Culture & tourism · dormant
Massive tourism promotion project
2 budgets named it 2 year span 100 ₹ crore allocated AIADMK government
First announced in 2019-20 and named again in 1 later budget, most recently 2020-21.
Allocated by budget year
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2019-20 Rs.100 crore
“this Government will launch a massive tourism promotion project to further attract domestic and international tourists by identifying specific circuits for western tourists, Asian tourists, domestic tourists and upgrading identified centres in these circuits with quality amenities and infrastructure.”
“சுற்றுலாத் துறையில் மாநிலத்திற்கு உள்ள வாய்ப்புகளை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் தரமான சுற்றுலா சுற்றுகளைக் கண்டறிந்து அந்தச் சுற்றுக்களில் இடம் பெற்றுள்ள மையங்களில் அடிப்படை வசதிகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு மகத்தானதொரு திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். அத்தகைய சிறந்த சுற்றுலாத் தலங்களுக்கு அவசியமான சுற்றுலா சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளான, உணவகங்கள், விடுதிகள் மற்றும் போக்குவரத்து போன்றவை அரசு தனியார் பங்களிப்பு முறையில் சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்தப்படும். இதனால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் திட்டத் தயாரிப்பு நிதியினைப் பயன்படுத்தி, இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 2019-2020 ஆம் ஆண்டில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக, வரவு-செலவு திட்டத்தில் 100 கோடி ரூபாய் தொடக்க முதலீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.65 · ¶116 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.2,000 crore
“The over all cost of the project including upgradation of basic infrastructure and provision of commercial hospitality and logistics infrastructure is expected to be Rs.2,000 crore. Funding will be on a PPP basis with support from the Tamil Nadu Infrastructure Fund and private investors.”
“தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், 295 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்துவதற்கு கண்டறியப்பட்டு, அவை ஆறு சுற்றுலாச் சுற்றுகளாக வகுக்கப்பட்டுள்ளன. விரிவான பகுதி மேம்பாட்டு அணுகுமுறையை கடைப்பிடித்து, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சுற்றுலாத் தலங்களில் செய்துத் தருவதற்கு பெருந்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும். பழமையான தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தைத் தூண்டும் புதிய வகையில் காட்சிப்படுத்துவதன் மூலம், மேலும் அதிக சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுவர். அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாடு, வணிக ரீதியிலான விருந்தோம்பல் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உட்பட இத்திட்டத்திற்கான ஒட்டுமொத்தச் செலவு மதிப்பீடு 2,000 கோடி ரூபாயாகும். இத்திட்டத்திற்கு, அரசு-தனியார் பங்களிப்பு முறையில், தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதியம் மற்றும் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶155) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.85 · ¶155 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Mamallapuram tourism promotion package · 2020-21
- runs alongside Tourism circuits (Heritage/Religious/Eco) · 2011-12 –2016-17
- runs alongside Tourism Policy · 2023-24
Nearby in the same sector
- Renovation of 250 ancient temples · 6 years
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years