Rural development · dormant
Devolution grants to local bodies
First announced in 2011-12 and named again in 6 later budgets, most recently 2020-21.
Allocated by budget year
See it on the map → All Rural development projects →
What each budget said, year by year
2011-12 ` 6,509 crores
“A sum of ` 6,509 crores will be disbursed to local bodies in the form of devolution for the year 2011-2012.”
“மாநில நிதிக் குழுவின் பரிந்துரைப்படி அரசின் சொந்த வரி வருவாயிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வழங்கப்படும் நிதிப் பகிர்வு 2010-2011 ஆம் ஆண்டில் 10 விழுக்காடாக இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011-2012 ஆம் ஆண்டு நிதிப் பகிர்வுக்கு மொத்தம் ஒதுக்கப்படும் தொகை 6,509 கோடி ரூபாயாகும். இந்தப் பங்களிப்பு மானியங்கள் தவிர உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு அடிப்படை வசதிகளான தொடக்கக் கல்வி, குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகளையும் மாநில அரசே நேரடியாக ஏற்று வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வை முடிவு செய்ய அமைக்கப்பட்ட நான்காவது மாநில நிதிக்குழு, தனது பரிந்துரைகளை விரைவில் அளிக்க உள்ளது. இவை ஆய்வு செய்யப்பட்டு பன்னிரெண்டாவது திட்ட காலத்திற்கான நிதிப்பகிர்வு இந்த அரசால் முடிவு செய்யப்படும். ஊரக வளர்ச்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶102) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.61 · ¶102 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 2,079 crores
“A sum of ` 2,079 crores has been provided for this purpose in this Interim Budget.” tnbudget_2011-12_speech_en_interim · p.31 · ¶78 · source PDF ↗ · on the map →
2011-12 ` 2,198 crores
“In 2011-2012 Interim Budget ` 2,198 crores has been allocated for providing these devolution grants.” tnbudget_2011-12_speech_en_interim · p.33 · ¶83 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.7,014 crores
“The amount of devolution due to local bodies has been increased to Rs.7,014 crores in the Budget Estimates for 2012-2013.”
“அரசின் சொந்த வருவாய் வரியிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதிப் பகிர்வு குறித்த தனது பரிந்துரைகளை நான்காவது மாநில நிதிக்குழு சமர்ப்பித்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. நான்காவது மாநில நிதி குழுவின் பரிந்துரைகள் மீது முடிவு எடுக்கும் வரை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நிதிப் பகிர்வு அளவின் அடிப்படையிலேயே தொடர்ந்து நிதியுதவி வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிப் பகிர்வு 2012-2019 ஆம் ஆண்டில் 7,014 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பதின்மூன்றாவது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் 1,159.85 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளுக்கென வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.67 · ¶105 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.8,427.05 crores
“Accordingly, the rural local bodies will get Rs.4,887.69 crores in 2013-2014. The Urban Local Bodies will also get Rs.3,539.36 crores through devolution grants. Altogether, local bodies will receive Rs.8,427.05 crores as devolutionary grant from the State Government during 2013-2014.” financedept_2013-14_speech_en · p.45 · ¶110 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.5,168.07 crore
“A sum of Rs.5,168.07 crore has been provided for devolution to Rural Local Bodies in the Budget Estimates 2014-2015.”
“தரமுள்ள கட்டமைப்பைப் போதிய அளவில் ஏற்படுத்தி, கிராமப்புறங்களை முழுமையாக மாற்றி அமைத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. கிராமப் பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, வீட்டுவசதி, சாலை இணைப்புகள், குடிநீர் வசதி, பொது பயன்பாட்டிற்கான கட்டடங்களை அமைத்துப் பராமரித்தல் போன்ற பணிகளுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில நிதிக்குழுவின் பரிந்துரையின்படி, மாநிலத்தின் வரி வருவாயில் கிராம உள்ளாட்சி அமைப்புகளின் பங்காக கணிசமான நிதி வழங்கப்பட்டு வருகிறது. 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பங்கீட்டிற்காக 5,168.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶73) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.37 · ¶73 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.3,734 crore
“In the year 2014-2015, a sum of Rs.3,734 crore is being provided as devolution grant to Urban Local Bodies.”
“கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கட் தொகையில் நகர்ப்புர மக்கள் தொகையின் பங்கு 44.04 சதவீதத்திலிருந்து 48.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான தொழில் பகுதிகள், நகரங்களைச் சுற்றி அமைந்திருப்பதால், நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக இடம் பெயர்ந்துள்ள இளைஞர்களும் படித்தவர்களும் நகர்ப்புர மக்கள் தொகையில் பெரும் அளவில் உள்ளனர். இந்த தனித்துவம் வாய்ந்த மக்கள் தொகைத் தன்மையின் அடிப்படையிலேயே நகர்ப்புரங்களின் தேவைகளும் அமைந்துள்ளன. போக்குவரத்து, குடிநீர் வழங்கல், கழிவுநீர், திடக் கழிவு மேலாண்மை, வீட்டு வசதி ஆகிய முக்கியத் துறைகளில் குறிப்பிடத் தக்க அளவில் அரசின் உதவி தேவைப்படுகிறது. இதனை எய்திடும் வகையில் மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதியை இந்த அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டில், மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதிக்காக 3,734 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.40 · ¶80 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.5,422.07 crores
“This has been increased to Rs.5,422.07 crores and Rs.3,926.32 crores for rural and urban local bodies respectively in the Budget Estimates 2015-2016.”
“நான்காவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, சொந்த வரி வருவாயில் 10 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் தொகை ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4,921.77 கோடி ரூபாயும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3,564.04 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்தொகை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,422.07 கோடி ரூபாயாகவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3,926.32 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவியையும் பதினான்காவது மத்திய நிதி ஆணையம் கணிசமான அளவு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 2015-2016 ஆம் ஆண்டில் 1,737.69 கோடி ரூபாய் அளவிற்கும், வரும் ஐந்தாண்டுகளில் மொத்தமாக 17,009.74 கோடி ரூபாய் அளவிலும், நமது மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைக்கும். ஊரக வளர்ச்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶66) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.41 · ¶66 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.3,926.32 crores
“This has been increased to Rs.5,422.07 crores and Rs.3,926.32 crores for rural and urban local bodies respectively in the Budget Estimates 2015-2016.”
“நான்காவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, சொந்த வரி வருவாயில் 10 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் தொகை ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4,921.77 கோடி ரூபாயும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3,564.04 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்தொகை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,422.07 கோடி ரூபாயாகவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3,926.32 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவியையும் பதினான்காவது மத்திய நிதி ஆணையம் கணிசமான அளவு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 2015-2016 ஆம் ஆண்டில் 1,737.69 கோடி ரூபாய் அளவிற்கும், வரும் ஐந்தாண்டுகளில் மொத்தமாக 17,009.74 கோடி ரூபாய் அளவிலும், நமது மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைக்கும். ஊரக வளர்ச்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶66) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.41 · ¶66 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.5,164.98 crore
“A sum of Rs.5,164.98 crore and Rs.6,573.61 crore have been provided in the Budget Estimates 2019-2020 for the urban and rural local bodies respectively.” tnbudget_2019-20_speech_en · p.31 · ¶51 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.6,573.61 crore
“A sum of Rs.5,164.98 crore and Rs.6,573.61 crore have been provided in the Budget Estimates 2019-2020 for the urban and rural local bodies respectively.” tnbudget_2019-20_speech_en · p.31 · ¶51 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.5,306.95 crore
“In the Budget Estimates 2020-21, a sum of Rs.5,306.95 crore is provided as devolution to urban local bodies and Rs.6,754.30 crore for rural local bodies.”
“2019-20 ஆம் ஆண்டில், மாநில நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4,558.16 கோடி ரூபாயும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,654.25 கோடி ரூபாயும் நிதிப் பகிர்வாக வழங்க நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. 2020-21 ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306.95 கோடி ரூபாயும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754.30 கோடி ரூபாயும் நிதிப்பகிர்வாக வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.39 · ¶68 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) · 12 years
- MLA Constituency Development Scheme (MLACDS) · 10 years
- Tamil Nadu Village Habitation Improvement Scheme (THAI) · 6 years
- State Balanced Growth Fund (SBGF) · 6 years
- Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM) · 6 years
- Swachh Bharat Mission (Gramin) · 6 years