப்பான்‌ பன்னாட்டு கூட்டுறவு முகமையின்‌ உதவியோடு தமிழ்நாடு பல்லுயிரினப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமைத்‌ திட்டத்தை 686 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்த இந்த அரசால்‌ பணிகள்‌ தொடங்கப்பட்டுள்ளன. 2018-2019 ஆம்‌ ஆண்டுவரை செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம்‌, வனங்களை பாதுகாத்தல்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ காடுகளையொட்டி இருக்கும்‌ பகுதிகளில்‌ வசிப்போரின்‌ சமூகப்‌ பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின்‌ வாயிலாக பல்லுயிரினங்களைப்‌ பாதுகாப்பதில்‌ கவனம்‌ செலுத்தும்‌. வரும்‌ நிதியாண்டில்‌, இத்திட்டத்திற்காக 50 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமைப்‌ பரப்பை அதிகரிக்கும்‌ நோக்கோடு, நமது மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ பிறந்த நாளையொட்டி, 29.44 கோடி ரூபாய்‌ செலவில்‌ 64 லட்சம்‌ மரக்‌ கன்றுகளை நடும்‌ பெரும்‌ திட்டம்‌ ஒன்றை இந்த அரசு தொடங்கியுள்ளது. இதுவரை 32.9 லட்சம்‌ மரக்‌ கன்றுகள்‌ நடப்பட்டுள்ளன. இது தவிர, வரும்‌ நிதியாண்டில்‌, 10,000 ஏக்கர்‌ பரப்பிலான ஏரிப்‌ பகுதிகளில்‌ 9.80 கோடி ரூபாய்‌ செலவில்‌ வனத்துறை மரங்களை நட்டு பராமரிக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶49) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.32 · ¶49 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.50 crores continuation AIADMK

“The Japanese International Co-operation Agency (JICA) aided Tamil Nadu Bio-diversity Conservation and Greening Project will be continued in 2013-2014 and Rs.50 crores has been allocated for this scheme.”

financedept_2013-14_speech_en · p.27 · ¶65 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.119 crore continuation AIADMK

“The Tamil Nadu Biodiversity Conservation and Greening Project is being implemented at a total cost of Rs.686 crore. For the year 2014-2015, a sum of Rs.119 crore has been allocated for this scheme.”
“'தமிழ்நாடு பல்லுயிரினப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமைத்‌ திட்டம்‌' 686 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்திற்காக 119 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனப்‌ பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌ இரண்டாவது கட்டத்தில்‌ மேற்கொள்ளப்பட்ட வனப்‌ பாதுகாப்பு நடவடிக்கைகளின்‌ பயனை நிலைக்கச்‌ செய்யும்‌ வகையில்‌, 52.11 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான இரண்டாண்டுத்‌ திட்டம்‌ ஒன்றையும்‌, 2013-2014 ஆம்‌ ஆண்டிலிருந்து இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 28.25 கோடி ரூபாய்‌ செலவில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶46) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.24 · ¶46 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.122.68 crores continuation AIADMK

“During 2014-2015, the Tamil Nadu Biodiversity Conservation and Greening Project has been implemented with an outlay of Rs.115.91 crores. This scheme will be continued during 2015-2016 with an allocation of Rs.122.68 crores.”
“மாநிலத்தின்‌ பசுமைப்‌ பரப்பை அதிகரிக்கவும்‌, காடு வளர்ப்புப்‌ பணிகளில்‌ சமுதாயத்தின்‌ பங்களிப்பை உறுதி செய்யவும்‌, ஐப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு வங்கி உதவியுடன்‌ செயல்படுத்தப்பட்டுவரும்‌ 'தமிழ்நாடு பல்லுயிரினப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமைத்‌ திட்டம்‌”, நபார்டு கடனுதவியுடன்‌ செயல்படுத்தப்பட்டுவரும்‌ நீர்ப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமை மேம்பாட்டுத்‌ திட்டம்‌”, மரம்‌ நடும்‌ மாபெரும்‌ திட்டம்‌, தனியார்‌ நிலங்களில்‌ மரம்‌ வளர்க்கும்‌ திட்டம்‌ போன்ற பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு பல்லுயிரினப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமைத்‌ திட்டம்‌ 115.91 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்பட்டது. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 122.68 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ இத்திட்டம்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. நீர்ப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமை மேம்பாட்டுத்‌ திட்டத்திற்காக, 96.50 கோடி ரூபாய்‌ நபார்டு வங்கி நிதியுதவி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும்‌, 2012 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ முதல்‌ இதுவரை மரம்‌ நடும்‌ மாபெரும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 122.17 கோடி ரூபாய்‌ செலவில்‌ 195 இலட்சம்‌ மரக்‌ கன்றுகள்‌ நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டும்‌, 53.72 கோடி ரூபாய்‌ செலவில்‌ 67 இலட்சம்‌ மரக்‌ கன்றுகள்‌ நடுவதற்கு அரசு ஒப்புதல்‌ அளித்துள்ளது. வனப்‌ பகுதிகளின்‌ மேம்பாட்டிற்காக பதின்மூன்றாவது நிதி ஆணையம்‌ வழங்கிய 142.48 கோடி ரூபாய்‌ மானியத்தையும்‌ இந்த அரசு முறையாகப்‌ பயன்படுத்தியுள்ளது. விலங்குகளினால்‌ மனிதர்களுக்கு ஏற்படும்‌ பாதிப்புகளைக்‌ குறைப்பதற்கு சிறப்பு கவனம்‌ அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 51.65 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 54.50 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள சூரிய ஒளி மின்‌ வேலிகளும்‌, 168.19 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள யானை புகா அகழிகளும்‌ அமைக்கப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.27 · ¶42 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.686 crores continuation project cost AIADMK · interim

