Agriculture · dormant

Crop loss input subsidy relief

1 budget named it 1 year span 2,247 ₹ crore allocated AIADMK government

First announced in 2017-18 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2017-18 Rs.2,247 crore transfer scheme AIADMK

“Input subsidy relief totaling Rs.2,247 crore has been sanctioned and is being released directly to the farmers’ bank accounts.”
“சென்னை, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ பேரழிவை ஏற்படுத்திய வர்தா” புயலால்‌ ஏற்பட்ட பாதிப்புகளைச்‌ சரி செய்வதற்காகவும்‌, மறுசிரமைப்புப்‌ பணிகளை மேற்கொள்வதற்காகவும்‌, மாநில பேரிடர்‌ நிவாரண நிதியிலிருந்து 585 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது. வர்தா” புயலைத்‌ தொடர்ந்து, மாநிலம்‌ முழுவதும்‌ தற்போது கடும்‌ வறட்சி நிலவி வருகிறது. இதனால்‌ பரவலான பயிரிழப்பாலும்‌, குடிநீர்ப்‌ பற்றாக்குறையாலும்‌ மக்கள்‌ கடும்‌ இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்‌. குடிநீர்ப்‌ பற்றாக்குறையைச்‌ சமாளிப்பதற்கு, மாநில பேரிடர்‌ நிவாரண நிதியிலிருந்து (SDRF) விடுவிக்கப்பட்ட 105 கோடி ரூபாய்‌ உட்பட, 615 கோடி ரூபாய்‌ அளவிற்கான செலவினம்‌ அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கால்நடை தீவனப்‌ பற்றாக்குறையைச்‌ சமாளிப்பதற்காக 6.91 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு மேற்கொண்ட விரிவான கணக்கெடுப்பின்‌ அடிப்படையில்‌ 50.35 இலட்சம்‌ ஏக்கர்‌ பரப்பளவில்‌ பயிர்‌ செய்த 32.30 இலட்சம்‌ விவசாயிகள்‌ பயிரிழப்பால்‌ பாதிக்கப்பட்டதாகக்‌ கண்டறியப்பட்டு, மொத்தமாக 2,247 கோடி ரூபாய்‌ உள்ளீட்டு மானியம்‌ அனுமதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட விவசாயிகளின்‌ வங்கிக்‌ கணக்குகளில்‌ நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. *வர்தா' புயலுக்குப்‌ பின்‌ மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புப்‌ பணிகளுக்காக 22,573 கோடி ரூபாயையும்‌, வறட்சி நிவாரணப்‌ பணிகளுக்காக 39,565 கோடி ரூபாயையும்‌ தேசியப்‌ பேரிடர்‌ நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு வழங்க வேண்டுமென மாநில அரசு கோரியுள்ளது. சேத விவரங்களை மதிப்பீடு செய்வதற்காக மத்தியக்‌ குழுக்கள்‌ தமிழகத்தில்‌ ஆய்வு செய்துள்ளன. இதன்‌ அடிப்படையில்‌, மத்திய அரசு தேசியப்‌ பேரிடர்‌ நிவாரண நிதியிலிருந்து விரைவில்‌ தேவையான நிதியுதவியை அளிக்கும்‌ என இந்த அரசு நம்புகிறது. வறுமை ஒழிப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶9) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.7 · ¶9 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector