Agriculture · completed claimed

Dairy Sector (Aavin)

4 budgets named it 6 year span 1,194 ₹ crore allocated 304 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2015-16 and named again in 3 later budgets, most recently 2020-21. Places named: Perambalur, Tiruvannamalai, Ambattur.

Allocated by budget year

Located at Perambalur · Perambalur district

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2015-16 Rs.100.68 crores continuation AIADMK

“A sum of Rs.100.68 crores is allocated for the Dairy Sector in this Budget Estimates.”
“ஆவின்‌ நிறுவனத்தின்‌ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில்‌ 409.94 கோடி ரூபாய்‌ அளவிற்கு இந்த அரசு நிதியுதவி அளித்துள்ளது. மத்திய அரசின்‌ திட்டங்களாகிய தேசிய வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டம்‌ மற்றும்‌ தேசிய உணவு பதப்படுத்தும்‌ திட்டம்‌ ஆகியவற்றின்‌ கீழ்‌ கிடைக்கும்‌ நிதியுதவியையும்‌, நபார்டு கடன்‌ உதவியையும்‌ சேர்த்து, ஆவின்‌ நிறுவனத்திற்கும்‌ அதன்‌ உறுப்பு கூட்டுறவு அமைப்புகளுக்கும்‌ தேவையான நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனால்‌, தொடக்க பால்‌ கூட்டுறவு சங்கங்களின்‌ சராசரி பால்‌ கொள்முதல்‌ நாளொன்றுக்கு 30 இலட்சம்‌ லிட்டராக உயர்ந்து விவசாயிகளுக்கு அதிக வருவாய்‌ அளித்து வருகிறது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ பால்வளத்துறைக்கு 100.68 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனளம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶34) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.22 · ¶34 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.593.65 crores completion claim investment target AIADMK · interim

“The infrastructure for the Dairy Sector has been strengthened substantially with a total investment of Rs.593.65 crores in the last five years.”
“வேளாண்மைக்கு நிகரான முக்கியத்துவத்தை, கால்நடை பராமரிப்புத்‌ துறைக்கு வழங்க வேண்டிய அவசியத்தை நன்குணர்ந்த மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, ஆட்சிப்‌ பொறுப்பேற்ற உடனே, கால்நடைத்‌ துறைக்கு பல்வேறு திட்டங்களைத்‌ தீட்டி செயல்படுத்தியுள்ளார்கள்‌. (முன்னெப்போதும்‌ இல்லாத அளவிற்கு, இத்துறைக்கு ஒதுக்கீடுகளை அதிகரித்ததன்‌ மூலமாக, விவசாயிகளின்‌ வருவாயில்‌ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஒரு நிரந்தர வாழ்வாதாரத்தை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 25 மாவட்டங்களில்‌ 97.35 கோடி ரூபாய்‌ செலவில்‌ 3,014 பிராய்லர்‌ கோழிப்‌ பண்ணைகளையும்‌, 10,195 நாட்டுக்‌ கோழிப்‌ பண்ணைகளையும்‌ அமைக்க இந்த அரசு உதவியுள்ளது. விலையில்லா கறவைப்‌ பசுக்கள்‌, வெள்ளாடுகள்‌ / செம்மறி ஆடுகள்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 23111 கோடி ரூபாய்‌ செலவில்‌ 60,000 பயனாளிகளுக்கு 60,000 விலையில்லா கறவைப்‌ பசுக்களையும்‌, 927.75 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஏழு இலட்சம்‌ பெண்களுக்கு 28 இலட்சம்‌ வெள்ளாடுகள்‌ / செம்மறி ஆடுகளையும்‌ இந்த அரசு வழங்கியுள்ளது. இதன்‌ பயனாக, 70,994 பசுங்கன்றுகளையும்‌, 42.95 இலட்சம்‌ ஆட்டுக்‌ குட்டிகளையும்‌ கூடுதல்‌ சொத்தாக பயனாளிகள்‌ பெற்றதோடு, நாளொன்றுக்கு 2.6 இலட்சம்‌ லிட்டர்‌ அளவிற்கு பால்‌ உற்பத்தியையும்‌ இந்த அரசு பெருக்கி சாதனை படைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 593.65 கோடி ரூபாய்‌ மொத்த முதலீட்டில்‌ பால்வளத்‌ துறையின்‌ அடிப்படைக்‌ கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு பெருமளவு மேம்படுத்தியுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶27) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.20 · ¶27 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.593.65 crores completion claim AIADMK · revised

“In the past five years, several infrastructure developmental projects amounting to Rs.593.65 crores have been implemented in the Dairy Sector under various schemes. These include a new dairy at Perambalur and at Tiruvannamalai, besides setting up of a new product dairy at Ambattur to handle the increasing milk procurement.”

tnbudget_2016-17_speech_en_revised · p.24 · ¶44 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2018-19 Rs.500 crore enhancement AIADMK

“To give greater impetus to the dairy sector in the State, dairy infrastructure will be augmented with loan support of Rs.500 crore from NABARD's Dairy Development Fund.”
“ஆவின்‌ நிறுவனத்தின்‌ பால்‌ பதப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்‌ பலனாக, 2011 ஆம்‌ ஆண்டில்‌ நாளொன்றுக்கு 32.57 இலட்சம்‌ லிட்டராக இருந்த ஆவின்‌ நிறுவனத்தின்‌ சராசரி பால்‌ பதப்படுத்தும்‌ திறன்‌, 2017 ஆம்‌ ஆண்டில்‌ நாளொன்றுக்கு 43.36 இலட்சம்‌ லிட்டராக உயர்ந்துள்ளது. 2011 ஆம்‌ ஆண்டில்‌ 21.37 இலட்சம்‌ லிட்டராக இருந்த நாளொன்றுக்கான சராசரி பால்‌ கொள்முதல்‌, 2017 ஆம்‌ ஆண்டில்‌ 29.64 இலட்சம்‌ லிட்டராக உயர்ந்துள்ளது. பல்வேறு மதிப்புக்‌ கூட்டப்பட்ட பொருட்களைத்‌ தயாரிப்பதற்கான முயற்சிகளை ஆவின்‌ நிறுவனம்‌ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில்‌ பால்வளத்‌ துறையின்‌ மேம்பாட்டிற்கு ஊக்கம்‌ அளிப்பதற்காக, நபார்டு வங்கியின்‌ பால்வள மேம்பாட்டு நிதியத்திலிருந்து 500 கோடி ரூபாய்‌ கடன்‌ பெற்று, பால்‌ பதப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, கால்நடை பராமரிப்பு மற்றும்‌ பால்வளத்‌ துறைகளுக்கு முறையே 1227.69 கோடி ரூபாயும்‌, 130.82 கோடி ரூபாயும்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீனளம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶38) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.25 · ¶38 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.304 crore new project project cost AIADMK

“We are expecting approval from Government of India, for 4 projects costing Rs.304 crore under the Dairy Infrastructure Development Fund of NABARD.”
“கடந்த 2011-12 ஆம்‌ ஆண்டு முதல்‌ பால்‌ கொள்முதலை உயர்த்துவதற்கான பல்வேறு பணிகள்‌ 917.73 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்‌ பலனாக, 2010-11 ஆம்‌ ஆண்டில்‌ நாளொன்றிற்கு 20.67 இலட்சம்‌ லிட்டராக இருந்த ஆவின்‌ நிறுவனத்தின்‌ சராசரி பால்‌ கொள்முதல்‌, 2019-20 ஆம்‌ ஆண்டில்‌ 33.96 இலட்சம்‌ லிட்டராக உயர்ந்துள்ளது. விவசாயிகள்‌ மற்றும்‌ நுகர்வோர்களுக்குப்‌ பயனளிக்கக்கூடிய வகையில்‌, ஆவின்‌ நிறுவனத்தை வலுப்படுத்துவதற்காக கூடுதலாக ஆறு பால்‌ ஒன்றியங்கள்‌ உருவாக்கப்பட்டுள்ளன. நபார்டு வங்கியின்‌ பால்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின்‌ கீழ்‌ 304 கோடி ரூபாய்‌ செலவில்‌ நான்கு திட்டங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசின்‌ அனுமதியை நாங்கள்‌ எதிர்பார்த்துள்ளோம்‌. மீன்வளம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶52) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.30 · ¶52 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector