Agriculture · dormant

Seed subsidy

1 budget named it 1 year span 86 ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2011-12 ` 85.92 crores continuation AIADMK · revised

“During 2011-2012, we have set apart ` 85.92 crores for seed subsidy.”
“தரமான விதை, உரம்‌, குறைந்த வட்டியிலான கடன்‌ போன்றவை உரிய நேரத்தில்‌ விவசாயிகளுக்கு கிடைக்கப்‌ பெறுவது அவசியமாகும்‌. விரிவான விதைத்‌ திட்டம்‌ ஒன்றை இந்த அரசு தயாரித்து விவசாயிகளுக்கு தரமான விதைகள்‌ உரிய நேரத்தில்‌ கிடைப்பதை உறுதி செய்யும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ விதை மானியத்திற்காக மட்டும்‌ 85.92 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கியுள்ளது. இதே போன்று போதுமான உரங்கள்‌ கூட்டுறவு விற்பனை மையங்கள்‌ மூலமாக வழங்கப்படும்‌. உரம்‌, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மதிப்புக்‌ கூட்டு வரியிலிருந்து இவ்வரசு விலக்களித்துள்ளதால்‌ இப்பொருட்கள்‌ விவசாயிகளுக்குக்‌ குறைந்த விலையில்‌ கிடைக்கும்‌. மேலும்‌, விவசாயிகளுக்கு தடையில்லாமல்‌ உரம்‌ வழங்குவதை உறுதி செய்யும்‌ வகையில்‌, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு வழங்கப்படும்‌ வட்டியில்லா முன்பணத்தின்‌ தற்போதைய அளவு 90 கோடி ரூபாயிலிருந்து 150 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்‌. விவசாயிகளுக்கான கடன்‌ வழங்குதல்‌ மற்றும்‌ இதர சேவைகளை மேம்படுத்திட கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ வலுப்படுத்தப்படும்‌. கூட்டுறவுத்‌ துறை வாயிலாக, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, உரிய காலத்தில்‌ கடனைத்‌ திரும்பச்‌ செலுத்துவோருக்கு வட்டியில்லாப்‌ பயிர்க்கடனாக 3,000 கோடி ரூபாயினை வழங்கும்‌ உயர்‌ இலக்கினை இவ்வரசு நிர்ணயித்துள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶24) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.14 · ¶24 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector