Other · completed claimed

Relief for inundated dwellings

1 budget named it 1 year span 1,276 ₹ crore allocated AIADMK government

First announced in 2016-17 and not named in any budget since.

See it on the map → All Other projects →

What each budget said, year by year

2016-17 Rs.1,276.28 crores completion claim AIADMK · interim

“Rs.1,276.28 crores to about 25,52,572 affected families whose dwellings were inundated”
“கடந்த வடகிழக்குப்‌ பருவமழைக்‌ காலத்தில்‌ பெய்த வரலாறு காணாத பெரும்‌ மழை, உயிருக்கும்‌, பொருளுக்கும்‌ கடுமையான பாதிப்பையும்‌ இழப்பையும்‌ ஏற்படுத்திச்‌ சென்றுள்ளது. ஆயினும்‌, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையின்‌ கீழ்‌ போர்க்கால அடிப்படையில்‌, திறமையான, ஒருங்கிணைக்கப்பட்ட மீட்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணிகள்‌ மேற்கொண்டதன்‌ விளைவாக, குறுகிய காலத்திலேயே இயல்பு நிலை திரும்பியது. இது இந்த அரசின்‌ உறுதியான நிர்வாகத்‌ திறனுக்கு மேலும்‌ ஒரு சான்றாகும்‌. வெள்ளத்தால்‌ வீடுகள்‌ இழந்த மற்றும்‌ வீடுகள்‌ சேதமடைந்த 5,25121 குடும்பங்களுக்கு 282.91 கோடி ரூபாயும்‌, வீடுகளில்‌ வெள்ளம்‌ புகுந்து பாதிக்கப்பட்ட 25,52,572 குடும்பங்களுக்கு 1,276.28 கோடி ரூபாயும்‌ இந்த அரசால்‌ நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும்‌, 3.82 இலட்சம்‌ ஹெக்டேர்‌ பரப்பில்‌ பயிர்கள்‌ பாதிக்கப்பட்ட 4,81975 விவசாயிகளுக்கு 451.16 கோடி ரூபாய்‌ பயிர்‌ இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன்‌, 595.82 கோடி ரூபாய்‌ செலவில்‌ பொதுக்‌ கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, 3,039.24 கோடி ரூபாய்‌ வெள்ள நிவாரணத்திற்காகவும்‌, மறுசீரமைப்புப்‌ பணிகளுக்காகவும்‌ இந்த அரசு வழங்கியுள்ளது. தேசியப்‌ பேரிடர்‌ நிவாரண நிதியத்திலிருந்து 1773.78 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. மாநிலப்‌ பேரிடர்‌ நிவாரண நிதியத்திற்கு 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 713 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶22) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.16 · ¶22 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector