Water supply · dormant

Chennai waterways sewage prevention

3 budgets named it 10 year span ₹ crore allocated 2,371 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2012-13 and named again in 2 later budgets, most recently 2021-22. Places named: Chennai.

Allocated by budget year

Located at Chennai · Chennai district

See it on the map → All Water supply projects →

What each budget said, year by year

2012-13 Rs.300 crores new project project cost AIADMK

“It is proposed to plug 337 outlets to prevent untreated sewage from entering into the Chennai City waterways and to treat this sewage before letting it out, at a cost of Rs.300 crores.”
“நகர்ப்புரங்களில்‌ பெருமளவு அதிகரித்துவரும்‌ குடிநீர்‌ தேவை, தூய்மையான நீர்‌ ஆதாரங்களின்‌ மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, நீர்‌ ஆதாரங்களை நீட்டித்து நிலைக்கக்கூடிய வகையில்‌ பராமரிக்க, தூய்மையான நீரை பாதுகாக்க நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால்‌ மட்டுமே முடியும்‌. இந்த அரசு கழிவு நீரை மறுசுழற்சி செய்து குடிநீர்‌ அல்லாத பிற பயன்பாட்டிற்குப்‌ பயன்படுத்துவதை ஒரு கொள்கையாக ஊக்குவிக்கும்‌. நாள்‌ ஒன்றுக்கு நாற்பத்தைந்து மில்லியன்‌ லிட்டர்‌ கொள்ளளவுடன்‌ கூடிய எதிர்‌ சவ்வூடு பரவும்‌ முறையில்‌ (reverse 0௦85110818) சுத்திகரிப்பு செய்யத்தக்க மூன்றாம்‌ நிலை சுத்திகரிப்பு நிலையம்‌ ஒன்றினை 90 கோடி ரூபாய்‌ செலவில்‌ கோயம்பேட்டில்‌ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்று, மேலும்‌ பல திட்டங்களை அரசு-தனியார்‌ கூட்டு முயற்சி மூலம்‌ மேற்கொண்டு, கழிவுநீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளின்‌ பயன்பாட்டிற்கு அளித்திட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌. நீர்‌ ஆதாரங்கள்‌ மற்றும்‌ நீர்‌ வழிப்‌ பாதைகளில்‌ சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்‌ கலப்பதைத்‌ தடுக்க, நமது மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தீவிர கவனம்‌ செலுத்தி வருகிறார்கள்‌. சென்னை நகரில்‌ உள்ள நீர்‌ வழிப்பாதைகளில்‌ கழிவு நீர்‌ கலக்கக்‌ கூடிய 337 இடங்களில்‌, அத்தகைய கழிவு நீர்‌ ஆறுகளில்‌ கலப்பதற்கு முன்னர்‌ தடுத்து, சுத்திகரிப்பு செய்ய 300 கோடி ரூபாய்‌ செலவில்‌ திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶108) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.69 · ¶108 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.163 crore continuation project cost AIADMK

“As part of the restoration of the rivers in Chennai, work on the plugging of 179 sewage outfalls out of the identified 337 outfalls at a cost of Rs.150 crore has commenced and will be completed by 2015. Plugging the remaining 158 outfalls at a cost of Rs.163 crore will commence during 2014-2015.”
“அதிகரித்துவரும்‌ மக்கள்‌ தொகையும்‌, வேகமாக விரிவடைந்துவரும்‌ கட்டமைப்புத்‌ தேவைகளும்‌ நகர்ப்புர சுற்றுச்சூழலை பெருமளவு பாதித்துள்ளன. சென்னையில்‌ உள்ள ஆறுகளில்‌ கழிவு நீர்‌ சேரும்‌ 337 இடங்களில்‌, 179 இடங்களில்‌ அதைத்‌ தடுத்து, இந்த ஆறுகளைச்‌ சீரமைப்பதற்காக 150 கோடி ரூபாய்‌ செலவில்‌ பணிகள்‌ தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள்‌ வரும்‌ 2015-ல்‌ முடிவடையும்‌. 163 கோடி ரூபாய்‌ செலவில்‌ 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ மீதமுள்ள 158 இடங்களிலும்‌ பணிகள்‌ தொடங்கப்படும்‌. கூவம்‌ நதியை முழுமையாகச்‌ சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும்‌ திட்டம்‌ வரும்‌ நிதியாண்டில்‌ செயல்படுத்தப்படும்‌. மொத்தம்‌ 3,833.62 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான இந்தப்‌ பெரும்‌ திட்டம்‌ ஐந்து ஆண்டுகளில்‌ செயல்படுத்தப்படும்‌. பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம்‌ அளிக்கவும்‌ மறுகுடியமர்வு செய்யவும்‌ 2,077.29 கோடி ரூபாய்‌ செலவிடப்படும்‌. இத்திட்டத்தை, 'சென்னை நதிகள்‌ சீரமைப்பு அறக்கட்டளை' ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும்‌. இத்திட்டத்திற்காக 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 500 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.25 · ¶48 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.2,371 crore new project project cost DMK · revised

“The scheme to prevent outflow of sewage into waterways in Chennai will be vigorously implemented at a total cost of Rs.2,371 crore.”
“ஐப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு (முகமையின்‌ உதவியுடன்‌ நாளொன்றுக்கு 400 மில்லியன்‌ லிட்டர்‌ (400 MLD) கடல்‌ நீரைக்‌ குடிநீராக்கும்‌ திட்டம்‌ விரைவாக செயல்படுத்தப்படும்‌. சென்னை நகரத்துடன்‌ இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும்‌ மொத்தம்‌ 2,056 கோடி ரூபாய்‌ செலவில்‌ பாதாள சாக்கடைத்‌ திட்டம்‌ ஏற்படுத்தப்படும்‌. சென்னையில்‌ உள்ள நீர்வழிகளில்‌ கழிவுநீர்‌ கலப்பதைத்‌ தடுக்கும்‌ திட்டம்‌ மொத்தம்‌ 2,371 கோடி ரூபாய்‌ செலவில்‌ தீவிரமாக செயல்படுத்தப்படும்‌. ஆந்திரப்‌ பிரதேசத்திலிருந்து குழாய்‌ வழியாக கிருஷ்ணா நீரை சென்னை நீர்த்தேக்கங்களுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்‌. சென்னை நகரக்‌ கூட்டாண்மை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.35 · ¶79 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector