Water supply · completed claimed
Drought drinking water crisis measures
2 budgets named it 3 year span 772 ₹ crore allocated AIADMK government
First announced in 2017-18 and named again in 1 later budget, most recently 2019-20.
Allocated by budget year
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2017-18 Rs.615 crore
“A sum of Rs.615 crore has been sanctioned to tackle the drinking water crisis which includes Rs.105 crore from the SDRF.”
“சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய வர்தா” புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்வதற்காகவும், மறுசிரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 585 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வர்தா” புயலைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பரவலான பயிரிழப்பாலும், குடிநீர்ப் பற்றாக்குறையாலும் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) விடுவிக்கப்பட்ட 105 கோடி ரூபாய் உட்பட, 615 கோடி ரூபாய் அளவிற்கான செலவினம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கால்நடை தீவனப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக 6.91 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு மேற்கொண்ட விரிவான கணக்கெடுப்பின் அடிப்படையில் 50.35 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்த 32.30 இலட்சம் விவசாயிகள் பயிரிழப்பால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டு, மொத்தமாக 2,247 கோடி ரூபாய் உள்ளீட்டு மானியம் அனுமதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. *வர்தா' புயலுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புப் பணிகளுக்காக 22,573 கோடி ரூபாயையும், வறட்சி நிவாரணப் பணிகளுக்காக 39,565 கோடி ரூபாயையும் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு வழங்க வேண்டுமென மாநில அரசு கோரியுள்ளது. சேத விவரங்களை மதிப்பீடு செய்வதற்காக மத்தியக் குழுக்கள் தமிழகத்தில் ஆய்வு செய்துள்ளன. இதன் அடிப்படையில், மத்திய அரசு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விரைவில் தேவையான நிதியுதவியை அளிக்கும் என இந்த அரசு நம்புகிறது. வறுமை ஒழிப்பு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶9) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.7 · ¶9 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.157 crore
“Further, to combat the prevailing drought and to ensure proper supply of drinking water, Rs.157 crore is sanctioned by this Government.”
“மக்களுக்கு உரிய முன் எச்சரிக்கைகளை வழங்கி, கஜா புயலுக்குப் பின்னரான நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை இந்த அரசு திறம்பட கையாண்டுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு 786 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கஜா புயல் ஏற்படுத்திசி சென்ற பாதிப்பைத் தணிப்பதற்கான தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து மத்திய அரசு 900.31 கோடி ரூபாயை விடுவித்தது. இந்த நிதி ஆதாரங்களுடன் மாநிலத்தின் சொந்த நிதியையும் ஒருங்கிணைத்து, பயிர் சேதங்களுக்காக 774.13 கோடி ரூபாயும், உதவி நிவாரணத்திற்காக 577.46 கோடி ரூபாயும், வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக 401.50 கோடி ரூபாயும், மீனவர்களின் சேதமடைந்த படகுகளுக்காக 41.63 கோடி ரூபாய் உட்பட, ஆக மொத்தம் உடனடி நிவாரணப் பணிகளுக்காக 2,36141 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. குடிசைகள், தென்னை மரங்கள் மற்றும் மீனவர்களின் எப்.ஆர்.பி. படகுகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்தின் வரையறையைவிடக் கூடுதலாக இந்த அரசு கணிசமாக உயர்த்தி வழங்கியுள்ளது. மேலும், தற்போது நிலவிவரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடையின்றி குடிநீர் வழங்க இதுவரை 157 கோடி ரூபாய் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்காக 825 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶9) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.7 · ¶9 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Rural drinking water (Minimum Needs Programme) · 2011-12 –2019-20
- runs alongside Drought relief package (drinking water and fodder shortage) · 2014-15
- runs alongside Drought drinking water works · 2017-18
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years