Agriculture · dormant
Green fodder development scheme
First announced in 2011-12 and named again in 7 later budgets, most recently 2019-20.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2011-12 ` 20 crores
“For this green fodder programme, this Government will set apart ```` 20 crores as subsidy for this year.”
“பசுந்தீவனங்களின் பற்றாக்குறை கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறன் குறைவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் பசுந் தீவன பற்றாக்குறை 20 விழுக்காடாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் அளவு ஆண்டுக்கு 100 இலட்சம் டன் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திட்டங்களின் மூலமாக பசுந்தீவன உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டாலும், உற்பத்தியின் அளவு தேவையை விட மிகக் குறைவாகவே உள்ளது. மேலும், கோடையிலும், பசுந்தீவனப்பயிர் சாகுபடிக்கு வாய்ப்பில்லாத காலங்களிலும் தேவையான உலர், பதப்படுத்தப்பட்ட தீவனங்களின் இருப்பையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. இந்த அரசு, தீவன உற்பத்தியை மேம்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கும். நடப்பு ஆண்டில் 24,000 ஏக்கரில் குறிப்பிட்ட பசுந்தீவன வளர்ப்பிற்கு மானியம் வழங்கப்படும். நுண்ணீர் பாசனத் திட்டம், தீவனப் வளர்ப்பிற்கும் விரிவுபடுத்தப்படும். நுண்ணீர், பாசன தெளிப்பான்கள், வேகத் தெளிப்பான்கள் போன்றவற்றைப் பயன்படுத்த சிறு குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்படும். அவற்றோடு, தீவன சேதாரத்தைக் குறைக்க, 50 விழுக்காடு மானியத்தில் 5,000 புல்வெட்டிகளும், 5,000 நறுக்கும் இயந்திரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்தகைய பசுந்தீவன உற்பத்தித் திட்ட மானியத்திற்கென, அரசு, 20 கோடி ரூபாயை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது. மீன் வளம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶34) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.22 · ¶34 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.20 crores
“The above scheme has been widely welcomed by the farmers and will also be continued during 2012-2013 with a further outlay of Rs.20 crores.”
“பசுந்தீவனத் தட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கத்தோடும், கால்நடைகளின் உற்பத்தித் திறனை, குறிப்பாக கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்காக இந்த அரசு ஒரு பெரும் தீவன உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டில், 24,000 ஏக்கர் பரப்பில் தீவன உற்பத்தி செய்ய 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. விவசாயிகளிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம், 2012-2013 ஆம் ஆண்டிலும் 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶38) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.25 · ¶38 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.25 crores
“The scheme would be continued in 2013-2014, with an enhanced allocation of Rs.25 crores and tree fodder will also be promoted.”
“இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தீவனப் பெருக்கத் திட்டத்தில், 50,000 ஏக்கர் பரப்பு பசுந்தீவன உற்பத்தியின் கீழ் வெற்றிகரமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 25 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு) 2013-2014 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மரத்தீவனப் பயிர்களும் இத்திட்டத்தில் ஊக்குவிக்கப்படும். உள்கட்டமைப்ரிற்கு LU BLOOM OV”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶44) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.19 · ¶44 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.25 crore
“This scheme will be continued in the next financial year also and a sum of Rs.25 crore has been allocated in this Budget for fodder development.”
“கால்நடைத் தீவன உற்பத்திக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் நோக்குடன், கடந்த மூன்று ஆண்டுகளில் 65 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மாநிலத் தீவன உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரசின் தீவிர முயற்சியால், 63,542 ஏக்கர் அளவிலான விவசாயிகளின் சொந்த நிலம் தீவனப் பயிர் சாகுபடிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம், வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் இதற்கென இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶33) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.19 · ¶33 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.25 crores
“In the Budget Estimates 2015-2016, Rs.25 crores is allocated for fodder development.”
“கால்நடை பராமரிப்புத் துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்த தரமான தீவனம் கிடைப்பது அவசியமானது. தீவன உற்பத்தியை உயர்த்துவதற்காக, 2011 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு தீவன உற்பத்தி வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வறட்சிக் காலங்களில் தீவனத் தட்டுப்பாட்டைப் போக்க 18.50 கோடி ரூபாய் செலவில் 185 தீவனக் கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ், 39.65 கோடி ரூபாய் செலவில் 32,360 ஏக்கர் அளவிலான விவசாயிகளின் நிலங்கள் தீவனப்பயிர் உற்பத்தியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தீவன உற்பத்தி மேம்பாட்டிற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶33) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.22 · ¶33 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.25 crores
“An allocation of Rs.25 crores has been made in the Revised Budget Estimates 2016-2017 for the 'Fodder Development Scheme'.”
“இந்த அரசின் முன்னோடித் திட்டமான விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம்”, கிராமப்புறப் பொருளாதாரத்தில், குறிப்பாக ஏழைகளின் வாழ்வாதாரத்தில், ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கறவைப் பசுக்களுக்கான அலகுத் தொகை 30,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாயாக உயர்த்தப்படும். இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த, 2016-2017 ஆம் ஆண்டில் 12,000 ஏழைப் பெண்களுக்கு 12,000 கறவைப் பசுக்களும், ஒரு இலட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு நான்கு இலட்சம் வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகளும் வழங்கப்படும். இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 182.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீவன உற்பத்தித் திட்டத்திற்காக, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.23 · ¶42 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2018-19 Rs.25 crore
“In addition, Rs.50 crore has been allocated in the budget for poultry development and Rs.25 crore has been allocated for the Fodder Development schemes.”
“விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை, 75,398 ஏழைப் பெண்களுக்கு தலா ஒரு கறவைப் பசுவும், 8.71 இலட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு 34.85 இலட்சம் வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டில் 12,000 கறவைப் பசுக்களையும், 1.50 இலட்சம் பயனாளிகளுக்கு ஆறு இலட்சம் வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகளையும் இத்திட்டத்தின் கீழ் இந்த அரசு வழங்கும். இதற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 248.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோழிப் பண்ணை வளர்ச்சித் திட்டத்திற்காக 50 கோடி ரூபாயும், தீவன உற்பத்தித் திட்டத்திற்காக 25 கோடி ரூபாயும் 2018-2019 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.24 · ¶36 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.25 crore
“Similarly, Fodder Development Programme will be continued with an allocation of Rs.25 crore.”
“வேளாண்மையின் அங்கமாகக் கருதப்படும் கால்நடை பராமரிப்புத் துறை கிராமப்புறப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2011-2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 75,448 பெண்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டம் 2019-2020 ஆம் ஆண்டில் 49.83 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 8.72 இலட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. 2019-2020 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 198.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, தீவன அபிவிருத்தித் திட்டமும் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ‘gf’ இன நாட்டுக்கோழி வளர்ப்பினை ஊக்கப்படுத்துவதற்காக, 2018-2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2019-2020 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கிராமப்புறங்களில் உள்ள பேரூராட்சிகளிலும் வரும் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.22 · ¶36 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Poultry promotion in non-traditional areas · 2013-14 –2018-19
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years
- Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) · 6 years