Agriculture · dormant
State production incentive for paddy
5 budgets named it 8 year span 980 ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and named again in 4 later budgets, most recently 2019-20.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2012-13 Rs.200 crores
“A sum of Rs.200 crores is allocated in this Budget as State production incentive.”
“நமது விவசாயிகளின் விளை பொருள்களுக்கு, போதிய, நியாயமான, உத்தரவாதமான விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கோடு, மத்திய அரசு நெல்லுக்கு நிர்ணயித்த அடிப்படை ஆதரவு விலையை விடக், கூடுதலாக, குவிண்டால் ஒன்றுக்கு சாதாரண ரகத்திற்கு 50 ரூபாயும், சன்ன ரகத்திற்கு 70 ரூபாயும் ஊக்கத் தொகையாக மாநில அரசு வழங்கி வருகிறது. இதனால் மொத்த விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சாதாரண ரகத்திற்கு 1130 ரூபாயும், சன்ன ரகத்திற்கு 1180 ரூபாயும் விவசாயிகளுக்கு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த உற்பத்தி ஊக்கத் தொகைக்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கரும்புக்கு, போக்குவரத்துக் கட்டணங்கள் உள்ளிட்ட மாநில அரசின் பரிந்துரை விலை டன் ஒன்றுக்கு 2,100 ரூபாய் என உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் விலைகள் பற்றிய தகவல்களை பரவலாக்க வேளாண் சந்தை தகவல்கள்- வர்த்தக மேம்பாட்டு மையம் ஒன்று திருச்சியில் அமைக்கப்படும். இந்த மையத்தின் மூலமாக, பயிர் சாகுபடி, சந்தை நிலவரம் குறித்த அறிவுரைகள் விவசாயிகளுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶31) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.21 · ¶31 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.200 crores
“A sum of Rs.200 crores is allocated in this Budget as the State Government's production incentive for paddy.”
“விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய இந்த அரசு முனைந்துள்ளது. நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் கூடுதலாக, அதாவது சாதாரண இரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 50 ரூபாயும், சன்ன இரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 70 ரூபாயும், மாநில அரசின் ஊக்கத் தொகையாக வழங்கி, சாதாரண இரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1410 ரூபாயும், சன்ன இரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1470 ரூபாயும் இறுதி விலையாக இந்த அரசு அளித்து வருகிறது. நெல்லுக்கான மாநில அரசின் உற்பத்தி ஊக்கத்தொகைக்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கேற்ற கொள்முதல் விலைக் கொள்கையை இந்த அரசு தொடர்ந்து பின்பற்றும். கால்நடை பராமரிப்பு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.20 · ¶30 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.200 crore
“Towards this, Rs.200 crore has been provided in the Budget Estimates 2017-2018 as production incentive paid over and above the Minimum Support Price fixed by Central Government for paddy.” tnbudget_2017-18_speech_en · p.19 · ¶30 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.200 crore
“A sum of Rs.200 crore will be provided as production incentive to cover the difference between Minimum Support Price (MSP) and procurement price of paddy during 2018-2019.”
“மாநிலத்தின் பெரும்பாலான மக்களின் முக்கியமான தொழிலாக வேளாண்மை இன்றளவும் திகழ்ந்து வரும் நிலையில், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், பண்ணை உற்பத்தியைப் பெருக்கவும் இந்த அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உணவு தானிய உற்பத்தியைப் பெருக்க உணவு தானிய இயக்கம் மாநிலத்தில் 2012-2013 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. மாநிலத்தில் உணவு தானிய உற்பத்தியைப் பெருக்குவதற்காக, 2018-2019 ஆம் ஆண்டில் திருந்திய நெல் சாகுபடி முறை (System of Rice Intensification) 10 இலட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படும். சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 1,600 ரூபாய் விலையிலும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 1,660 ரூபாய் விலையிலும் அரசு கொள்முதல் செய்து வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், கொள்முதல் விலைக்கும் உள்ள வித்தியாசத்தை, நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக வழங்க 2018-2019 ஆம் ஆண்டிற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில், தீவிர பயறு உற்பத்தித் திட்டத்தின் கீழ், கிராமத் தொகுப்பு அடிப்படையில் பயறு சாகுபடி ஊக்குவிக்கப்பட்டு 85,000 ஹெக்டேர் கூடுதல் பரப்பளவு பயறு சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பயறு உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2018-2019 ஆம் ஆண்டில் பன்முக உத்திகள் மேற்கொள்ளப்படும். நீண்டகால அளவில் பயறு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நெல் கொள்முதல் செய்வது போன்று குறைந்தபட்ச ஆதரவு விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக விவசாயிகளிடமிருந்து துவரை, உளுந்து மற்றும் பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை 2018-2019 ஆம் ஆண்டு முதல் அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யும். 2018-2019 ஆம் ஆண்டில் 110 இலட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு உணவு தானிய உற்பத்தியை அடைய இந்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶26) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.17 · ¶26 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.180 crore
“A sum of Rs.180 crore has been provided as an incentive for paddy procurement in the Budget Estimates 2019-2020.” tnbudget_2019-20_speech_en · p.17 · ¶27 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years