Rural development · dormant

Special Area Development Programme

5 budgets named it 5 year span 450 ₹ crore allocated AIADMK government

First announced in 2015-16 and named again in 4 later budgets, most recently 2019-20.

Allocated by budget year

See it on the map → All Rural development projects →

What each budget said, year by year

2015-16 Rs.75 crores new project AIADMK

“In order to provide special attention to hill areas, including areas prone to left wing extremism, a Special Area Development Programme will be launched with an outlay of Rs.75 crores by this Government.”
“வருவாய்‌, வேலைவாய்ப்பு, வறுமை, மக்கள்‌ நலன்‌, கல்வி மற்றும்‌ பாலின வேறுபாடு ஆகிய அளவுகோல்களின்‌ அடிப்படையில்‌, மாநிலத்தின்‌ பல்வேறு பகுதிகளுக்கிடையே காணப்படும்‌ ஏற்றத்தாழ்வுகளை போக்கும்‌ விதமாக, மாநில சமச்சீர்‌ வளர்ச்சி நிதி” என்ற ஒரு புதிய திட்டத்தை இந்த அரசு தொடங்கியது. ஆண்டுதோறும்‌ 100 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முக்கிய காரணிகளில்‌ காணப்படும்‌ குறிப்பிட்ட இடைவெளிகளைக்‌ குறைக்கும்‌ நோக்கத்தோடு, புதிய திட்டங்களை உருவாக்கிச்‌ செயல்படுத்திட இது வழிவகுத்துள்ளது. மாநில சமச்சீர்‌ வளர்ச்சி நிதியின்‌ கீழ்‌, இதுவரை 181.53 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தமிழ்நாட்டிலுள்ள 24 மாவட்டங்களில்‌ உள்ள 105 பின்தங்கிய வட்டாரங்களில்‌, 322 திட்டங்களைச்‌ செயல்படுத்த மாநிலத்‌ திட்டக்‌ குழு ஒப்புதல்‌ வழங்கியுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டிலும்‌ 100 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ இத்திட்டம்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. வளர்ச்சியில்‌ பின்தங்கியுள்ள அரியலூர்‌, பெரம்பலூர்‌, தருமபுரி மற்றும்‌ கிருஷ்ணகிரி மாவட்டங்களின்‌ மீது இந்த புதிய சிறப்புத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ தனிக்கவனம்‌ செலுத்தப்படும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டிற்கான மத்திய அரசின்‌ நிதிநிலை அறிக்கையில்‌ மலைப்பகுதி மேம்பாட்டுத்‌ திட்டம்‌ மற்றும்‌ மேற்குத்‌ தொடர்ச்சிமலை மேம்பாட்டுத்‌ திட்டம்‌ ஆகிய திட்டங்கள்‌ கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இடதுசாரி தீவிரவாதம்‌ ஊடுருவ வாய்ப்புள்ள பகுதிகள்‌ உள்ளிட்ட மலைப்‌ பகுதிகளுக்கு சிறப்புக்‌ கவனம்‌ அளிக்கும்‌ வகையில்‌, 75 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ ஒரு சிறப்புப்‌ பகுதி மேம்பாட்டுத்‌ திட்டம்‌ இந்த அரசால்‌ தொடங்கப்படும்‌. வறுமை ஒழிப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶9) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.8 · ¶9 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.75 crores new project AIADMK · interim

“After the Government of India discontinued the ‘Western Ghats Development Programme’ and the ‘Hill Area Development Programme’ in the Union Budget 2015-2016, a new ‘Special Area Development Programme’ with an outlay of Rs.75 crores is being launched with State funds.”
“மாநிலத்தில்‌ சமச்சீரான வளர்ச்சியை எட்டிட, இந்த அரசு பல்வேறு புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தியுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌, புது முயற்சிகளை ஊக்குவிக்கும்‌ மையமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக, 150 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ “தமிழ்நாடு புதுமை முயற்சிகள்‌ திட்டத்தை இந்த அரசு தொடங்கியது. தமிழகத்திற்குள்‌ சமூகப்‌ பொருளாதாரக்‌ குறியீடுகளில்‌ உள்ள ஏற்றத்தாழ்வுகளைச்‌ சரிசெய்ய, 2012-2013 ஆம்‌ ஆண்டிலிருந்து, ஆண்டுதோறும்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌, ஒரு புது முயற்சியாக “மாநில சமச்சீர்‌ வளர்ச்சி நிதியத்தை” இந்த அரசு உருவாக்கியது. 2015-2016 ஆம்‌ ஆண்டு மத்திய வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ *மேற்குத்தொடர்ச்சி மலை மேம்பாட்டுத்‌ திட்டம்‌” மற்றும்‌ “மலைப்பகுதி மேம்பாட்டுத்‌ திட்டங்கள்‌ மத்திய அரசால்‌ கைவிடப்பட்டதால்‌, இப்பகுதிகளின்‌ தேவைகளைக்‌ கருத்தில்‌ கொண்டு இந்த அரசு, ஆண்டிற்கு 75 கோடி ரூபாய்‌ நிதியை ஒதுக்கி, 'சிறப்புப்‌ பகுதி மேம்பாட்டுத்‌ திட்டம்‌” என்ற புதிய திட்டத்தினை தொடங்கியுள்ளது. மாநிலத்தின்‌ நலன்‌ கருதி, இத்திட்டங்களைத்‌ தொடர்ந்து செயல்படுத்தத்‌ தேவையான ஒதுக்கீடுகள்‌, இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ செய்யப்பட்டுள்ளன. வறுமை ஒழிப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.6 · ¶7 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.75 crores new project AIADMK · revised

“The 'Special Area Development Programme' has been launched with State funds, in lieu of the erstwhile 'Hill Area Development Programme' (HADP) and 'Western Ghats Development Programme' (WGDP). This scheme will be implemented with an allocation of Rs.75 crores during 2016-2017.”

tnbudget_2016-17_speech_en_revised · p.10 · ¶15 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.75 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.100 crore and Rs.75 crore have been allocated for the SBGF and SADP respectively.”

tnbudget_2017-18_speech_en · p.6 · ¶8 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.75 crore continuation AIADMK

“an amount of Rs.75 crore has been allocated for the Special Area Development Programme (SADP) which caters to the specific needs of people of the hilly areas, with special focus on sustainable use of natural resources for economic development.”
“தமிழ்நாட்டின்‌ பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைக்‌ களைந்து, சமச்சீரான பொருளாதார மேம்பாட்டினை மாநிலம்‌ முழுவதும்‌ கொண்டு வருவதற்காகத்‌ தொடங்கப்பட்ட “மாநில சமச்சீர்‌ வளர்ச்சி நிதியத்திற்கு', 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்‌, மாநிலத்தின்‌ இயற்கை வளங்களை நிலைக்கத்தக்க வகையில்‌ பயன்படுத்தி, மலைப்பகுதிகளில்‌ வாழும்‌ மக்களின்‌ குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காகத்‌ தொடங்கப்பட்ட சிறப்புப்‌ பகுதி மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு” 75 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில்‌ புதுமை முயற்சிகளை ஊக்கப்படுத்தும்‌ வகையில்‌, 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டுடன்‌ தமிழ்நாடு புதுமை முயற்சிகள்‌ திட்டம்‌ (TANI!) தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. பேரிடர்‌ நிவாரணம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.6 · ¶7 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.75 crore continuation AIADMK

“Similarly, Rs.75 crore has been allocated in the Budget Estimates 2019-2020 for the Special Area Development Programme.”

tnbudget_2019-20_speech_en · p.4 · ¶5 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector