Environment · recurring
Restoration of Chennai Rivers and Waterways (CRRT)
3 budgets named it 14 year span 3,340 ₹ crore allocated 5,440 ₹ crore whole-project cost AIADMK / TVK governments
First announced in 2013-14 and named again in 2 later budgets, most recently 2026-27. Places named: Chennai.
Allocated by budget year
Located at Chennai · Chennai district
See it on the map → All Environment projects →
What each budget said, year by year
2013-14
“The Cooum, Adyar and Kosasthalaiyar rivers, the Buckingham Canal along with other smaller canals for a total length of 214 kilometres (kms) and 42 water bodies in the Chennai Metropolitan Area are highly degraded at present due to severe pollution.”
“கடும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால், சென்னை பெருநகர்ப் பகுதியில் உள்ள, கூவம், அடையாறு மற்றும் கொசஸ்தலையாறு போன்ற ஆறுகள், பக்கிங்காம் கால்வாய் மற்றும் சிறு கால்வாய்கள் உள்ளிட்ட, 214 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர்வழித் தடங்களும், 42 நீர்நிலைகளும் மிகவும் சீர்கெட்டுள்ளன. இந்த நீர்வழித் தடங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றின் உயிரியல் சூழலை மீட்டெடுக்க (Eco restoration) இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. நீர்பிடிப்புப் பகுதிகளை மேம்படுத்துதல், தூர்வாருதல், மாசுபடுத்தும் வடிகால்களைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு, அறிவியல்பூர்வமான திடக்கழிவு மேலாண்மை, கரைகளைச் சீரமைத்து, நடைபாதைகள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல் ஆகியவை, நதிகள் மற்றும் நீர்நிலைகளின் உயிரியல் சூழல் மீட்டெடுத்தல் பணிகளில் அடங்கும். இப்பணிகளுக்கு அதிக நிதி தேவைப்படும் என்பதால், இதற்கான சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வெளிநாட்டு நிதியுதவி கோர உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை (Chennai Rivers Restoration Trust) மூலம் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶64) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.27 · ¶64 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.3,339.90 crore
“In the next stage, the Government will take up the eco restoration of the Buckingham Canal and its drains and all the drains of the Cooum and Adyar at a total cost of Rs.5,439.76 crore. In the first phase the Government has already sanctioned an amount of Rs.1,001 crore for sewage mitigation schemes. The over all outlay includes a sum of Rs.3,339.90 crore for construction of dwelling units by the Tamil Nadu Slum Clearance Board.”
“கூவம் நதியில் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த கட்டத்தில், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களையும் கூவம், அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களையும் 5,439.76 கோடி ரூபாய் செலவில் அரசு மறுசீரமைக்கும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், நதிகளில் கழிவுநீர் கலப்பதை தவிர்க்கும் திட்டத்திற்காக அரசு ஏற்கெனவே 1001 கோடி ரூபாய் அனுமதி வழங்கியுள்ளது. ஒட்டுமொத்த செலவினத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் கட்டுமானத்திற்கான 3,339.90 கோடி ரூபாயும் அடங்கும். மீதமுள்ள நிதி, திடக்கழிவு மேலாண்மை, நகர்ப்புற நீர்நிலை மேம்பாடு, நீரோடைகள் புனரமைப்பு போன்ற பணிகளுக்காக செலவிடப்படவுள்ளது. பொதுப்பணித் துறை மூலம் 25 கோடி ரூபாய் செலவில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டம் ஒடத்துறை ஏரியை மீட்டெடுக்கும் பணிகள் 3.2 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶66) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.38 · ¶66 · source PDF ↗ · on the map →
2026-27
“Global tenders will be invited and a Detailed Feasibility Report and Detailed Project Report will be prepared to transform the Cooum and the Adyar into the very identity of Chennai.”
“நம்மில் பலர் பிறந்து வளர்ந்து, நம்மை அரவணைத்து, நம்முடன் ஒரு பகுதியாகவே இருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நமது சென்னை மாநகரம். ஒரு காலத்தில் சென்னை மாநகரத்தின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்த நதிகளான அடையாறு மற்றும் கூவம் இன்று ஒரு கழிவுநீர் நதியாக மாறியிருப்பது நம்மில் பலருக்கு வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும். தமிழ்நாட்டுனை இதற்கு முன், மாறி மாறி ஆண்ட அரசுகள் அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை சுத்தப்படுத்தவும், அழகுபடுத்தவும் பல நூறு கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரியிறைத்தும் ஆறுகளின் தன்மையில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான நாகரிகங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ, இன்கா, மெசபடோமியா ஆகியவை பெருநதிகளின் அருகிலேயே தழைத்தன. கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை அதன் இயல்பு நிலைக்குக் கொண்டு வர நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு கடுமையாக பாடுபடும். சியோல் நகரத்தின் சியோங் - கியே - சியோன் (Cheonggyecheon) நதி, சிங்கப்பூர் நகரத்தின் கல்லாங் (Kallang) நதி போன்றவை நதிகள் மறுசீரமைப்பின் மூலம், அந்நகரங்களின் உலகளவில் பேசப்படும் அடையாளங்களாக மாறிவிட்டன. கூவம் மற்றும் அடையாற்றினை சென்னையின் அடையாளமாக மாற்றுவதற்கு உலகைகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதும், குழந்தைகள் ஆனந்தக் குளியலில் ஈடுபடுவதையும், அனைத்து வயதினரும் நதிக்கரையில் உடற்பயிற்சி செய்து தூய்மையான காற்றை சுவாசிப்பதையும் நமது அரசு உறுதிசெய்யும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶112) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.56 · ¶112 · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Eco-restoration of Chitlappakkam Lake · 2020-21
- runs alongside Eco-restoration of Odathurai Eri · 2020-21
- runs alongside Pallikaranai marsh land restoration · 2011-12 –2021-22
- runs alongside Eco-restoration of lakes and wetlands · 2015-16
- runs alongside Rejuvenation of Vaigai and Noyyal Rivers · 2016-17 –2021-22
Nearby in the same sector
- Biodiversity Conservation and Greening Project · 8 years
- Pallikaranai marsh land restoration · 6 years
- Tree sapling planting programme · 6 years
- Adyar estuary ecological restoration · 5 years
- Environment Protection Fund · 4 years
- Human–animal conflict mitigation programme · 4 years