Agriculture · dormant

Enhanced crop damage relief (Nivar/Burevi cyclones)

1 budget named it 1 year span 1,715 ₹ crore allocated AIADMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2021-22 Rs.1,715 crore transfer scheme AIADMK · interim

“The relief payable for crops was increased from Rs.7,410 per hectare to Rs.10,000 per hectare for all rainfed crops, from Rs.13,500 to Rs.20,000 per hectare for paddy and other irrigated crops and from Rs.18,000 to Rs.25,000 per hectare for perennial crops. The Hon’ble Chief Minister also lifted the ceiling of 2 hectares for eligibility for relief. As a result, a total amount of Rs.1,715 crore is being paid to 15.25 lakh farmers across the State by direct credit to their bank accounts.”
“தமிழ்நாட்டிலுள்ள மக்கள்‌ தொகையில்‌ 50 சதவீதமாக இருக்கும்‌ விவசாயிகள்‌ மற்றும்‌ விவசாயத்‌ தொழிலாளர்களின்‌ நலனுக்கு இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. 8 ஆண்டுகளுக்குப்‌ பிறகு, கடந்த ஆண்டு, உரிய நாளான ஜூன்‌ 12 ஆம்‌ தேதியன்றே மேட்டூர்‌ அணை திறக்கப்பட்டது. இதனால்‌, சாதனை அளவாக 4.12 இலட்சம்‌ ஏக்கரில்‌ குறுவை நெல்‌ பயிரிடப்பட்டது. போதுமான பாசன வசதிகள்‌ கிடைத்ததாலும்‌, உரிய நேரத்தில்‌ விதைகள்‌ மற்றும்‌ பிற இடுபொருட்கள்‌ வழங்கப்பட்டதாலும்‌, விவசாயிகள்‌ ஒரு நல்ல மகசூலை எதிர்பார்த்திருந்தார்கள்‌. ஆனால்‌, தொடர்ச்சியான இரண்டு புயல்களான நிவர்‌ மற்றும்‌ புரெவி மற்றும்‌ 2021 ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதத்தில்‌ பருவம்‌ தவறிப்‌ பெய்த கனமழையின்‌ காரணமாக அறுவடை நேரத்தில்‌ விவசாயிகளின்‌ பயிர்கள்‌ சேதமடைந்து, அவர்களின்‌ நம்பிக்கையை சிதைத்தது. முற்றிய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களின்‌ காட்சிகள்‌ இதயத்தை உருக்கின. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களும்‌ ஒரு விவசாயியாக இருப்பதால்‌, விவசாயிகளின்‌ துயரத்தைப்‌ புரிந்துகொண்டு, விவசாயிகளுக்கு உதவும்‌ வகையில்‌ தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார்‌. பயிர்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணம்‌, மானாவாரிப்‌ பயிர்களுக்கு ஹெக்டேர்‌ ஒன்றிற்கு 7,410 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும்‌, நெல்‌ மற்றும்‌ இதர இறைவைப்‌ பயிர்களுக்கு ஹெக்டேர்‌ ஒன்றிற்கு 13,500 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகவும்‌, பல்லாண்டுகாலப்‌ பயிர்களுக்கு ஹெக்டேர்‌ ஒன்றிற்கு 18,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும்‌ உயர்த்தப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, நிவாரணம்‌ பெறுவதற்கு உச்சவரம்பான 2 ஹெக்டேர்‌ பரப்பளவு என்ற அளவுகோலையும்‌ நீக்கிவிட்டார்‌. இதன்‌ விளைவாக, மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள 15.25 இலட்சம்‌ விவசாயிகளின்‌ வங்கிக்‌ கணக்குகளுக்கு, மொத்தம்‌ 1715 கோடி ரூபாய்‌ நேரடியாகச்‌ செலுத்தப்பட்டு வருகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.25 · ¶35 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector