Agriculture · dormant

National Horticulture Mission

5 budgets named it 6 year span 545 ₹ crore allocated AIADMK government 1 district

First announced in 2011-12 and named again in 4 later budgets, most recently 2016-17. Districts: 22.

Allocated by budget year

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2011-12 ` 145 crore enhancement AIADMK · revised

“the allocation under the National Horticulture Mission will also be stepped up from ```` 91.18 crores in 2010-2011 to ```` 145 crore in 2011-2012.”
“சிறந்த தொழில்நுட்ப உத்திகளை ஒருங்கிணைந்த முறையில்‌ கடைப்பிடிக்க, நடைமுறையில்‌ உள்ள தேசிய வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டம்‌, தேசிய உணவுப்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌, விரைவுபடுத்தப்பட்ட பயறு வகை உற்பத்தித்‌ திட்டம்‌, நீர்வள நிலவளத்‌ திட்டம்‌, தேசிய தோட்டக்கலை இயக்கம்‌, நுண்ணீர்‌ பாசனத்திற்கான தேசிய இயக்கம்‌ ஆகியவை பண்ணை அளவில்‌ ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்‌ தேசிய வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2010-2011 ஆம்‌ ஆண்டு, 197 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இந்நிதியாண்டில்‌ 467 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே 2010-2011 ஆம்‌ ஆண்டில்‌ தேசிய தோட்டக்கலை இயக்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 91.18 கோடி ரூபாய்‌, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 145 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶22) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.13 · ¶22 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.21.50 crores continuation AIADMK

“We have allocated Rs.21.50 crores under the National Horticulture Mission in the Budget Estimates for 2012-2013 as the State's share to make the overall outlay of Rs.150 crores on this scheme.”
“2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, தேசிய வேளாண்மை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 483 கோடி ரூபாய்‌ செலவில்‌ புதிய திட்டப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்திற்காக 500 கோடி ரூபாய்‌ வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-2012 ஆம்‌ ஆண்டு 25.03 இலட்சம்‌ ஏக்கர்‌ என்று இருந்த திருந்திய நெல்‌ சாகுபடி பரப்பு 2012-2013 ஆம்‌ ஆண்டு 27.55 இலட்சம்‌ ஏக்கர்‌ என உயர்த்தப்படும்‌. வரும்‌ ஆண்டில்‌ 15,000 ஏக்கரில்‌ நவீன கரும்பு சாகுபடி உற்பத்தி திட்டம்‌ (sustainable sugarcane initiative) செயல்படுத்தப்படும்‌. பயறு உற்பத்தியை அதிகரித்திட, திருந்திய பயறு சாகுபடி முழு கிராம அடிப்படையில்‌ 1.6 லட்சம்‌ ஏக்கர்‌ பரப்பில்‌ செயல்படுத்தப்படும்‌ வேளாண்‌ உற்பத்தித்‌ திறனை உயர்த்த, தரமான விதைகள்‌ கிடைக்கும்‌ வகையில்‌, உயர்‌ ரகங்கள்‌, வீரிய ரகங்களுக்கான விதைகளை பெருமளவில்‌ உற்பத்தி செய்து வழங்குவதற்காக தனியார்‌ உற்பத்தியாளர்களையும்‌ இணைத்து ஒரு திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, தேசிய தோட்டக்கலை இயக்கம்‌ ரூபாய்‌ 145 கோடி செலவில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தைப்‌ பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின்‌ உற்பத்தியை பெருக்குவதற்கான இந்த அரசின்‌ முயற்சிகள்‌ தொடரும்‌. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 150 கோடி ரூபாயாக இருக்கும்‌. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ மாநிலத்தின்‌ பங்காக 2150 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு இதற்கென செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.20 · ¶30 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.140 crores continuation AIADMK

“The allocation for the National Horticulture Mission (NHM) will be Rs.140 crores in 2013-2014 and Rs.21 crores has been provided as the State's share in the Budget Estimates 2013-2014.”

financedept_2013-14_speech_en · p.15 · ¶32 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.115 crore continuation AIADMK

“In the coming financial year, NHM will be implemented with an outlay of Rs.115 crore in 22 Districts.”
“விவசாயிகளின்‌ வருவாயை உயர்த்தும்‌ நோக்கத்துடன்‌ 22 மாவட்டங்களில்‌ தேசியத்‌ தோட்டக்கலை இயக்கத்தில்‌, அதிக வருவாய்‌ தரக்கூடிய தோட்டப்‌ பயிர்களைப்‌ பயிர்‌ செய்தல்‌ மற்றும்‌ பயிர்‌ பன்முனையாக்கல்‌ (Crop diversification) ஆகியன ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்களில்‌, தேசிய வேளாண்மை வளர்ச்சித்‌ திட்டம்‌ உள்ளிட்ட மற்ற திட்டங்களில்‌ உள்ள நிதி ஆதாரங்களைப்‌ பயன்படுத்தி இந்த நோக்கம்‌ எய்தப்பட்டு வருகின்றது. வரும்‌ நிதியாண்டில்‌, 115 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தேசியத்‌ தோட்டக்கலை இயக்கம்‌ மேற்கூறிய 22 மாவட்டங்களில்‌ செயல்படுத்தப்படும்‌. எஞ்சியுள்ள மாவட்டங்களில்‌, தேசிய வேளாண்மை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ நிதியைப்‌ பயன்படுத்தி, தோட்டப்பயிர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. உயர்‌ அடர்த்தி சாகுபடி, பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறை (Protected cultivation), மாநகரைச்‌ சுற்றியுள்ள பகுதிகளில்‌ காய்கறி சாகுபடித்‌ தொகுப்புகளை அமைத்தல்‌, இத்தொகுப்புகளை பண்ணைப்‌ பசுமை காய்கறிக்‌ கடைகளோடு, குறிப்பாக, கூட்டுறவு அமைப்புகள்‌ மூலமாக ஒருங்கிணைத்தல்‌ ஆகியன இத்திட்டத்தின்‌ முக்கியக்‌ கூறுகளாக இருக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶27) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.16 · ¶27 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.123 crores continuation AIADMK · interim

“includes Rs.123 crores under National Horticulture Mission”
“வேளாண்மைத்‌ துறைக்கு 2010-2011 ஆம்‌ ஆண்டில்‌ 2,072.43 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீட்டை, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 6,503.40 கோடி ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்கத்திற்கு 123 கோடி ரூபாயும்‌, பண்ணை இயந்திரமயமாக்கல்‌ திட்டத்திற்கு 100 கோடி ரூபாயும்‌ உட்பட, வேளாண்‌ துறைக்கு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மொத்தமாக 6,938.57 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கூட்டுறவு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶25) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.19 · ¶25 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector