Rural development · dormant
Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM)
First announced in 2013-14 and named again in 5 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Rural development projects →
What each budget said, year by year
2013-14 Rs.100 crores
“A sum of Rs.350 crores has been provided for the Pudu Vazhvu Project and Rs.100 crores has been provided for the Tamil Nadu State Rural Livelihood Mission during 2013-2014 as the State’s share.” financedept_2013-14_speech_en · p.10 · ¶20 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.253.92 crore
“A sum of Rs.253.92 crore has been allocated for the year 2014-2015 under TNSRLM.”
“தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் பொருளாதார வாய்ப்புகளைத் தரக் கூடிய குறிப்பிட்ட பணிகளை, குழும முறையில் ஊக்குவித்து வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை, பொருளாதார வாய்ப்புகளைத் தரத்தக்க பணிகளின் அடிப்படையில் 161 குழுமங்கள் இத்திட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 6,000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் இணைப்பு வசதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 3,847.07 கோடி ரூபாய் அளவிற்கு கடன் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு முகாம்கள் மூலமாக இளைஞர்களின் திறன் தேவை மதிப்பிடப்பட்டு, 2013-2014 ஆம் ஆண்டில் 14 கோடி ரூபாய் செலவில் 14,050 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்திற்கென 253.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, புதுவாழ்வுத் திட்டத்திற்காக 2014-2015 ஆம் ஆண்டிற்கு 49.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶6) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.4 · ¶6 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.250.36 crores
“A sum of Rs.250.36 crores is allocated for this scheme in the Budget Estimates 2015-2016.”
“இதே போன்ற அணுகுமுறையோடு மாநிலத்திலுள்ள மற்ற வட்டாரங்களில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012-2013 ஆம் ஆண்டு முதல், படிப்படியாக செயல்படுத்திடும் வகையில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 60 வட்டாரங்களிலும், இரண்டாம் கட்டமாக 110 வட்டாரங்களிலும், மூன்றாம் கட்டமாக 95 வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிராமப்புற வறுமையை விரைவில் ஒழித்திடும் வகையில் இந்த அரசு மாநிலத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும், தகுதி வாய்ந்த குடும்பங்களைக் கண்டறியும் பணியினை 2015-2016 ஆம் ஆண்டுக்குள் முடித்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் முதற்கட்ட வட்டாரங்களில் பயிற்சி மற்றும் வாழ்வாதாரத் திட்டக் கூறுகளை நடைமுறைப்படுத்துவதை தீவிரப்படுத்துவதற்கான உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 250.36 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶11) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.9 · ¶11 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.349.46 crore
“A sum of Rs.349.46 crore has been allocated for this Mission during 2019-2020.” tnbudget_2019-20_speech_en · p.40 · ¶69 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.450.65 crore
“So far, 83,257 Self Help Groups have been formed under the TNSRLM in the State and a provision of Rs.450.65 crore has been made in the Budget for the Mission.”
“கிராமப்புற, நகர்ப்புரப் பகுதிகளுக்கான வாழ்வாதார இயக்கங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் மாநிலத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும், அதாவது 388 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இந்த இயக்கத்தின் கீழ், 83,257 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்திற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 450.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மொத்தமாக 1,08,416 இளைஞர்கள் 2014-15 முதல் இது வரையில் பயிற்சி பெற்றுள்ளனர். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இந்த திட்டத்திற்காக 299.60 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, 28,063 இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டம் (Tamil Nadu Rural Transformation Project) 26 மாவட்டங்களில் உள்ள 120 வட்டாரங்களில் உலக வங்கியின் நிதியுதவியுடன், 918.20 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொழில் முனைவோர்களை ஊரகப்பகுதிகளில் ஊக்குவிப்பதற்காக, அதிலும் குறிப்பாக, பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 163.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.44 · ¶78 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.809.79 crore
“The Tamil Nadu State Rural Livelihood Mission will be revamped and implemented at a total cost of Rs.809.79 crore during 2021-22 to benefit one lakh Self Help Groups (SHG).”
“தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் 809.79 கோடி ரூபாய் செலவில் 2021-22 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும். நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் 5,500 கோடி ரூபாய் சிறப்பு கோவிட் கடன் உட்பட 20,000 கோடி ரூபாய் கடன் உறுதிசெய்யப்படும். தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் சீரமைக்கப்பட்டு 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் 212.69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.31 · ¶68 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
Nearby in the same sector
- Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) · 12 years
- MLA Constituency Development Scheme (MLACDS) · 10 years
- Devolution grants to local bodies · 7 years
- Tamil Nadu Village Habitation Improvement Scheme (THAI) · 6 years
- State Balanced Growth Fund (SBGF) · 6 years
- Swachh Bharat Mission (Gramin) · 6 years