Agriculture · dormant

Poultry promotion in non-traditional areas

6 budgets named it 6 year span 175 ₹ crore allocated AIADMK government

First announced in 2013-14 and named again in 5 later budgets, most recently 2018-19.

Allocated by budget year

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2013-14 Rs.25 crores continuation AIADMK

“During 2013-2014, Rs.25 crores will be set apart to promote poultry in non-traditional areas.”
“ஒசூரில்‌ 45.96 கோடி ரூபாய்‌ செலவில்‌ கோழி உற்பத்தி மற்றும்‌ மேலாண்மை நிலையம்‌ அமைக்கப்பட்டு வருகிறது. கோழி வளர்ப்பு பிரபலமாகாத பகுதிகளிலும்‌ கோழி வளர்ப்பை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள்‌ நல்ல பலன்களை அளிக்கத்‌ தொடங்கியுள்ளன. 2013-2014 ஆம்‌ ஆண்டிலும்‌, இத்தகைய பகுதிகளில்‌ கோழி வளர்ப்பை ஊக்குவிக்க 25 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. மீனளம்‌ மீனவா நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.21 · ¶48 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.25 crore continuation AIADMK

“A new scheme for poultry development in the non-poultry backward regions of the State is being implemented with an annual outlay of Rs.25 crore.”
“மாநிலத்தில்‌ கோழி வளர்ப்புத்‌ தொழிலில்‌ வளர்ச்சி பெறாத பின்தங்கிய பகுதிகளில்‌, இத்தொழிலை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுதோறும்‌ 25 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ ஒரு புதிய திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில்‌, தலா 1,000-லிருந்து 5,000 பறவைகள்‌ கொண்ட 514 கறிக்கோழிப்‌ பண்ணைகளும்‌, தலா 250-லிருந்து 500 பறவைகள்‌ கொண்ட 730 நாட்டுக்கோழிப்‌ பண்ணைகளும்‌ இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. 2014-2015 ஆம்‌ ஆண்டிலும்‌ இத்திட்டத்தைத்‌ தொடர்ந்து செயல்படுத்திட 25 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶34) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.19 · ¶34 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.25 crores continuation AIADMK

“This Government's efforts to promote poultry in non- traditional areas and backyard poultry, particularly in tribal areas, will continue and an allocation of Rs.25 crores is made for the year 2015-2016.”
“கால்நடை பராமரிப்புத்‌ துறையின்‌ வளர்ச்சிக்கு இந்த அரசு உயர்‌ முன்னுரிமை அளித்து வருகிறது. விலையில்லா கறவைப்‌ பசுக்கள்‌, செம்மறி ஆடுகள்‌, வெள்ளாடுகள்‌ வழங்கும்‌ முன்னோடித்‌ திட்டங்கள்‌ ஏழை எளியோருக்குப்‌ பெரும்‌ பயனளித்துள்ளன. 2015-2016 ஆம்‌ ஆண்டிலும்‌, 12,000 கறவைப்‌ பசுக்களும்‌, ஆறு இலட்சம்‌ செம்மறி ஆடுகள்‌, வெள்ளாடுகளும்‌ தொடர்ந்து வழங்கிட 24190 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில்‌ கோழி வளர்ப்புத்‌ தொழில்‌ வளர்ச்சியடையாத பின்தங்கிய பகுதிகளில்‌ கோழி வளர்ப்பதை ஊக்குவிப்பதற்கும்‌, குறிப்பாக பழங்குடியினர்‌ வாழும்‌ பகுதிகளில்‌ கோழி வளர்ப்பினை ஊக்குவிப்பதற்கும்‌ இந்த அரசு மேற்கொண்டுவரும்‌ முயற்சிகள்‌ தொடரும்‌. இதற்காக 2015-2016 ஆம்‌ ஆண்டிற்கு 25 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶31) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.21 · ¶31 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.25 crores continuation AIADMK · revised

“Further, a sum of Rs.25 crores is allocated for the 'Poultry Development Scheme' to promote broiler farms and native chicken farms in dry areas and tribal areas.”
“2016-2017 ஆம்‌ ஆண்டில்‌, 100 கால்நடை கிளை மையங்கள்‌ கால்நடை மருந்தகங்களாகத்‌ தரம்‌ உயர்த்தப்பட்டு, அவற்றுக்குத்‌ தேவையான கட்டட வசதிகளும்‌ ஏற்படுத்தப்படும்‌. கால்நடை பராமரிப்புத்‌ துறையின்‌ கட்டமைப்பு வசதிகளை நபார்டு வங்கி நிதியுதவியுடன்‌ வலுப்படுத்துவதற்காக, 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 90.27 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோழிப்‌ பண்ணை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ மூலம்‌ பழங்குடியினர்‌ வாழும்‌ பகுதிகளிலும்‌, வறட்சியான பகுதிகளிலும்‌ கறிக்கோழிப்‌ பண்ணைகளையும்‌, நாட்டுக்‌ கோழிப்‌ பண்ணைகளையும்‌ ஊக்குவிக்க 25கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, கால்நடை பராமரிப்புத்‌ துறைக்காக 1,188.97 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.24 · ¶43 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.25 crore continuation AIADMK

“The Government will continue to implement Poultry Development and Fodder Development schemes, each with a budgetary allocation of Rs.25 crore in 2017-2018.”
“விலையில்லா கறவைப்‌ பசுக்கள்‌, வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகள்‌ வழங்கும்‌ முன்னோடித்‌ திட்ட முயற்சிகளைத்‌ தொடர்ந்திடும்‌ வகையில்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ ஏழைப்‌ பெண்களுக்கு 12,000 கறவைப்‌ பசுக்களும்‌, 1.50 இலட்சம்‌ ஏழைக்‌ குடும்பங்களுக்கு ஆறு இலட்சம்‌ வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகளும்‌ வழங்கப்படும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இத்திட்டங்களுக்காக 182 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ கோழிப்‌ பண்ணை வளர்ச்சித்‌ திட்டத்தையும்‌, தீவன உற்பத்தித்‌ திட்டத்தையும்‌, தலா 25 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும்‌. தமிழகத்தில்‌ உள்ள நாட்டு மரபின மாடுகளைப்‌ பாதுகாக்கும்‌ நோக்கத்தில்‌, காங்கேயம்‌, பர்கூர்‌ மற்றும்‌ உம்பளாச்சேரி ஆகிய இன மாடுகளுக்கான இனப்‌ பாதுகாப்புத்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்துவதற்காக இந்த அரசு கூடுதலாக நிதி உதவி வழங்குவதுடன்‌, புலிகுளம்‌ மற்றும்‌ ஆலம்பாடி போன்ற இதர உள்ளூர்‌ இனங்களைப்‌ பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும்‌ மேற்கொள்ளும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.22 · ¶36 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.50 crore continuation AIADMK

“In addition, Rs.50 crore has been allocated in the budget for poultry development and Rs.25 crore has been allocated for the Fodder Development schemes.”
“விலையில்லா கறவைப்‌ பசுக்கள்‌, வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகள்‌ வழங்கும்‌ திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும்‌. 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌ இதுவரை, 75,398 ஏழைப்‌ பெண்களுக்கு தலா ஒரு கறவைப்‌ பசுவும்‌, 8.71 இலட்சம்‌ ஏழைக்‌ குடும்பங்களுக்கு 34.85 இலட்சம்‌ வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகளும்‌ வழங்கப்பட்டுள்ளன. 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 12,000 கறவைப்‌ பசுக்களையும்‌, 1.50 இலட்சம்‌ பயனாளிகளுக்கு ஆறு இலட்சம்‌ வெள்ளாடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகளையும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ இந்த அரசு வழங்கும்‌. இதற்காக, வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 248.58 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, கோழிப்‌ பண்ணை வளர்ச்சித்‌ திட்டத்திற்காக 50 கோடி ரூபாயும்‌, தீவன உற்பத்தித்‌ திட்டத்திற்காக 25 கோடி ரூபாயும்‌ 2018-2019 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.24 · ¶36 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector