IT & governance · dormant
Comprehensive departmental computerisation (e-governance)
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2012-13
“this Government has decided to select the departments having high level Citizen- Government interface, for comprehensive computerisation with process re-engineering on a mission mode.”
“பொதுமக்களுக்கும், அரசுக்கும் இடையே ஏற்படக்கூடிய பரிமாற்றங்களை மேலும் எளிதாக்கவும், வெளிப்படையானதாக மாற்றிடவும், அவசியமான, பயனுள்ள கருவியாக மின்னாளுமையை இந்த அரசு கருதுகிறது. புதிய மின்னாளுமைக் கொள்கை ஒன்றை இந்த அரசு விரைவில் வெளியிடும். பல்வேறு துறைகளில் ஏற்கனவே பல கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கணினிமயமாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, பொதுமக்கள்- அரசு இடையே அதிக சேவை பரிமாற்றங்கள் உள்ள துறைகளை, சிறப்பு நோக்குத் திட்டங்கள் மூலமாக, ஒட்டுமொத்த கணினிமயமாக்கும் முறையை நடைமுறைக்குக் கொண்டுவர இந்த அரசு முடிவெடுத்துள்ளது. காவல் துறை, வணிக வரி, பொது விநியோகம், கரூஷஹூலம் ஆகிய துறைகள் இத்தகைய பணியை ஏற்கெனவே தொடங்கியுள்ளன. வருவாய், பதிவு, சமூக நலம், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, பள்ளிக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைகள், இத்தகைய முழுமையான கணினிம௰யமாக்கத்திற்கான பணிகளை விரைவில் தொடங்கும். தற்போது ஒரு சில மாவட்டங்களில் செயல்பட்டுவரும் பொதுச் சேவை மையங்களை மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். அனைத்து அரசு சார்ந்த பொதுச் சேவைகளும் மக்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் நகர்ப்புர பகுதிகளிலும் பொதுச் சேவை மையங்கள் வடிவமைக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும் மேலும், பல்வேறு துறைகளிடையே வன்பொருள் திறனளவை பங்கிட்டு பயன்படுத்தும் வகையில் 'க்ளொடு கம்ப்யூடிங்” (cloud computing) முறையையும் இந்த அரசு ஊக்குவிக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶17) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.13 · ¶17 · source PDF ↗ · on the map →
Linked projects
- Commercial Taxes Department automation · component of
- Revenue machinery computerisation and online Land Records Management System · component of
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years