“The ‘Tamil Nadu Bio-diversity Conservation and Greening Project’ being implemented with Japan International Co-operation Agency (JICA) assistance at an outlay of Rs.686 crores since 2011-2012 will continue till 2018-2019.”
“வன விலங்குகளைப்‌ பாதுகாப்பதிலும்‌, வன ஆதாரங்களை மேம்படுத்துவதிலும்‌, பாதுகாக்கப்பட்ட பகுதிகளின்‌ மேலாண்மையிலும்‌ தமிழகம்‌ ஒரு முன்னோடி மாநிலமாகத்‌ திகழ்ந்து வருகிறது. ஜப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு முகமையின்‌ உதவியுடன்‌ 686 கோடி ரூபாய்‌ செலவில்‌, 2011-2012 ஆம்‌ ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு பல்லுயிரினப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமைத்‌ திட்டம்‌” 2018-2019 ஆம்‌ ஆண்டு வரை தொடந்து செயல்படுத்தப்படும்‌. இதுவரை, இத்திட்டத்திற்காக 286 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. மேலும்‌ நபார்டு வங்கி நிதியுதவியுடன்‌, 85,000 ஹெக்டேர்‌ நிலப்‌ பரப்பில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “நீர்ப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமை மேம்பாட்டுத்‌ திட்டத்திற்காக' 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வன விலங்குகளால்‌ மனிதர்களுக்கு ஏற்படும்‌ ஆபத்தைத்‌ தவிர்க்க தடுப்புகளை அமைத்தும்‌, சிறப்புக்‌ குழுக்களை உருவாக்கியும்‌ இந்த அரசு சிறப்பான முயற்சிகளை எடுத்துள்ளது. வன விலங்குகளால்‌ பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும்‌ இழப்பீட்டுத்‌ தொகையை இந்த அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ வனத்‌ துறைக்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 677.93 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நீர்வள ஆதாரங்கள்‌ மற்றும்‌ பாசனம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶33) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.24 · ¶33 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.109.51 crores continuation AIADMK · revised

“An expenditure of Rs.339.18 crores has been incurred under the Japan International Co-operation Agency (JICA) assisted 'Tamil Nadu Bio-diversity Conservation and Greening Project' from 2011-2012 to 2015-2016. An amount of Rs.109.51 crores has been provided for this scheme in the Revised Budget Estimates.”

tnbudget_2016-17_speech_en_revised · p.27 · ¶50 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.398 crore continuation AIADMK

“Under the Japan International Cooperation Agency (JICA) assisted ‘Tamil Nadu Biodiversity Conservation and Greening Project’, the Government is undertaking biodiversity conservation activities at a project cost of Rs.686 crore for forest protection and socio-economic development of tribal and other communities living in forest fringe villages. An expenditure of Rs.398 crore has been incurred so far on the project and Rs.88 crore has been allocated for this project in the Budget Estimates 2017-2018.”

tnbudget_2017-18_speech_en · p.28 · ¶47 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.469.40 crore continuation AIADMK

“The State Government is undertaking various activities at a cost of Rs.686 crore under the 'Tamil Nadu Biodiversity Conservation and Greening Project' for conserving biodiversity and uplifting the people living in villages on the fringes of forests. So far, Rs.469.40 crore has been spent for activities and Rs.86.57 crore has been provided in the Budget Estimates for 2018-2019.”
“பல்லுயிரினப்‌ பாதுகாப்பு மற்றும்‌ வனங்களுக்கு அருகில்‌ உள்ள கிராமங்களில்‌ வசிக்கும்‌ மக்களின்‌ மேம்பாட்டிற்காக, 686 கோடி ரூபாய்‌ செலவில்‌ பல்வேறு நடவடிக்கைகளை, தமிழ்நாடு பல்லுயிரினப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமைத்‌ திட்டத்தின்‌” கீழ்‌ அரசு எடுத்து வருகிறது. இத்திட்டத்திற்காக இதுவரை 469.40 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளதுடன்‌, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 86.57 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள்‌ முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ 70 வது பிறந்தநாள்‌ நினைவாக, பாரதப்‌ பிரதமர்‌ அவர்களால்‌ 24.02.2018 அன்று மரம்‌ நடும்‌ மாபெரும்‌ விழா தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில்‌ மர அடர்த்தி குறைவாக உள்ள காப்புக்‌ காடுகளின்‌ பகுதிகளைப்‌ புதுப்பித்து, அப்பகுதிகளை அடர்ந்த காடுகளாக மாற்ற, 7,000 ஏக்கர்‌ பரப்பளவில்‌ மரம்‌ நடும்‌ பணிகள்‌ 21.43 கோடி ரூபாய்‌ செலவில்‌ வரும்‌ நிதியாண்டில்‌ இந்த அரசால்‌ மேற்கொள்ளப்படும்‌. இத்திட்டத்தின்‌ ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ (MGNREGS), அரசு பொது நிலங்கள்‌ மற்றும்‌ ஏரிக்கரைகளில்‌ மரம்‌ நடும்‌ பணிகள்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.29 · ¶43 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector