Agriculture · dormant
Sustainable Sugarcane Initiative Programme
2 budgets named it 9 year span — ₹ crore allocated 12 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2012-13 and named again in 1 later budget, most recently 2020-21.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2012-13
“In the coming year the Sustainable Sugarcane Initiative Programme will be implemented in 15,000 acres.”
“2011-2012 ஆம் ஆண்டில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 483 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2012-2013 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டு 25.03 இலட்சம் ஏக்கர் என்று இருந்த திருந்திய நெல் சாகுபடி பரப்பு 2012-2013 ஆம் ஆண்டு 27.55 இலட்சம் ஏக்கர் என உயர்த்தப்படும். வரும் ஆண்டில் 15,000 ஏக்கரில் நவீன கரும்பு சாகுபடி உற்பத்தி திட்டம் (sustainable sugarcane initiative) செயல்படுத்தப்படும். பயறு உற்பத்தியை அதிகரித்திட, திருந்திய பயறு சாகுபடி முழு கிராம அடிப்படையில் 1.6 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்தப்படும் வேளாண் உற்பத்தித் திறனை உயர்த்த, தரமான விதைகள் கிடைக்கும் வகையில், உயர் ரகங்கள், வீரிய ரகங்களுக்கான விதைகளை பெருமளவில் உற்பத்தி செய்து வழங்குவதற்காக தனியார் உற்பத்தியாளர்களையும் இணைத்து ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். 2011-2012 ஆம் ஆண்டில், தேசிய தோட்டக்கலை இயக்கம் ரூபாய் 145 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை பெருக்குவதற்கான இந்த அரசின் முயற்சிகள் தொடரும். 2012-2013 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 150 கோடி ரூபாயாக இருக்கும். இந்த வரவு-செலவுத் திட்டத்தில் மாநிலத்தின் பங்காக 2150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இதற்கென செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.20 · ¶30 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.12 crore
“To sustain sugar cane production, new varieties will be promoted along with Sustainable Sugarcane Initiative techniques at a cost of Rs.12 crore in 2020-21 in 74,132 acre.”
“நிலையான கரும்பு உற்பத்திக்கு 2020-21 ஆம் ஆண்டில் 12 கோடி ரூபாய் செலவில் 74,132 ஏக்கர் பரப்பளவில், நீடித்த நவீன கரும்பு சாகுபடித் திட்டத்தின் தொழில்நுட்பங்களுடன் புதிய இரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். கரும்பு விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20 ஆம் ஆண்டில் 68.35 கோடி ரூபாய் சிறப்பு கூடுதல் நிதியுதவி அனுமதிக்கப்பட்டது. இத்திட்டமானது 75 கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவியுடன் 2020-21 ஆம் ஆண்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாநில அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த பரிந்துரை விலைக்கும் (SAP), மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கும் (FRP) இடையேயான வேறுபாட்டினைச் சரிசெய்ய, கரும்பு உற்பத்தியாளர்களுக்கு கரும்பு உற்பத்திக்கான உற்பத்தி ஊக்கத்தொகை, 2019-20 ஆம் ஆண்டின் அரவைப்பருவத்திலும் தொடர்ந்து வழங்கப்படும். இந்த நோக்கத்திற்காக 2020-21 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 165 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டின் அரவைக்காலத்திற்கு டன் ஒன்றிற்கு 100 ரூபாய் வரை என்ற அளவில் 110 கோடி ரூபாயை போக்குவரத்து மானியமாகவும் இந்த அரசு வழங்கும். இத்தகைய நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தித் தொழில் புத்துயிர் பெற உதவும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.22 · ¶35 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years