Irrigation · dormant
Stage 2: Manimuthar to Vaigai and Gundar
1 budget named it 1 year span — ₹ crore allocated 1,379 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2011-12 and not named in any budget since.
See it on the map → All Irrigation projects →
What each budget said, year by year
2011-12 ` 1,379 crores
“In the second stage, Manimuthar will be linked with Vaigai and Gundar at a cost of ```` 1,379 crores.”
“தமிழ்நாட்டிலுள்ள நதிகளை இணைப்பதை, இந்த அரசு முதன்மையானப் பணியாகக் கருதுகிறது. நதிநீர் இணைப்பால், பாசன வசதிகளை மேம்படுத்துவது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து போன்ற பல பயன்கள் ஏற்படும். இதன் முதல் கட்டமாக காவிரி ஆற்றை வைகை, குண்டாறு ஆறுகளுடன் இணைப்பதற்காக, காவிரி ஆற்றில் கட்டளைக் கதவணை அமைக்கும் பணி 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கெனவே நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு 2011-2012 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு 93 கோடி ரூபாயாகும். இதன் அடுத்த கட்டமாக கட்டளைக் கதவணையை குண்டாறு ஆற்றுடன் இணைப்பதற்குரிய பணியினை இவ்வரசு தொடங்கும். மத்திய அரசு உதவியுடன் வெள்ள மேலாண்மைப் பணியாக இரண்டு கட்டத்தில் இப்பணி செய்யப்படும். முதற் கட்டமாக கட்டளை அணைக்கட்டிலிருந்து கால்வாய் அமைத்து அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறுடன் 3,787 கோடி ரூபாய் செலவில் இணைக்கப்படும். இரண்டாவது கட்டத்தில் மணிமுத்தாறு, வைகை ஆற்றுடன் குண்டாறு 1,379 கோடி ரூபாய் செலவில் இணைக்கப்படும். இந்த வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு 5,166 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்படும். எனினும் மத்திய அரசின் உதவிக்காக காத்திராமல் மாநில அரசே இப்பணியினை உடனடியாகத் தொடங்கும். இப்பணிக்காக 2011-2012 ஆம் ஆண்டில் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு நதிநீர் இணைப்புத் திட்டமான நம்பியாறுடன் தாமிரபரணி ஆற்றை இணைக்கும் பணி 369 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டில் இப்பணிக்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.27 · ¶43 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Dam Rehabilitation and Improvement Project (DRIP) · 11 years
- Micro Irrigation Mission (State funds) · 11 years
- Tamarabarani–Nambiar river link · 7 years
- Climate Change Adaptation Programme in Cauvery Delta · 6 years
- Athikadavu - Avinashi Flood Canal Project · 6 years
- Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management (IAMWARM) Phase-II · 5 years