Environment · completed claimed

Human–animal conflict mitigation programme

4 budgets named it 16 year span 52 ₹ crore allocated 52 ₹ crore whole-project cost AIADMK / TVK governments

First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2026-27. Places named: Coimbatore, Dharmapuri, Dindigul, Erode, Krishnagiri, Salem, Teni, Tirunelveli.

Allocated by budget year

Located at Coimbatore · Coimbatore district

See it on the map → All Environment projects →

What each budget said, year by year

2011-12 ` 10 crores new project AIADMK · revised

“A sum of ```` 10 crores will be allocated to take up the first phase of work.”
“மக்கட்தொகைப்‌ பெருக்கத்தாலும்‌, தொழில்‌ மயமாக்கலாலும்‌ விலங்குகளின்‌ இயற்கை வாழ்விடங்கள்‌ பாதிக்கப்படுகின்றன. இதன்‌ விளைவாக, வன விலங்குகள்‌ அடிக்கடி காடுகளை விட்டு வெளியேறி மனிதர்கள்‌ வாழும்‌ பகுதிகளுக்குள்‌ நுழைவதால்‌ மனிதர்கள்‌ வனவிலங்குகளை எதிர்கொள்ளும்‌ சூழ்நிலை உருவாகிறது. விலங்குகளின்‌ வாழ்விடங்களை மேம்படுத்துவது, அவை விரும்பி உண்ணும்‌ பயிர்களை காட்டுப்‌ பகுதிகளிலேயே வளர்ப்பது, காடுகளின்‌ எல்லை ஓரமாக தடைகளை அமைப்பது, கிராம மக்களின்‌ திறனை மேம்படுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது மனித உயிருக்கும்‌, விவசாயப்‌ பயிர்களுக்கும்‌, உடமைகளுக்கும்‌ விலங்குகளால்‌ ஏற்படும்‌ பாதிப்பிற்கு உடனடியாக இழப்பீடு வழங்குவது போன்ற பல்முனை அம்சங்களை உள்ளடக்கிய செயல்திட்டத்தின்‌ மூலம்‌ இந்தப்‌ பிரச்சனைக்குத்‌ தீர்வு காணப்படும்‌. இச்செயல்‌ திட்டத்தைப்‌ படிப்படியாக நடைமுறைக்குக்‌ கொண்டுவரும்‌ முதற்கட்ட பணிக்காக 10 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌. மனித உயிரிழப்பிற்கு வழங்கப்படும்‌ இழப்பீட்டுத்‌ தொகையை 1.50 இலட்சம்‌ ரூபாயிலிருந்து 3 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶46) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.29 · ¶46 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.10 crore continuation AIADMK

“During 2012-2013, we will take up additional works to create physical barriers like elephant proof trenches for which Rs.10 crore is provided in this Budget.”
“வனவிலங்குகளால்‌ மக்களுக்கு ஏற்படும்‌ பிரச்சனைகளுக்குத்‌ தீர்வு காண, யானைத்‌ தடுப்பு அகழிகள்‌ போன்ற இடர்‌ களைவுப்‌ பணிகளுக்கு, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 11.7 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டது. வன விலங்குகள்‌ மனிதர்கள்‌ வசிக்கும்‌ பகுதிகளுக்கு வராமல்‌ தடுக்கும்‌ வகையில்‌, வனப்பகுதிகளிலேயே போதிய தீவனப்‌ பயிர்களை வளர்க்க, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 20.87 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கப்பட்டது. வனவிலங்குகளால்‌ ஏற்படும்‌ உயிரிழப்பு, பயிர்ச்‌ சேதம்‌ ஆகியவற்றுக்கு அளிக்கப்படும்‌ இழப்பீட்டையும்‌ இந்த அரசு உயர்த்தியுள்ளது. இழப்பீடு வழங்குவதில்‌ தாமதம்‌ ஏற்படாமல்‌ இருக்க, 2.50 கோடி ரூபாய்‌ சுழல்நிதி ஒன்றும்‌ உருவாக்கப்பட்டுள்ளது. யானைத்‌ தடுப்பு அகழிகள்‌ போன்ற தடுப்பு அண்களை அமைப்பதற்கான கூடுதல்‌ பணிகள்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டிலும்‌ மேற்கொள்ளப்படும்‌. இதற்காக இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 10 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶50) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.33 · ¶50 · source PDF ↗ · on the map →

2012-13 Rs.11.70 crores completion claim AIADMK

“In order to reduce man-animal conflicts, Rs.11.70 crores has been sanctioned during 2011-2012 for taking up mitigation works like elephant proof trenches.”
“வனவிலங்குகளால்‌ மக்களுக்கு ஏற்படும்‌ பிரச்சனைகளுக்குத்‌ தீர்வு காண, யானைத்‌ தடுப்பு அகழிகள்‌ போன்ற இடர்‌ களைவுப்‌ பணிகளுக்கு, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 11.7 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டது. வன விலங்குகள்‌ மனிதர்கள்‌ வசிக்கும்‌ பகுதிகளுக்கு வராமல்‌ தடுக்கும்‌ வகையில்‌, வனப்பகுதிகளிலேயே போதிய தீவனப்‌ பயிர்களை வளர்க்க, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 20.87 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கப்பட்டது. வனவிலங்குகளால்‌ ஏற்படும்‌ உயிரிழப்பு, பயிர்ச்‌ சேதம்‌ ஆகியவற்றுக்கு அளிக்கப்படும்‌ இழப்பீட்டையும்‌ இந்த அரசு உயர்த்தியுள்ளது. இழப்பீடு வழங்குவதில்‌ தாமதம்‌ ஏற்படாமல்‌ இருக்க, 2.50 கோடி ரூபாய்‌ சுழல்நிதி ஒன்றும்‌ உருவாக்கப்பட்டுள்ளது. யானைத்‌ தடுப்பு அகழிகள்‌ போன்ற தடுப்பு அண்களை அமைப்பதற்கான கூடுதல்‌ பணிகள்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டிலும்‌ மேற்கொள்ளப்படும்‌. இதற்காக இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 10 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶50) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.33 · ¶50 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.51.65 crores completion claim project cost AIADMK

“Special attention has been paid to reduce instances of man-animal conflict and towards this end, 54.50 km of solar powered fences and 168.19 km of elephant proof trenches have been created at an outlay of Rs.51.65 crores.”
“மாநிலத்தின்‌ பசுமைப்‌ பரப்பை அதிகரிக்கவும்‌, காடு வளர்ப்புப்‌ பணிகளில்‌ சமுதாயத்தின்‌ பங்களிப்பை உறுதி செய்யவும்‌, ஐப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு வங்கி உதவியுடன்‌ செயல்படுத்தப்பட்டுவரும்‌ 'தமிழ்நாடு பல்லுயிரினப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமைத்‌ திட்டம்‌”, நபார்டு கடனுதவியுடன்‌ செயல்படுத்தப்பட்டுவரும்‌ நீர்ப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமை மேம்பாட்டுத்‌ திட்டம்‌”, மரம்‌ நடும்‌ மாபெரும்‌ திட்டம்‌, தனியார்‌ நிலங்களில்‌ மரம்‌ வளர்க்கும்‌ திட்டம்‌ போன்ற பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு பல்லுயிரினப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமைத்‌ திட்டம்‌ 115.91 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்பட்டது. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 122.68 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ இத்திட்டம்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. நீர்ப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமை மேம்பாட்டுத்‌ திட்டத்திற்காக, 96.50 கோடி ரூபாய்‌ நபார்டு வங்கி நிதியுதவி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும்‌, 2012 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ முதல்‌ இதுவரை மரம்‌ நடும்‌ மாபெரும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 122.17 கோடி ரூபாய்‌ செலவில்‌ 195 இலட்சம்‌ மரக்‌ கன்றுகள்‌ நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டும்‌, 53.72 கோடி ரூபாய்‌ செலவில்‌ 67 இலட்சம்‌ மரக்‌ கன்றுகள்‌ நடுவதற்கு அரசு ஒப்புதல்‌ அளித்துள்ளது. வனப்‌ பகுதிகளின்‌ மேம்பாட்டிற்காக பதின்மூன்றாவது நிதி ஆணையம்‌ வழங்கிய 142.48 கோடி ரூபாய்‌ மானியத்தையும்‌ இந்த அரசு முறையாகப்‌ பயன்படுத்தியுள்ளது. விலங்குகளினால்‌ மனிதர்களுக்கு ஏற்படும்‌ பாதிப்புகளைக்‌ குறைப்பதற்கு சிறப்பு கவனம்‌ அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 51.65 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 54.50 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள சூரிய ஒளி மின்‌ வேலிகளும்‌, 168.19 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள யானை புகா அகழிகளும்‌ அமைக்கப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.27 · ¶42 · source PDF ↗ · on the map →

2026-27 Rs.20 crore new project TVK · revised

“A comprehensive human-wildlife-conflict mitigation scheme will be introduced, incorporating scientific measures such as hanging solar fences and steel wire rope fencing, community-based protection of forests, appointment of forest protection staff, and GPS-enabled vehicles for conflict management, night patrolling, security and monitoring, across 100 conflict-prone villages in Coimbatore, Dharmapuri, Dindigul, Erode, Krishnagiri, The Nilgiris, Salem, Theni, Tirunelveli, Tenkasi and Tiruppur districts. An amount of Rs.20 crore has been allocated for this in the current financial year.”
“மனித - வனவிலங்கு மோதல்களைத்‌ தணிக்கும்‌ வகையில்‌, அறிவியல்‌ சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும்‌ உள்ளடக்கிய விரிவான திட்டம்‌ ஒன்று செயல்படுத்தப்படும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌, சூரிய மின்வேலி மற்றும்‌ எஃகு கம்பி வேலி அமைத்தல்‌, சமூகப்‌ பங்களிப்புடன்‌ கூடிய வனப்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளுதல்‌, வனப்‌ பாதுகாப்புப்‌ பணியாளர்களை நியமித்தல்‌, மனித-வனவிலங்கு மோதல்‌ மேலாண்மை, இரவு நேரச்‌ சுற்றுக்காவல்‌, பாதுகாப்பு மற்றும்‌ கண்காணிப்புப்‌ பணிகளுக்காக புவியிடங்காட்டி (GPS) வசதியுடன்‌ கூடிய வாகனங்களை பயன்படுத்துதல்‌ ஆகிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌. இத்திட்டம்‌, கோயம்புத்தூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம்‌, தேனி, திருநெல்வேலி, மென்காசி மற்றும்‌ திருப்பூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ மனித-வனவிலங்கு மோதல்கள்‌ அதிகமாக ஏற்படும்‌ 100 கிராமங்களில்‌ செயல்படுத்தப்படும்‌. இதற்காக, நடப்பு நிதியாண்டில்‌ 20 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.64 · ¶128 · full speech ↗ · on the map →

Nearby in the same sector