Agriculture · dormant
Co-operative loan waiver scheme
3 budgets named it 3 year span 2,714 ₹ crore allocated AIADMK government
First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2018-19.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2016-17 Rs.1,680.73 crores
“In the Revised Budget Estimates 2016-2017, an amount of Rs.1,680.73 crores has been provided for Co-operative loan waiver scheme.”
“தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற, ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு 31.03.2016 அன்று வரை செலுத்த வேண்டிய குறுகியகாலப் பயிர்க் கடன்கள், நடுத்தரகால மற்றும் நீண்டகால விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள். இதன்படி தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் மற்றும் வட்டி உள்ளிட்ட மொத்தத் தொகை 5,780.92 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகை திரும்பச் செலுத்தப்படும் வரையுள்ள வட்டியுடன் கூட்டுறவு வங்கிகளுக்கு ஐந்து ஆண்டுகளில் அரசால் திரும்பச் செலுத்தப்படும். இந்தத் தள்ளுபடியால் 8,35,360 குறு மற்றும் 8,58,785 சிறு விவசாயிகள் பயன் பெறுவார்கள். இந்தக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடித் திட்டத்திற்காக, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1680.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2016-2017 ஆம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 6,000 கோடி ரூபாய் புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்படும். கால்நடை பராமரிப்பு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶41) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.23 · ¶41 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.1,830.50 crore
“A sum of Rs.1,794.66 crore has been repaid during 2016-2017 and an amount of Rs.1,830.50 crore has been provided for this purpose in the Budget Estimates for 2017-2018.”
“கருணையுள்ளம் கொண்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய குறுகியகாலப் பயிர்க் கடன்களையும், நடுத்தரகால மற்றும் நீண்டகால விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளார். இதன்படி, 31.03.2016 அன்று வரை செலுத்தப்படவேண்டிய 4,893.48 கோடி ரூபாய் மூலக் கடனும், 38677 கோடி ரூபாய் வட்டித் தொகையுமாக, மொத்தம் 5,280.25 கோடி ரூபாய் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. இத்தொகையை ஐந்து கட்டங்களாக திரும்பச் செலுத்துவதால் ஏற்படும் கூடுதல் வட்டித்தொகை 760.49 கோடி ரூபாயையும் சேர்த்து, மொத்தம் 6,040.74 கோடி ரூபாய் நிதிச்சுமையை அரசு ஏற்றுள்ளது. இதனால், 12.02 இலட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இத்தொகையில், 1,794.66 கோடி ரூபாய் 2016-2017 ஆம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகளுக்கு திரும்பச் செலுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக 1,830.50 கோடி ரூபாய் 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2017-2018 ஆம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 7,000 கோடி ரூபாய் அளவிற்கு புதிய பயிர்க் கடன்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோகத் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.26 · ¶43 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.883.71 crore
“The total financial commitment of the State Government spread over five years is Rs.6,094.89 crore. Of this, Rs.3,664.76 crore has already been paid and an amount of Rs.883.71 crore has been provided in the Budget Estimates for 2018-2019.”
“சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய குறுகியகாலப் பயிர்க் கடன்கள், நடுத்தரகால மற்றும் நீண்டகால விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்ததை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவீர்கள். இந்தக் கடன் தள்ளுபடித் திட்டப்படி, 6,094.89 கோடி ரூபாய் நிலுவைக் கடனை ஐந்தாண்டுகளில் கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு ஈடுசெய்ய வேண்டும். இதில், 3,664.76 கோடி ரூபாய் ஏற்கனவே ஈடுசெய்யப்பட்ட நிலையில், 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 883.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு 8,000 கோடி ரூபாய் அளவிற்கு புதிய பயிர்க் கடன்கள் வழங்கப்படும். பொது விநியோகத் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶41) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.27 · ¶41 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Crop Loan Waiver scheme · 2021-22 –2026-27
- runs alongside Waiver of co-operative loans due from farmers · 2011-12
- runs alongside Loan waiver 2022-23 · 2022-23
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years