Agriculture · dormant

Supply Chain Management of perishable commodities

5 budgets named it 6 year span 176 ₹ crore allocated 482 ₹ crore whole-project cost AIADMK government 4 districts

First announced in 2016-17 and named again in 4 later budgets, most recently 2021-22. Districts: 10, more, predominant, ten.

Allocated by budget year

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2016-17 Rs.398.75 crores continuation project cost AIADMK · revised

“A special project for Supply Chain Management of perishable commodities like fruits and vegetables in 10 Districts at a cost of Rs.398.75 crores is under implementation.”
“பழங்கள்‌, காய்கறிகள்‌ போன்ற விரைவில்‌ அழுகக்கூடிய விளைபொருட்களை, உற்பத்தி முதல்‌ சந்தைப்படுத்துதல்‌ வரையிலான விநியோகச்‌ சங்கிலித்‌ தொடர்‌ மேலாண்மைக்காக ஒரு சிறப்புத்‌ திட்டத்தை, 10 மாவட்டங்களில்‌ 398.75 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண்‌ விளைபொருட்களைப்‌ பதப்படுத்தும்‌ தொழிற்சாலைகளை அமைத்து, அறுவடைக்குப்‌ பிந்தைய இழப்புகளை வெகுவாகக்‌ குறைப்பதன்‌ மூலம்‌, வேளாண்மையில்‌ ஒரு நிலைத்தன்மையைக்‌ கொண்டு வந்து, பெரும்‌ மாற்றத்தை இத்திட்டம்‌ ஏற்படுத்தும்‌. வருங்காலத்தில்‌, மற்ற மாவட்டங்களிலும்‌ தேவைக்கேற்ப இத்திட்ட அணுகுமுறை விரிவாக்கம்‌ செய்யப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.21 · ¶37 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.398 crore new project project cost AIADMK

“An innovative programme of supply chain management for perishable commodities is under implementation in 10 districts at an estimated cost of Rs.398 crore to reduce post-harvest losses and enhance value addition at the farm level.”
“அதிக அளவில்‌ வருவாய்‌ தரக்கூடிய தோட்டக்கலைப்‌ பயிர்களின்‌ பரப்பளவை அதிகரிப்பது மற்றும்‌ பயிர்‌ பலவகையாக்கலை விரிவுபடுத்துவது போன்றவற்றில்‌ இந்த அரசு சிறப்புக்‌ கவனம்‌ செலுத்தி வருகிறது. எனவே, தோட்டக்கலைப்‌ பயிர்களின்‌ பரப்பளவை தற்போதுள்ள 34 இலட்சம்‌ ஏக்கர்‌ என்ற அளவிலிருந்து 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 39 இலட்சம்‌ ஏக்கராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்‌. அறுவடைக்குப்‌ பின்பு ஏற்படும்‌ இழப்பினைக்‌ குறைத்திடும்‌ வகையிலும்‌, பண்ணையளவில்‌ மதிப்புக்‌ கூட்டும்‌ நோக்கத்திலும்‌, சிறப்புத்‌ திட்டமாக, காய்கறி மற்றும்‌ பழங்களுக்கான விநியோகத்‌ தொடரமைப்பு மேலாண்மைத்‌ திட்டம்‌ (Supply Chain 1/லா89868ா10, 398 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 10 மாவட்டங்களில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்‌ கீழ்‌, உயர்‌ தொழில்நுட்பங்களைப்‌ பரவலாக்குவதற்கும்‌, அறுவடைக்குப்‌ பிந்தைய உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கும்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶29) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.18 · ¶29 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.175.75 crore continuation AIADMK

“The State Government has taken a pioneering initiative for improving the Supply Chain Management for perishables in ten districts at a cost of Rs.398.75 crore. This programme aims at strengthening 487 collection centres with 58 Primary Processing Centres covering 3,400 farming clusters. This scheme also covers on-farm development to increase the production and productivity of horticultural crops. So far, Rs.123 crore has been spent under this scheme and Rs.175.75 crore has been provided in the Budget Estimates 2018-2019.”
“பயிர்‌ சாகுபடியை பல்வகையாக்கவும்‌, விவசாயிகளின்‌ வருமானத்தைப்‌ பெருக்கவும்‌ தோட்டக்கலைப்‌ பயிர்‌ சாகுபடிக்கு இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பத்து மாவட்டங்களில்‌ 398.75 கோடி ரூபாய்‌ செலவில்‌, இந்த அரசால்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ அழுகக்கூடிய பொருட்களுக்கான விநியோகத்‌ தொடரமைப்பு மேலாண்மைத்‌ திட்டத்தின்‌ மூலம்‌, 3,400 விவசாய உற்பத்தி தொகுப்புகளில்‌ 58 முதன்மை பதப்படுத்தும்‌ மையங்களையும்‌ (Primary Processing Centres), 487 சேகரிப்பு மையங்களையும்‌ (Collection Centres) வலுப்படுத்தி, உயர்‌ தொழில்நுட்பம்‌ மூலம்‌ தோட்டக்கலைப்‌ பயிர்களின்‌ உற்பத்தியையும்‌ உற்பத்தித்‌ திறனையும்‌ அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை, இத்திட்டத்தின்‌ கீழ்‌ 123 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 175.75 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶27) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.18 · ¶27 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.482.36 crore continuation project cost AIADMK

“The scheme of Supply Chain Management for vegetables and fruits in 10 districts of Tamil Nadu is being implemented at a cost of Rs.482.36 crore.”
“பயிர்‌ பரவலாக்கலின்‌ ஒரு பகுதியாக, விவசாயிகளின்‌ வருமானத்தை அதிகரிக்க பூக்கள்‌, பழங்கள்‌ மற்றும்‌ காய்கறிகள்‌ போன்ற தோட்டக்கலை விளைபொருட்களை விளைவிக்க பெருமளவில்‌ ஊக்கமளிக்கப்படுகிறது. காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்களுக்கான விநியோகத்‌ தொடர்‌ மேலாண்மைத்‌ திட்டம்‌ 10 மாவட்டங்களில்‌ 482.36 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌, 62 முதன்மை பதப்படுத்தும்‌ மையங்களிலும்‌, 509 சேகரிப்பு மையங்களிலும்‌, சேகரிப்பு, சந்தைப்படுத்துதல்‌, சேமிப்பு, பதப்படுத்துதல்‌ மற்றும்‌ குளிர்பதன வசதிகளை ஏற்படுத்துவதன்‌ மூலம்‌, மாநிலத்தில்‌ அறுவடைக்குப்‌ பிந்தைய உட்கட்டமைப்பிற்கான பெரும்‌ வசதிகளை இத்திட்டம்‌ ஏற்படுத்தியுள்ளது. பழங்கள்‌ மற்றும்‌ காய்கறிகள்‌ சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும்‌ முதலமைச்சரின்‌ சிறப்புத்‌ திட்டம்‌ 2019-2020 ஆம்‌ ஆண்டு முதல்‌ செயல்படுத்தப்படும்‌. இதற்கென 50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின்‌ தோட்டக்கலை பண்ணைகளின்‌ மூலம்‌ உண்மைத்‌ தன்மையை சரிபார்த்து வில்லை ஒட்டிய காய்கறி விதைகளை (ா£பங்பீய/டு labelled vegetable 56605) உற்பத்தி செய்து, தேவைப்படும்‌ இடங்களில்‌ போதிய அளவு விநியோகிக்கப்படும்‌. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கத்திற்காக 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.19 · ¶30 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.482.36 crore enhancement project cost AIADMK · interim

“this Government has introduced the Supply Chain Management Project in 10 horticulture predominant districts at a total cost of Rs.482.36 crore. This project is being extended to 8 more districts at a cost of Rs.102 crore.”
“பழங்கள்‌ மற்றும்‌ காய்கறிகள்‌ பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 2019-20 ஆம்‌ ஆண்டில்‌ பழங்கள்‌ பயிரிடும்‌ பரப்பளவு 7.17 இலட்சம்‌ ஏக்கரிலிருந்து 7.86 இலட்சம்‌ ஏக்கராகவும்‌, காய்கறிகள்‌ பயிரிடும்‌ பரப்பளவு 5.59 இலட்சம்‌ ஏக்கரிலிருந்து 9.24 இலட்சம்‌ ஏக்கராகவும்‌ அதிகரித்துள்ளது. பழங்கள்‌ மற்றும்‌ காய்கறிகளில்‌ அறுவடைக்குப்‌ பின்‌ ஏற்படும்‌ இழப்பு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக, தோட்டக்கலைப்‌ பயிர்களை அதிகமாக சாகுபடி செய்யும்‌ 10 மாவட்டங்களில்‌ 482.36 கோடி ரூபாய்‌ செலவில்‌ விநியோகத்‌ தொடர்‌ மேலாண்மைத்‌ திட்டத்தை, அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம்‌ 102 கோடி ரூபாய்‌ செலவில்‌, மேலும்‌ 8 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.28 · ¶40 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector