Industry · dormant

Industrial Growth Corridor (Madurai–Thoothukudi)

6 budgets named it 7 year span ₹ crore allocated AIADMK government 1 district

First announced in 2011-12 and named again in 5 later budgets, most recently 2017-18. Districts: southern. Places named: Madurai, Thoothukudi.

Allocated by budget year

Located at Madurai · Madurai district

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2011-12 new project investment target AIADMK · revised

“We have already announced the creation of a self-sustainable Industrial Growth Corridor on the Madurai- Thoothukudi highway.”
“இந்த அரசு மாநிலத்தின்‌ தென்‌ மாவட்டங்களின்‌ தொழில்‌ வளர்ச்சியில்‌ மிகுந்த ஆர்வம்‌ கொண்டுள்ளது. மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையை, தற்சார்புடைய தொழில்‌ வளர்ச்சி பெருவழிப்‌ பாதையாக இந்த அரசு உருவாக்கும்‌ என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவான திட்ட அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட அறிக்கையில்‌ உற்பத்தி வணிக முதலீட்டு பகுதி, விவசாய வணிக முதலீட்டு பகுதி, அறிவுசார்‌ மையம்‌, சிறப்புச்‌ சுற்றுலா முதலீட்டு மண்டலம்‌ ஆகியவற்றை அமைப்பதற்கு தகுந்த இடங்கள்‌ அடையாளம்‌ காணப்பட்டுள்ளன. அரசு-தனியார்‌ பங்களிப்பு அடிப்படையில்‌ இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்‌. 55 தொழில்‌ துறையின்‌ வளர்ச்சிக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்கள்‌ கூடுதல்‌ பங்களிக்கும்‌ வகையில்‌ உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சிமெண்ட்‌ நிறுவனம்‌ அதனுடைய ஆலங்குளம்‌, அரியலூர்‌ அலகுகள்‌ மூலம்‌ தமிழ்நாட்டின்‌ மொத்த சிமெண்ட்‌ உற்பத்தியில்‌ 3.6 விழுக்காடு மட்டுமே உற்பத்தி செய்கிறது. தற்போது 165 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஆலங்குளம்‌ அலகின்‌ உற்பத்தித்‌ திறனை இரண்டு இலட்சம்‌ டன்னிலிருந்து நான்கு இலட்சம்‌ டன்‌ ஆகவும்‌, 350 கோடி ரூபாய்‌ செலவில்‌ அரியலூர்‌ அலகின்‌ உற்பத்தித்‌ திறனை ஐந்து இலட்சம்‌ டன்னிலிருந்து பதினைந்து இலட்சம்‌ டன்‌ ஆகவும்‌ உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶54) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.35 · ¶54 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2013-14 Rs.1,90,000 crores new project AIADMK

“In 2013-2014, the Government will give a push to the development of the Madurai-Thoothukudi Industrial Corridor. The project proposes to create four manufacturing regions, one agri-business region, two business investment regions, a special tourism zone, one rural tourism hub and one knowledge hub. This will attract Rs.1,90,000 crores of industrial investment over a period of 10 years.”

financedept_2013-14_speech_en · p.28 · ¶69 · source PDF ↗ · on the map →

2014-15 new project AIADMK

“A Special Purpose Vehicle will be formed soon to implement the Madurai- Thoothukudi Industrial Corridor for which the Detailed Project Report has already been prepared.”
“தென்‌ மாவட்டங்களில்‌ தொழில்‌ வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான சிறப்பு சலுகைத்‌ தொகுப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்‌ பெருந்‌ திட்டத்தின்‌ ஒரு பகுதியாக, மாநிலம்‌ முழுவதிலும்‌ உள்ள 53,000 ஏக்கர்‌ நிலம்‌ மேம்படுத்தப்படும்‌. இதில்‌, மதுரை, திண்டுக்கல்‌, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம்‌, விருதுநகர்‌, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென்‌ மாவட்டங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம்‌ அளிக்கப்படும்‌. ஏற்கெனவே விரிவான திட்ட அறிக்கை தயார்‌ செய்யப்பட்டுள்ள மதுரை-தூத்துக்குடி தொழில்‌ மேம்பாட்டு வழித்தடத்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்துவதற்காக சிறப்பு செயலாக்க முகமை (Special Purpose Vehicle) ஒன்று ஏற்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.33 · ¶63 · source PDF ↗ · on the map →

2015-16 new project AIADMK

“the Tamil Nadu Infrastructure Development Board (TNIDB) has approved the formation of the Madurai-Thoothukudi Industrial Corridor.”
“மாநிலத்தில்‌ சமச்சீரான தொழில்‌ வளர்ச்சியை ஊக்குவிக்கும்‌ நோக்கத்தோடு, மதுரை-தூத்துக்குடி தொழில்‌ மேம்பாட்டு வழித்தடத்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்த தமிழ்நாடு தொழில்‌ கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்‌ ஒப்புதல்‌ அளித்துள்ளது. தென்‌ மாவட்டங்களுக்கான ஒரு சிறப்புச்‌ சலுகைத்‌ தொகுப்பும்‌ ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள்‌, காப்பீட்டு நிறுவனங்கள்‌ மற்றும்‌ புகழ்பெற்ற தனியார்‌ நிதி நிறுவனங்களோடு இணைந்து தமிழ்நாடு கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்தையும்‌ இந்த வாரியம்‌ அமைக்க உள்ளது. தனியாரிடமிருந்து முதலீடுகளைத்‌ திரட்டி, அரசுத்‌ திட்டங்கள்‌, அரசுத்‌ துறை-தனியார்‌ துறை பங்களிப்புத்‌ திட்டங்கள்‌ மற்றும்‌ சிறப்பு வழித்தட மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ பணிகள்‌ உள்ளிட்ட தனியார்துறை திட்டங்களுக்கும்‌ இந்நிறுவனம்‌ மூலம்‌ கடனுதவி வழங்கப்படும்‌. குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்கள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.36 · ¶57 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.25,000 crores new project investment target AIADMK · revised

“The Madurai-Thoothukudi Industrial Corridor project will help us to bring an investment of about Rs.25,000 crores with an employment potential for one lakh persons.”

tnbudget_2016-17_speech_en_revised · p.41 · ¶78 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 policy AIADMK

“The efforts taken by the Government to implement the Madurai-Thoothukudi industrial corridor are expected to change the pace of industrial development in the southern districts of Tamil Nadu.”

tnbudget_2017-18_speech_en · p.41 · ¶74 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector