Agriculture · dormant
Sugarcane transitional production incentive
3 budgets named it 3 year span 565 ₹ crore allocated AIADMK government
First announced in 2018-19 and named again in 2 later budgets, most recently 2020-21.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2018-19 Rs.200 crore
“An amount of Rs.200 crore is provided in the Budget Estimates 2018-2019 towards the transitional production incentive.”
“சர்க்கரை ஆலைகள் பொதுவாக சுழற்சி முறையில் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து வருகின்றன. பருவமழை பொய்த்தல், கரும்பு ரகங்களில் ஏற்பட்டுள்ள வீரிய குறைபாடு (varietal degeneration), சர்க்கரை கட்டுமான விகிதத்தில் குறைவு (recovery), கரும்பு சாகுபடிப் பரப்பளவில் குறைவு போன்ற பல்வேறு இடர்ப்பாடுகளால் இத்தொழில் தற்போது நலிவடைந்து, சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் குறைந்து வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் பணம் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ரங்கராஜன் குழு பரிந்துரையின்படி, வருவாயில் பகிர்வு செய்யும் முறையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யும் முறைக்கு, அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் மாறியுள்ளன. ஆனால், நியாயமான மற்றும் ஆதாய விலைக்கும் கூடுதலாக மாநில அரசின் பரிந்துரை விலை நிர்ணயிக்கும் முறையே நமது மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இந்தப் பருவம் முதல் வருவாய்ப் பகிர்வு விலை நிர்ணய முறைக்கு மாற அரசு முடிவு செய்துள்ளது. இதனால், விவசாயிகள் நியாயமான மற்றும் ஆதாய விலை பெறுவதை உறுதி செய்வதுடன், கூடுதலாக சர்க்கரை ஆலைகளின் இலாபத்தில் ஒரு பகிர்வும் விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த மாற்றத்தினைக் கொண்டு வர, மெட்ரிக் டன் ஒன்றிற்கு, போக்குவரத்துச் செலவான 100 ரூபாயை சர்க்கரை ஆலைகளே தொடர்ந்து ஏற்கும். போக்குவரத்துச் செலவு போக, தற்போது விவசாயிகள் பெற்று வரும் மாநில அரசின் பரிந்துரை விலையான 2,750 ரூபாயை அனைத்து விவசாயிகளும் பெறுவதை உறுதி செய்ய, புதிய வருவாய்ப் பகிர்வு முறையில் பெறப்படும் விலைக்கும், தற்போது பெற்று வரும் 2,750 ரூபாய்க்கும் இடையேயான வித்தியாசத்தை, கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக இந்த அரசு நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கும். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இந்த உற்பத்தி ஊக்கத்தொகைக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை கட்டுமான அளவை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து ஒரு சிறப்புத் திட்டத்தினை வகுத்து, 55,000 ஏக்கர் பரப்பளவில் நீடித்த நவீன கரும்பு சாகுபடித் திட்டத்தை 2018-2019 ஆம் ஆண்டில் அரசு செயல்படுத்தும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶29) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.19 · ¶29 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.200 crore
“The transitional production incentive introduced in 2018-2019, for sugarcane over and above the Fair and Remunerative Price announced by the Government of India, will be continued during 2019-2020 and allocation of Rs.200 crore has been provided for this purpose.” tnbudget_2019-20_speech_en · p.17 · ¶27 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.165 crore
“Transitional Production Incentive for sugarcane growers to cover the difference between the earlier State Advised Price and the Fair and Remunerative Price announced by the Government of India will be continued for the crushing season 2019-20 as well. A sum of Rs.165 crore is provided in the Budget Estimate 2020-21 for this purpose.”
“நிலையான கரும்பு உற்பத்திக்கு 2020-21 ஆம் ஆண்டில் 12 கோடி ரூபாய் செலவில் 74,132 ஏக்கர் பரப்பளவில், நீடித்த நவீன கரும்பு சாகுபடித் திட்டத்தின் தொழில்நுட்பங்களுடன் புதிய இரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். கரும்பு விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20 ஆம் ஆண்டில் 68.35 கோடி ரூபாய் சிறப்பு கூடுதல் நிதியுதவி அனுமதிக்கப்பட்டது. இத்திட்டமானது 75 கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவியுடன் 2020-21 ஆம் ஆண்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாநில அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த பரிந்துரை விலைக்கும் (SAP), மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கும் (FRP) இடையேயான வேறுபாட்டினைச் சரிசெய்ய, கரும்பு உற்பத்தியாளர்களுக்கு கரும்பு உற்பத்திக்கான உற்பத்தி ஊக்கத்தொகை, 2019-20 ஆம் ஆண்டின் அரவைப்பருவத்திலும் தொடர்ந்து வழங்கப்படும். இந்த நோக்கத்திற்காக 2020-21 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 165 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டின் அரவைக்காலத்திற்கு டன் ஒன்றிற்கு 100 ரூபாய் வரை என்ற அளவில் 110 கோடி ரூபாயை போக்குவரத்து மானியமாகவும் இந்த அரசு வழங்கும். இத்தகைய நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தித் தொழில் புத்துயிர் பெற உதவும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.22 · ¶35 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years