Housing · completed claimed
Solar-powered green houses for houseless poor
First announced in 2011-12 and named again in 9 later budgets, most recently 2020-21.
Allocated by budget year
See it on the map → All Housing projects →
What each budget said, year by year
2011-12 ` 1,080 crores
“This Government will construct 60,000 green houses with solar power at a cost of ```` 1111,,,,000088880000 ccccrrrroooorrrreeeessss during 2011-2012 in rural areas for the benefit of the houseless poor.”
“கிராமப்புறங்களிலுள்ள வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு, ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி அளவில், 1.80 இலட்சம் ரூபாய் மதிப்பில், சூரிய ஒளி மூலம் மின்வசதி பெறும் 60,000 பசுமை வீடுகளை 1,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த அரசு 2011-2012 ஆம் ஆண்டில் கட்டித்தரும். இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ், தற்போது கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படும் உதவித் தொகையான 75,000 ரூபாய் ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இதில் மத்திய அரசின் மானியப் பங்கு ஒவ்வொரு வீட்டிற்கும் 33,750 ரூபாய் ஆகும். மாநில அரசின் மானியப் பங்கு தற்போதுள்ள 41,250 ரூபாய்க்கு பதிலாக 66,250 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் 1,00,553 வீடுகள் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தில் கட்டித் தரப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶106) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.63 · ¶106 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.1,080 crores
“In the coming financial year, another 60,000 houses will be taken up at a cost of Rs.1,080 crores.”
“மாண்புமிகு முதலமைச்சரின் சூரிய ஒளி மின்சக்தி வசதிபெற்ற பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்தி, ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டங்களில் இந்த நாட்டிற்கே ஒரு நல்ல முன்னுதாரணத்தை இந்த அரசு உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2011-2012 ஆம் ஆண்டு தொடங்கி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், மூன்று லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு சூரிய ஒளி மின்சக்தி வசதியுடன் நல்ல இடவசதி உள்ள வீடுகள் கட்டி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தோம். இந்த ஆண்டு, தலா 1.80 லட்சம் செலவில், 1,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 60,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் நிதியாண்டிலும், 1,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 60,000 வீடுகள் கட்டப்படும். இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கான ஒதுக்கீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபாய் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உயர்த்தி வழங்கியதை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இத்திட்டத்தில் மாநில அரசின் பங்காக 66,250 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு 33,750 ரூபாய் மட்டுமே. இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 100,553 வீடுகள் இந்நிதியாண்டில் கட்டப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டிலும் இந்த திட்டத்தின் கீழ் 1,00,553 வீடுகள் ஏழை குடும்பங்களுக்கென கட்டித் தரப்படும். இதற்கென 2012-2013-ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் 666 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶98) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.63 · ¶98 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.2,160 crores
“In the last two years, 1,20,000 houses, at an estimated cost of Rs.2,160 crores, have been taken up for construction. In the coming financial year also, 60,000 solar powered green houses will be constructed.” financedept_2013-14_speech_en · p.47 · ¶112 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.168 crore
“This Government has sanctioned an amount of Rs. 260 crore for the construction of 10,000 Solar Powered Green Houses for weavers. Each house will have an additional space for putting up a loom. A higher unit cost of Rs.2.60 lakh per house has been fixed. In the Budget Estimates, 2014-2015, Rs.168 crore has been allotted for this Scheme.”
“நெசவாளர்களுக்கு சூரிய ஒளி மின்வசதி கொண்ட, 10,000 பசுமை வீடுகளை அமைக்க இந்த அரசு 260 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த வீடுகளில் தறிகளை நிறுவுவதற்கான கூடுதல் இட வசதிக்கு வழி செய்யப்பட்டு, வீடு கட்டுவதற்கான மதிப்பீட்டுத் தொகையும் 2.60 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 168 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.37 · ¶72 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.1,260 crore
“An allocation of Rs.1,260 crore has been provided in the Budget Estimates 2014-2015 for taking up another 60,000 houses.”
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சூரிய ஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டம் இந்த அரசின் பாராட்டத்தக்க முயற்சிகளில் ஒன்றாகும். இத்திட்டம் வீட்டுவசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 1.8 இலட்சம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டில், 60,000 வீடுகளை அமைத்திட, 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 1260 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, இந்திரா வீட்டுவசதித் திட்டத்தில், 2014-2015 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து ஆறாயிரம் வீடுகள் அமைக்கப்படும். இதற்கான மாநில அரசின் பங்கு மற்றும் கான்கிரீட் கூரைக்கான கூடுதல் செலவிற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 729.69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶74) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.37 · ¶74 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.1,260 crores
“An allocation of Rs.1,260 crores has been provided in the Budget Estimates 2015-2016 for taking up another 60,000 houses.”
“நமது அரசு செயல்படுத்தியுள்ள பாராட்டத்தக்க திட்டங்களுள் முதலமைச்சர் அவர்களின் சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டமும் ஒன்றாகும். பசுமை எரிசக்தி வசதியோடு கூடிய 60,000 வீடுகளை ஆண்டுதோறும் அமைத்து, கிராமப்புற ஏழைகளின் வீட்டுவசதித் தேவையை இத்திட்டம் நிறைவு செய்கிறது. இதுவரை 4,680 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 60,000 வீடுகளை அமைப்பதற்காக, 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 1260 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, 2014-2015 ஆம் ஆண்டில் இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 53,429 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கான மாநில அரசின் பங்கு மற்றும் கான்கிரீட் கூரைக்கான கூடுதல் செலவிற்காக 36438 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிலும் இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக 65610 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.42 · ¶68 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.260 crores
“Further, this Government has launched a scheme to construct 10,000 green houses for weavers at an outlay of Rs.260 crores.”
“விலையில்லா சேலைகள் மற்றும் வேட்டிகள் வழங்கும் திட்டம் மாநிலத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை அளித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2016 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 167.89 இலட்சம் சேலைகளும், 167.81 இலட்சம் வேட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, 499.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விற்பனை ஊக்கத்தொகையான 85.39 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை என்றாலும், கைத்தறி நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த நிதியுதவியை எதிர்நோக்கி, மாநில பங்குத் தொகை உள்ளிட்ட, 126.25 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியுள்ளது. மேலும், நெசவாளர்களுக்கென 10,000 பசுமை வீடுகள் கட்டுவதற்கான திட்டத்தையும் இந்த அரசு அறிவித்து, 260 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 495.16 கோடி ரூபாய் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்காகவும், 78.46 கோடி ரூபாய் தள்ளுபடி மானியத் திட்டத்திற்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶54) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.37 · ¶54 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.5,940 crores
“To fulfill this commitment, three lakh green houses have been taken up at a cost of Rs.5,940 crores in the last five years.”
“நமது நாட்டிலேயே முதல் முறையாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன் கூடிய கிராமப்புற வீட்டு வசதியை வழங்கும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் “சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டம்” வடிவமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் 60,000 வீடுகள் வீதம், மொத்தம் மூன்று இலட்சம் வீடுகள் கட்டப்படும் என இந்த அரசு அறிவித்தது. இதைச் செயல்படுத்தும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 5,940 கோடி ரூபாய் செலவில் மூன்று இலட்சம் பசுமை வீடுகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர, 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 4,876 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,41637 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, கான்க்ரீட் கூரை அமைப்பதற்கான செலவு உள்ளிட்ட மாநில அரசின் பங்காக 3,010 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.38 · ¶57 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.420 crores
“Considering the substantial increase in the number of houses proposed to be taken up under the PMAY (Rural), 20,000 houses will be constructed under the 'Chief Minister's Solar Powered Green House Scheme', during 2016-2017 at a cost of Rs.420 crores.” tnbudget_2016-17_speech_en_revised · p.49 · ¶99 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.420 crore
“Under the ‘Chief Minister’s Solar Powered Green House Scheme’, another 20,000 houses will be taken up for construction in 2017-2018 at a cost of Rs.420 crore.” tnbudget_2017-18_speech_en · p.54 · ¶96 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.420 crore
“Further, 20,000 houses will be taken up under the 'Chief Minister's Solar Powered Green House Scheme' at a cost of Rs.420 crore.”
“தமிழ்நாட்டில் குடிசைகளற்ற கிராமங்களையும், குடிசைப் பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்க வேண்டும் என்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவை நனவாக்க இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்)” கீழ், மத்திய அரசின் நிதியுதவியான 975 கோடி ரூபாய் உள்ளிட்ட, 2,276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.30 இலட்சம் வீடுகளைக் கட்ட இந்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டில், மேலும் 2,276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.30 இலட்சம் வீடுகள் கட்டப்படும். இதுதவிர, முதலமைச்சரின் சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டத்தின்” கீழ், 420 கோடி ரூபாய் செலவில் 20,000 வீடுகள் கட்டப்படும். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஊரகப் பகுதிகளுக்கான வீட்டுவசதித் திட்டங்களுக்காக, மொத்தம் 2,696.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶87) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.52 · ¶87 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.420 crore
“As in the past, 20,000 houses will be constructed under the Chief Minister’s Solar Powered Green Houses Scheme, for which Rs.420 crore has been provided in the Budget Estimates.” tnbudget_2019-20_speech_en · p.32 · ¶54 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.500 crore
“Rs.500 crore has been provided for Chief Minister’s Green House Scheme”
“மத்திய அரசின் இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2011-12 ஆம் ஆண்டு முதல் 2015-16 ஆம் ஆண்டு வரை 4,875.73 கோடி ரூபாய் செலவில் 4,41637 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ், 8,968.39 கோடி ரூபாய் செலவில், 5,27,552 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 7,620 கோடி ரூபாய் செலவில், 3,80,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆட்சேபணையில்லா புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களின் வீட்டு மனைகளை வரன்முறை செய்து வருவாய்த் துறை பட்டா வழங்கியுள்ள நபர்களில் தகுதியான நபர்களுக்கு பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம் (ஊரகம்) மற்றும் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டங்களின் கீழ் 2020-21 ஆம் ஆண்டு முதல் வீடுகள் கட்டித் தரப்படும். 2020-21 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ் 2 இலட்சம் வீடுகளும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், அனைத்துப் பழங்குடியினர் குடும்பங்களுக்கும் வீட்டுவசதியை வழங்கும் வகையில், அவர்களுக்கான 8,803 வீடுகள் உட்பட 20,000 வீடுகளும் கட்டித் தரப்படும். முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், சூரியஒளித் தகடுகளை நிறுவுவதற்கான தொகை, வீடு ஒன்றிற்கு 30,000 ரூபாய், வீட்டின் கட்டுமானச் செலவிற்கான தொகையுடன் சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு வீடொன்றுக்கு 2.1 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்திற்காக (ஊரகம்) 3,099.07 கோடி ரூபாயும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶74) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.42 · ¶74 · source PDF ↗ · on the map →
Linked projects
- Solar energisation of rural green houses · sibling
Nearby in the same sector
- Tamil Nadu Housing Board residential units · 8 years
- Indira Awas Yojana (IAY) houses · 6 years
- Pradhan Mantri Awaas Yojana (PMAY) - Rural · 6 years
- Free house site pattas scheme · 5 years
- Slum Clearance Board tenements (new) · 3 years
- Durable houses for Sri Lankan Tamil refugees · 3 years