Energy · dormant
Replacement of distribution transformers with Ring Main Units
1 budget named it 1 year span — ₹ crore allocated 785 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2020-21 and not named in any budget since. Places named: Chennai.
Located at Chennai · Chennai district
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2020-21 Rs.785 crore
“5,692 existing distribution transformers in Chennai and its suburbs are being replaced by 11 KV Ring Main Units at a cost of about Rs.785 crore.”
“தடையில்லா, நம்பகமான மின் வசதியை தொடர்ந்து வழங்க, கிராமப்புற, நகர்ப்புரப் பகுதிகளில் மின் விநியோக உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், தற்போதுள்ள 5,692 விநியோக மின்மாற்றிகள், 785 கோடி ரூபாய் செலவில், 11 கிலோவோல்ட் வளையச் சுற்றுத் தர அமைப்புகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பிடத்தக்க பயன்பாடு மற்றும் நிதிப் பயன்கள் அளிக்கக்கூடிய, காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியையும், உயர் அழுத்த மின் பயனீட்டாளர்களின் மின் பயன்பாட்டையும் அளவிடும் தானியங்கி அளவீட்டுக் கருவிகளை நிறுவுவதற்கான திட்டத்தை, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் பெரிய அளவில் செயல்படுத்தி உள்ளது. திறமையான மின்சக்திக் கணக்கீடு மற்றும் தணிக்கையை திறம்பட மேற்கொள்வதற்கு, அனைத்து மின் மாற்றிகளிலும் அளவீட்டுக் கருவிகள் பொருத்தப்படும். சென்னை திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் பகுதி அடிப்படையிலான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தியாகராய நகர் பகுதியில் 1.41 இலட்சம் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சென்னை நகரின் பிற பகுதிகளுக்கும் இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாகப் பொருத்தப்படும். மூலதனக் கணக்கு பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, மூலதன உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, 2019-2020 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 31220.89 கோடி ரூபாய் மூலதனச் செலவினத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2020-2021 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 36,367.78 கோடி ரூபாயாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2021-2022 மற்றும் 2022-2023 ஆம் ஆண்டுகளில் 15.0 சதவீதமாக மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூலதனச் செலவினம் மற்றும் நிகர கடன்களும் முன்பணங்களும் 2021-22 ஆம் ஆண்டு 43,587.34 கோடி ரூபாயாகவும் 2022-23 ஆம் ஆண்டு 55,109.96 கோடி ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் நிதி ஒழுக்கத்தை பராமரிக்கும் அதே வேலையில் வளர்ச்சிக்கான செலவினங்களை தொடர்ந்து அதிகரிப்பதில் இந்த அரசு கொண்டுள்ள உறுதி இதன் மூலம் தெரியவருகிறது IV. வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை 2019-20 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில் மதிப்பிடப்பட்டட தொகை 14,314.76 கோடி ரூபாயைவிட வருவாய் பற்றாக்குறை அதிகரித்து 2019-20 திருத்த மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 25,07163 கோடியாக இருக்கும். மொத்த வருவாய் வரவினங்கள் 5,860.29 கோடி ரூபாயாக குறைந்து மொத்த வருவாய் செலவினங்கள் 4,896.58 கோடி ரூபாயாக உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணமாகும். வருவாய்ப் பற்றாக்குறையை முறையாக குறைப்பதன் மூலம் வருவாய்ப் பற்றாக்குறை இல்லாத நிலையை அடைவதற்கும், தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தில் கூறப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி, நிதிநிலை மேம்பாடு மற்றும் கடன் தாங்குதன்மையை உறுதி செய்யும் வகையிலும் இடைக்கால நிதி நிலவரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் செலவினங்களுக்கிடையே சமன்நிலையை பேணுவதன் மூலம் இந்த நிலையை அடைய எண்ணப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் ஆதாரங்களை மேம்படுத்த தேவையான வழிமுறைகளை ஆராய முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வளர்ச்சிக்கான செலவினங்களுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்வது மற்றும் வருவாய் செலவினங்களை தரமாக பயன்படுத்தும் விதமாக பணியாளர்கள் சீர்தீருத்தக் குழு அமைப்பது போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை வருவாய் செலவினங்களுக்காக மேற்கொண்டு செலவினங்களுக்குரிய தரத்தை மேம்படுத்த எண்ணப்பட்டுள்ளது. எனவே, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் 21617.64 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை 2021-22 ஆம் ஆண்டில் 16,893.19 கோடி ரூபாயாக குறையும். இது, 2022-23 இல் 10,970.47 கோடி ரூபாயாக மேலும் குறையும். இது மூலதனச் செலவிற்கு அதிக இடம் தரும் வகையில் உள்ளது. சில ஆண்டுகளாக, பல்வேறு நிதி பிரச்சினைகள் இருப்பினும், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை விகிதத்தை மூன்று சதவீதத்திற்குள்ளாகவே அரசு பராமரித்து வருகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் நல்ல வளர்ச்சிக்காக நிலையான நிதிக் கொள்கை மற்றும் பல முனை நிதி சேர்ப்பு நடவடிக்கைகளால் இது சாத்தியமாகும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீட்டின் படி 2.84 சதவீதம். இது நிதி வரையறையான 3 சதவீதத்திற்குள் இருக்கும். வரும் ஆண்டுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2021-22 ஆம் ஆண்டில் 2.58 சதவீதம் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 2.52 சதவீதமாக இருக்கும். V. கடன்கள் மத்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், 2019-2020-ம் ஆண்டு மற்றும் 2020-2021-ம் ஆண்டிற்கான கணக்கீடுகளுக்கு மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டிற்கான சமீபத்திய முன்மதிப்பீடு (தற்காலிகம்) பயன்படுத்தப்பட்டுள்ளது. கடன் வரவுகள் மற்றும் திரும்பச் செலுத்துதல் மதிப்பிடப்பட்டுள்ளன. 2020-21 ஆம் ஆண்டிற்கான, நிகரக் கடன் வரம்பு 62,757.80 கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், மாநில அரசு 59,209.30 கோடி ரூபாய் மட்டுமே நிகரக் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 2020-21 ஆம் ஆண்டில் 4,56,660.99 கோடி ரூபாயாகவும், மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 2183 சதவீதமாக இருக்கும். தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டம் 2003ன் நெறிமுறைக்கு உட்பட்டு, மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டின் சதவீதத்தில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 2021-22 ஆம் ஆண்டில் 2194 சதவீதமாகவும், 2022-23ஆம் ஆண்டில் 21.98 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடன் தாங்குதன்மை இருக்க வேண்டும் என்பது மாநில அரசின் நோக்கமாகும். VI. கடன் உத்திரவாதங்கள் ஒவ்வொரு ஆண்டிலும் நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 10 சதவீத அளவு, இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 2019 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 ஆம் தேதி அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின் அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 29.85 சதவீதமாகவும், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 2.62 சதவீதமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 75 சதவீதம் அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 7.5 சதவீதம் இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 2019 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 ஆம் தேதி அன்று உள்ளபடி மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின் (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 5.46 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 0.47 சதவீதமாகவும் உள்ளது. முடிவுரை தற்போது பொருளாதார மந்தநிலை நிலவினாலும், வரும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார மந்த நிலையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் போது, தமிழகம் உயர் பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வள ஆதாரங்களை கூட்டுதல் மற்றும் திறன்மிக்க வரிவசூல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக மாநிலத்தின் மொத்த வருவாயை வலுவான நிலையில் பராமரிக்க இயலும். வளர்ச்சிக்கான செலவினங்களின் மீது முதலீடு செய்யும் அதே வேளையில், நிதி சேர்ப்பு நடவடிக்கையை அடிப்படை கொள்கையாக கொண்டு, கடன் நிலைத்தன்மை மற்றும் வருவாய் மற்றும் செலவினங்களுக்கிடையேயான நிதி சமநிலையை உறுதி செய்வதன் மூலம், தமிழ்நாடு நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் வரையரைகளின்படி வருவாய் பற்றாக்குறையை வரும் காலங்களில் குறைக்க இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. RKKKKKKKK”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.63 · ¶111 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 7 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 5 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years