Agriculture · dormant
National Agricultural Insurance Scheme (NAIS) and weather stations
2 budgets named it 2 year span 253 ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2011-12
“In order to protect farmers from the vagaries of the Monsoon, the National Agricultural Insurance Scheme (NAIS) will be implemented extensively in all districts.”
“வானிலை மாற்றங்களால் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து விவசாயிகளை மீட்பதை இந்த அரசு முக்கிய பணிகளுள் ஒன்றாகக் கருதுகிறது. பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் பொருட்டு, தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தற்போது இத்திட்டத்தில் பயன்பெறும் எட்டு இலட்சம் விவசாயிகளின் எண்ணிக்கை நடப்பாண்டில் இரு மடங்காக உயர்த்தப்படும். தற்போது, முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் வானிலையை அடிப்படையாகக் கொண்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டம் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும். மாநிலத்தில், வட்டார அளவில் 211 தானியங்கி வானிலை மையங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 88 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இப்பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் இணையதளம், குறுந்தகவல் ஆகியவற்றின் மூலம் வானிலை தொடர்பான தகவல்கள், நோய்கள், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த தடுப்பு முன்னெச்சரிக்கைகளை விவசாயிகள் பெற்றிட இயலும். இத்துடன் விலை, வேளாண் தொடர்பான பிற விவரங்களை தானியங்கி பரிமாற்றம் மூலம் விவசாயிகளுக்குக் கொண்டு செல்ல இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். கால்நடைப் பராமரிப்பு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶29) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.18 · ¶29 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.252.65 crores
“This Government has set apart a sum of Rs.252.65 crores towards State's share of premium as well as excess compensation to be paid to farmers.”
“வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் உற்பத்தி இழப்புகளிலிருந்து பயிர் காப்பீடு, விவசாயிகளை பாதுகாக்கிறது. காப்பீட்டுத் தொகையில் மாநில அரசின் பங்கு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றுக்காக அரசு 252.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 2010-2011 ஆம் ஆண்டில் 8.18 லட்சமாக இருந்த பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கையானது, 2011-2012 ஆம் ஆண்டில் 8.48 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். வரும் நிதியாண்டில் 10 லட்சம் விவசாயிகளை பயிர்க் காப்பீட்டின் கீழ் கொண்டுவர இந்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.22 · ¶32 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years