Rural development · dormant

Pudhuvazhvu Thittam (TN Empowerment and Poverty Reduction Project)

5 budgets named it 5 year span 1,604 ₹ crore allocated 950 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 4 later budgets, most recently 2015-16.

Allocated by budget year

See it on the map → All Rural development projects →

What each budget said, year by year

2011-12 ` 950 crores continuation AIADMK · revised

“This project has now been extended to ten more districts covering an additional 50 blocks to target 3.80 lakh more poor and vulnerable households with an outlay of ` 950 crores. ` 315.11 crores is proposed to be spent in the year 2011-2012.”
“மத்திய அரசின்‌ சுவர்ண ஜெயந்தி கிராம சுய வேலைவாய்ப்புத்‌ திட்டம்‌, மாநில அரசின்‌ மகளிர்‌ திட்டம்‌ போன்ற திட்டங்களின்‌ கீழ்‌ சுயஉதவிக்‌ குழுக்கள்‌ உருவாக்கப்படுகின்றன. வறுமை நிலையிலிருந்து மீளும்‌ வகையில்‌, பொருளாதாரத்தை மேம்படுத்தும்‌ பல்வேறு பணிகளைச்‌ செய்வதற்காக சுயஉதவிக்‌ குழுக்களையும்‌, பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளையும்‌ வலுப்படுத்தி அவற்றின்‌ வங்கிக்‌ கடன்‌ பெறும்‌ திறனை இந்த அரசு மேம்படுத்தும்‌. தமிழகத்தில்‌, 2005 ஆம்‌ ஆண்டு முதல்‌, வறுமை ஒழிப்பிற்காக குடும்ப அளவில்‌ உதவிகள்‌ வழங்கும்‌ புதுவாழ்வுத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, இத்திட்டம்‌ 2014 ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ திங்கள்‌ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ 16 மாவட்டங்களில்‌ 70 பின்தங்கியுள்ள வட்டாரப்‌ பகுதிகளில்‌ உள்ள 2509 கிராம ஊராட்சிகளில்‌ வசிக்கும்‌ 5.8 இலட்சம்‌ வறுமைக்கோட்டிற்குக்‌ கீழ்‌ உள்ள குடும்பங்கள்‌ பயனடைந்துள்ளன. தற்போது 950 கோடி ரூபாய்‌ செலவில்‌ இத்திட்டம்‌ மேலும்‌ 10 மாவட்டங்களிலுள்ள 50 வட்டாரப்‌ பகுதிகளில்‌ வசித்து வரும்‌ வறுமைக்கோட்டிற்குக்‌ கீழ்‌ உள்ள 3.80 இலட்சம்‌ குடும்பங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 315.11 கோடி ரூபாய்‌ செலவிடப்படும்‌. இத்திட்டத்தின்‌ அடிப்படையிலேயே மத்திய அரசும்‌ தேசிய வாழ்வாதாரத்‌ திட்டத்தினை வகுத்து செயல்படுத்த உள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும்‌ அனைத்து வறுமை ஒழிப்புத்‌ திட்டங்களையும்‌ ஒருங்கிணைத்து, வறுமைக்‌ கோட்டிற்கு கீழ்‌ உள்ள ஒவ்வொரு குடும்பமும்‌ நேரடியாகப்‌ பயன்பெறும்‌ வகையில்‌ வறுமை ஒழிப்புத்‌ திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்‌. இதன்‌ மூலம்‌ அக்குடும்பங்களின்‌ சமூகப்‌ பொருளாதார முன்னேற்றங்கள்‌ கண்காணிக்கப்பட்டு அவர்கள்‌ வறுமையிலிருந்து விடுபடும்‌ வரை அவர்களுக்குத்‌ தேவையான உதவிகள்‌ செய்யப்படும்‌. நகர்ப்புர வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶107) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.64 · ¶107 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.350 crores continuation project cost AIADMK

“Implemented initially in 70 backward blocks in 16 districts, now the coverage of the project has been extended to 50 more blocks in 10 more districts, thus benefiting a total number of 9.3 lakh households at a cost of Rs.950 crores. In the coming financial year, this project will be implemented with an outlay of Rs.350 crores.”
“கிராமப்புற வறுமையைக்‌ குறைத்திட, இலக்கின்‌ அடிப்படையிலான, புதுமையான, நடவடிக்கைகள்‌ அவசியமானவை. நமது மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ 2005 ஆம்‌ ஆண்டு தொடங்கப்பட்ட உலக வங்கி உதவியுடனான புதுவாழ்வுத்‌ திட்டத்தை இந்த அரசு செம்மையாகச்‌ செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தை அடிப்படையாகக்‌ கொண்டு இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில்‌, 16 மாவட்டங்களில்‌ உள்ள 70 பின்தங்கிய வட்டாரங்களில்‌ செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம்‌, தற்போது மேலும்‌ 10 மாவட்டங்களில்‌ உள்ள 50 வட்டாரங்களுக்கும்‌ விரிவுபடுத்தப்பட்டு, 9.3 லட்சம்‌ குடும்பங்களுக்கு பலன்‌ அளிக்கும்‌ வகையில்‌, 950 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும்‌ நிதியாண்டில்‌ இத்திட்டம்‌ 350 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌. கிராமப்‌ பகுதிகளில்‌, குறிப்பாக, எளியோர்‌, சமுதாயத்தின்‌ அடித்தட்டு மக்களிடம்‌, சமூகப்‌ பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உந்துகோலாக மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ உருவெடுத்துள்ளன. தற்போது, நமது மாநிலத்தில்‌ 82.84 இலட்சம்‌ உறுப்பினர்களையும்‌, 3,225 கோடி ரூபாய்‌ சேமிப்பையும்‌ கொண்ட, 5.35 இலட்சம்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ செயல்பட்டு வருகின்றன. மகளிர்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 15,015 கோடி ரூபாய்‌ அளவிற்கு கடனுதவியும்‌ பெற்றுள்ளன. இவற்றோடு, கிராமப்புற வறுமையைக்‌ குறைக்கும்‌ நோக்கில்‌ 'ஆஜீவிகா£' என புதிதாகப்‌ பெயரிடப்பட்டுள்ள, மத்திய அரசுத்‌ திட்டமான தேசிய கிராமப்புற வாழ்வாதாரத்‌ திட்டம்‌”, தமிழ்நாட்டில்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டு முதல்‌ தொடங்கி செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶13) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.9 · ¶13 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.350 crores continuation AIADMK

“A sum of Rs.350 crores has been provided for the Pudu Vazhvu Project and Rs.100 crores has been provided for the Tamil Nadu State Rural Livelihood Mission during 2013-2014 as the State’s share.”

financedept_2013-14_speech_en · p.10 · ¶20 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.49.05 crore continuation AIADMK

“Further, an allocation of Rs.49.05 crore has been made for the Pudhu Vaazhvu Scheme during 2014-2015.”
“தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம்‌ பொருளாதார வாய்ப்புகளைத்‌ தரக்‌ கூடிய குறிப்பிட்ட பணிகளை, குழும முறையில்‌ ஊக்குவித்து வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக்‌ கொண்டுள்ளது. இதுவரை, பொருளாதார வாய்ப்புகளைத்‌ தரத்தக்க பணிகளின்‌ அடிப்படையில்‌ 161 குழுமங்கள்‌ இத்திட்டத்தால்‌ உருவாக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில்‌ 6,000 கோடி ரூபாய்‌ அளவிற்கு கடன்‌ இணைப்பு வசதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 3,847.07 கோடி ரூபாய்‌ அளவிற்கு கடன்‌ இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. திறன்‌ மேம்பாட்டு முகாம்கள்‌ மூலமாக இளைஞர்களின்‌ திறன்‌ தேவை மதிப்பிடப்பட்டு, 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ 14 கோடி ரூபாய்‌ செலவில்‌ 14,050 இளைஞர்களுக்கு திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கு தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்திற்கென 253.92 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, புதுவாழ்வுத்‌ திட்டத்திற்காக 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கு 49.05 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶6) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.4 · ¶6 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.255.04 crores continuation AIADMK

“A sum of Rs.255.04 crores is allocated for this scheme in the Budget Estimates 2015-2016.”
“பன்முகத்தன்மையுடைய வறுமையைப்‌ போக்கிட விரிவான ஓர்‌ அணுகுமுறை தேவை. இத்தகைய அணுகுமுறையை உள்ளடக்கிய புதுமையான வழிமுறைகளைக்‌ கொண்ட புதுவாழ்வுத்‌ திட்டம்‌ உலக வங்கியின்‌ உதவியுடன்‌ 2005 ஆம்‌ ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்தத்‌ திட்டம்‌ 26 மாவட்டங்களில்‌ உள்ள 120 வட்டாரங்களில்‌ 4,174 கிராம ஊராட்சிகளில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1,667 கோடி ரூபாய்‌ மொத்த நிதி ஒதுக்கீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌ இத்திட்டத்தின்கீழ்‌, இதுவரை 1.64 இலட்சம்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ உட்பட, மொத்தம்‌ 9.63 இலட்சம்‌ குடும்பங்கள்‌ பயனடையும்‌ வகையில்‌, 1436 கோடி ரூபாய்‌ பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ இந்த ஆண்டு 3.27 இலட்சம்‌ இளைஞர்கள்‌ வேலை வாய்ப்பிற்கு ஏற்ற திறன்‌ பயிற்சியை பெற்றுள்ளார்கள்‌. ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வாழ்வாதார நிதி உதவியாக 2014-2015 ஆம்‌ ஆண்டுவரை 369 கோடி ரூபாய்‌ விடுவிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டத்திற்காக 255.04 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶10) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.9 · ¶10 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector