Other · dormant

Media Centre and Multimedia Transmission Centre

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and not named in any budget since.

See it on the map → All Other projects →

What each budget said, year by year

2012-13 new project AIADMK

“A Media Centre and a Multimedia Transmission Centre will also be established shortly at the Secretariat so as to enable reporters and correspondents to send news, photographs and video clippings to their organisations instantly without any cost.”
“இந்த அரசு 2011 ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ ஆட்சிப்‌ பொறுப்பேற்றவுடன்‌ பத்திரிக்கையாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும்‌, குடும்ப ஓய்வூதியத்தை 2,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும்‌ உயர்த்தி வழங்கியது. பத்திரிக்கைத்‌ துறையில்‌ பணியாற்றி ஒய்வு பெற்ற பத்திரிக்கையாளர்கள்‌ அதிக எண்ணிக்கையில்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ வகையில்‌, அவர்களின்‌ பணிக்கொடை உச்ச வரம்பு தகுதி ஒரு லட்சம்‌ ரூபாயிலிருந்து இரண்டு லட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்படும்‌. மேலும்‌, பணியில்‌ இருக்கும்‌ போது பெறும்‌ ஆண்டு வருமானத்திற்கான உச்ச வரம்பு தகுதி 1.20 லட்சம்‌ ரூபாயிலிருந்து இரண்டு லட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்படும்‌. பத்திரிக்கையாளர்கள்‌ செய்தி சேகரித்து சிரமமின்றி செய்திகளை அனுப்புவதற்கு ஏதுவாக அவர்களுக்கான அறை தலைமைச்‌ செயலகத்தில்‌ புதுப்பிக்கப்பட்டது. பத்திரிக்கையாளர்கள்‌, செய்தி, புகைப்படங்கள்‌, வீடியோ போன்றவற்றை தங்கள்‌ பத்திரிகைகளுக்கு நொடிப்பொழுதில்‌ செலவின்றி அனுப்பும்‌ வகையில்‌, ஒரு ஊடக மையமும்‌, ஊடக பரிமாற்று மையமும்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌ விரைவில்‌ திறக்கப்படும்‌. வரிகள்‌ 131 இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு மதிப்புக்‌ கூட்டு வரி விகிதத்திலும்‌, மதுபானங்கள்‌, பீர்‌ ஆகியவற்றின்‌ மீதான மாநில கலால்‌ வரியிலும்‌ சில மாற்றங்களைக்‌ கொண்டுவந்தது. சில ஆவணங்களின்‌ பதிவுக்‌ கட்டணங்களிலும்‌ சில மாற்றங்களைக்‌ கொண்டு வந்தோம்‌. இதனால்‌ 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ இந்த அரசால்‌ தொடங்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களுக்குத்‌ தேவையான கூடுதல்‌ நிதித்‌ துவையை ஓரளவு ஈடு செய்ய முடிந்தது. அதே சமயம்‌, சமையல்‌ எரிவாயு, உரம்‌, பூச்சிக்கொல்லி, பயிர்‌ ஊட்டச்சத்து, விவசாயக்‌ கருவிகள்‌, நுண்பாசனத்திற்கான உபகரணங்கள்‌ ஆகியவற்றின்‌ மீதான மதிப்பு கூட்டுவரி முழுமையாக விலக்கிக்‌ கொள்ளப்பட்டது. எனினும்‌, பொருளாதார மந்த நிலையின்‌ காரணமாக நாம்‌ எதிர்பார்த்த அளவிற்கு வருவாய்‌ வரவு இல்லை. இருந்தபோதிலும்‌, வரவு-செலவு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னர்‌ நடத்தப்பட்ட வணிகர்கள்‌, தொழில்‌ கூட்டமைப்புகளுக்கான கூட்டத்தில்‌ எழுப்பப்பட்ட கோரிக்கைகளின்‌ அடிப்படையிலும்‌, இதர கோரிக்கைகளின்‌ அடிப்படையிலும்‌ நுகர்வோருக்கு பயன்‌ அளிக்கும்‌ வகையில்‌ கீழ்க்கண்ட பொருட்களுக்கு வரிச்சலுகைகள்‌ வழங்கப்படும்‌ :- ௩ கோதுமை மீது தற்போது விதிக்கப்படும்‌ 2 சதவீத மதிப்புக்‌ கூட்டு வரி முற்றிலும்‌ விலக்கிக்‌ கொள்ளப்படும்‌. ௩ ஓட்ஸ்‌ மீது தற்போது விதிக்கப்படும்‌ 5 சதவீத மதிப்புக்‌ கூட்டு வரி முற்றிலும்‌ விலக்கிக்‌ கொள்ளப்படும்‌. =" சுற்றுச்சூழலுக்கு உகந்த சாதனங்களை ஊக்குவிக்கும்‌ பொருட்டு, மின்‌ சக்தியால்‌ இயங்கக்கூடிய இரு சக்கர வாகனங்களுக்கு (£-0॥65), விதிக்கப்படும்‌ 14.5 சதவீத மதிப்புக்‌ கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்‌. ௩ மின்சாரத்தை சேமிக்கும்‌ சாதனங்களை ஊக்குவிக்கும்‌ பொருட்டு காம்பேக்ட்‌ ப்ளோரசண்ட்‌ விளக்குகள்‌ மற்றும்‌ காம்பேக்ட ப்ளோரசண்ட்‌ குழல்‌ விளக்குகளுக்கு, தற்போது விதிக்கப்படும்‌ 14.5 சதவீத மதிப்புக்‌ கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்‌. ௩ பெருகிவரும்‌ சர்க்கரை நோயினை கருத்தில்‌ கொண்டு, “இன்சுலின்‌” மருந்துகளின்‌ விலையினை குறைக்கும்‌ பொருட்டு, அதன்மீது தற்போது விதிக்கப்படும்‌ 5 சதவீத மதிப்புக்‌ கூட்டு வரி முற்றிலும்‌ விலக்கிக்‌ கொள்ளப்படும்‌. உ உள்ளூர்‌ தீக்குச்சித்‌ி தொழிற்சாலைகள்‌ வெளிச்சந்தைப்‌ போட்டியை சமாளிக்கும்‌ வண்ணம்‌, மரக்‌ குச்சிகள்‌ மற்றும்‌ மரப்‌ பட்டைகளுக்கு (splints and veneers) தற்போது விதிக்கப்படும்‌ 14.5 சதவீத மதிப்புக்‌ கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்‌. ௩ பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளின்‌ சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த அரசு எடுத்துவரும்‌ பல்வேறு முயற்சிகளின்‌ தொடர்ச்சியாக, சானிடரி நேப்கின்கள்‌ மற்றும்‌ டயாஃபர்கள்‌ (Sanitary napkins and diapers) தற்போது விதிக்கப்படும்‌ 14.5 சதவீத மதிப்புக்‌ கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்‌. உ கையினால்‌ தயாரிக்கப்படும்‌ பூட்டுகளுக்கு விதிக்கப்படும்‌ 5 சதவீத மதிப்புக்‌ கூட்டு வரி முற்றிலும்‌ விலக்கிக்‌ கொள்ளப்படும்‌. * பாலூட்டும்‌ புட்டிகள்‌, பாலூட்டும்‌ காம்புகள்‌ ஆகியவற்றிற்கு விதிக்கப்படும்‌ 5 சதவீத மதிப்புக்‌ கூட்டு வரி முற்றிலும்‌ விலக்கிக்‌ கொள்ளப்படும்‌. ௩ போக்குவரத்து மற்றும்‌ தொழிற்சாலைப்‌ பாதுகாப்பினை மேம்படுத்தும்‌ பொருட்டு, தலைக்கவசத்திற்கு விதிக்கப்படும்‌ 5 சதவீத மதிப்புக்‌ கூட்டு வரி முற்றிலும்‌ விலக்கிக்‌ கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶130) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.84 · ¶130 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector