Rural development · completed claimed

Tamil Nadu Village Habitation Improvement Scheme (THAI)

6 budgets named it 6 year span 3,680 ₹ crore allocated 3,680 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 5 later budgets, most recently 2016-17.

Allocated by budget year

See it on the map → All Rural development projects →

What each budget said, year by year

2011-12 ` 680 crores new project AIADMK · revised

“Under THAI, ```` 680 crores will be allocated every year to cover all rural habitations in a phased manner over a period of five years.”
“நகர்புரங்களுக்கு மக்கள்‌ இடம்‌ பெயர்ந்து செல்வதால்‌ ஏற்படும்‌ நெருக்கடிகளைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு கிராமப்‌ பகுதிகளில்‌ நகரங்களுக்கு இணையான அடிப்படை வசதிகளை செய்து தருவது இந்த அரசின்‌ நோக்கமாகும்‌. அடிப்படை வசதிகள்‌, ஊரகக்‌ கட்டமைப்பு மேம்பாடு போன்றவை பிரதம மந்திரியின்‌ கிராமச்‌ சாலைகள்‌ திட்டம்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின்‌ தொகுதி மேம்பாட்டுத்‌ திட்டம்‌, பின்தங்கிய பகுதிக்கான வளர்ச்சி நிதி, குறைந்தபட்ச தேவைகள்‌ திட்டம்‌, முழு சுகாதாரத்‌ திட்டம்‌ போன்ற திட்டங்களின்‌ மூலம்‌ செயல்படுத்தப்படுகின்றன. கிராமப்‌ பகுதிகளில்‌ அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2011-2012 ஆம்‌ ஆண்டு முதல்‌ ஒருங்கிணைந்த கிராம கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டம்‌ (THAl ஒன்றை இந்த அரசு தொடங்கும்‌. தற்போதுள்ள பல்வேறு திட்டங்களையும்‌ ஒருங்கிணைத்து கிராமக்‌ குடியிருப்புகளை (Habitation) அடிப்படையாகக்‌ கொண்டு இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. இந்த ஒருங்கிணைந்த கிராம கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஒவ்வோர்‌ ஆண்டும்‌ 680 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டு ஐந்தாண்டுகளில்‌ அனைத்து கிராம குடியிருப்புகளும்‌ படிப்படியாக இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனடையும்‌. கிராமப்புறங்களில்‌ அடிப்படைக்‌ கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு தேவையான நிதி ஆதாரங்களில்‌ உள்ள இடைவெளியினை இத்திட்டம்‌ நிறைவுசெய்யும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶103) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.62 · ¶103 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.750 crores continuation AIADMK

“This Government has launched the Tamil Nadu Village Habitation Improvement Scheme (THAI) from 2011-2012. This innovative scheme, intended to improve the basic amenities in all habitations over a period of 5 years, has already been started in 25,335 habitations of 2,020 village panchayats in 2011-2012 by taking up 64,481 works. In the coming financial year, works will be taken up in 18,581 habitations of 2,250 village panchayats. The amount allocated for this scheme has been stepped up to Rs.750 crores in the Budget Estimates for 2012-2013.”
“கிராமப்புற கட்டமைப்பு மேம்பாடு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல்‌, கிராமப்புற வறுமையை ஒழித்தல்‌ ஆகியவற்றை உள்ளடக்கிய, முழுமையான ஊரக வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்‌ என்பதே மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ விருப்பம்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டிலிருந்து தமிழ்நாடு குக்கிராமங்கள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தை ஙி கா) இந்த அரசு தொடங்கி, செயல்படுத்தி வருகிறது. அனைத்து கிராம குடியிருப்பு பகுதிகளிலும்‌ அடிப்படை வசதிகளை ஐந்தாண்டு காலத்தில்‌ மேம்படுத்தும்‌ குறிக்கோளுடன்‌ செயல்படுத்தப்படும்‌ இந்த புதுமையான திட்டத்தில்‌, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 2,020 கிராம ஊராட்சிகளில்‌ உள்ள 25,335 குடியிருப்பு பகுதிகளில்‌ 64,481 பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும்‌ நிதியாண்டில்‌ இத்திட்டத்தில்‌ 2,250 கிராம ஊராட்சிகளில்‌ உள்ள 18,581 குடியிருப்பு பகுதிகளில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌. இந்த திட்டத்திற்காக 2012-2013 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 750 கோடி ரூபாயாக உயர்த்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2001-2006 ஆம்‌ ஆண்டுகளில்‌ அமைக்கப்பட்ட 12,811 ஒருங்கிணைந்த மகளிர்‌ சுகாதார வளாகங்கள்‌, 2006-2011 ஆம்‌ ஆண்டுகளில்‌ வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு, பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில்‌ பயன்படுத்தப்படாமல்‌ இருந்தன. அவ்வாறு இருந்த இந்த சுகாதார வளாகங்கள்‌, 170 கோடி ரூபாய்‌ செலவில்‌ புதுப்பிக்கப்பட்டு, பயனாளிகள்‌ குழுக்களிடம்‌ ஒப்படைக்கப்பட்டதன்‌ மூலமாக, கிராமப்புற சுகாதாரத்திற்கு இந்த அரசால்‌ ஒரு புதிய ஊக்கம்‌ கிடைத்துள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.62 · ¶97 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.750 crores continuation AIADMK

“A sum of Rs.750 crores has been allocated for the scheme during 2013-2014 to cover 15,115 habitations.”

financedept_2013-14_speech_en · p.47 · ¶113 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.750 crore continuation AIADMK

“This scheme will be continued with an allocation of Rs.750 crore in the Budget Estimates 2014-2015.”
“'தமிழ்நாடு குக்கிராமங்கள்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌” (THA) என்ற இந்த அரசின்‌ முன்னோடித்‌ திட்டம்‌, குக்கிராம அளவில்‌ திட்டங்களை தீட்டி செயல்படுத்தும்‌ புதுமையான அணுகுமுறை மூலமாக, கிராமங்களுக்குள்‌ அடிப்படை வசதிகளில்‌ காணப்படும்‌ ஏற்றத்தாழ்வுகளைக்‌ களைந்து ஒரு பெரும்‌ மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, கிராமப்புறச்‌ சாலைகள்‌, தெரு விளக்குகள்‌, மயானங்கள்‌, குடிநீர்‌ வழங்கல்‌, இன்னும்‌ பிற கட்டமைப்புகள்‌ ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 2011-2012 ஆம்‌ ஆண்டிலிருந்து இதுவரை 6,770 கிராமங்களில்‌ உள்ள 59,031 குடியிருப்புகளில்‌ 2,180 கோடி ரூபாய்‌ செலவில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-2015 ஆம்‌ ஆண்டிலும்‌ 750 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தத்‌ திட்டம்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶75) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.38 · ¶75 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.750 crores continuation AIADMK

“During 2015-2016, this scheme will be continued to cover another 8,268 habitations covering 3,013 Village Panchayats with an allocation of Rs.750 crores.”
“குக்கிராமங்களை அலகுகளாகக்‌ கொண்டு வளர்ச்சிப்‌ பணிகளைத்‌ திட்டமிட்டு செயல்படுத்துவதில்‌ இந்த அரசு கவனம்‌ செலுத்தி வருகிறது. இது ஒரு புதுமையான அணுகுமுறையாகும்‌. 2011 ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ முதல்‌, குடிநீர்‌ வழங்கல்‌, தெரு விளக்குகள்‌, மயானங்கள்‌, கிராமப்புறச்‌ சாலைகள்‌ போன்றவை தொடர்பான பணிகளை தமிழ்நாடு குக்கிராமங்கள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை 2,930 கோடி ரூபாய்‌ செலவில்‌ 9,511 கிராம ஊராட்சிகளைச்‌ சேர்ந்த 71126 குக்கிராமங்களில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்‌ தொடர்ச்சியாக 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 750 கோடி ரூபாய்‌ செலவில்‌ 3,013 கிராம ஊராட்சிகளைச்‌ சார்ந்த 8,268 குக்கிராமங்களில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. இதன்‌ பயனாக 2015-2016 ஆம்‌ ஆண்டின்‌ இறுதியில்‌, 12,524 கிராம ஊராட்சிகளைச்‌ சேர்ந்த 79,394 குக்கிராமங்களிலும்‌ இத்திட்டப்‌ பணிகள்‌ செயல்படுத்தப்பட்டு, அனைத்து அடிப்படை வசதிகளும்‌ வழங்கப்பட்டுள்ள சிறப்பான சூழலை இத்திட்டம்‌ ஏற்படுத்தும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶67) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.42 · ¶67 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.3,680 crores completion claim project cost AIADMK · interim

“In the past five years, 2,31,874 works of water supply, street lights, pathway to burial grounds, rural roads and other rural infrastructure have been taken up since May 2011 at a total outlay of Rs.3,680 crores.”
“தரமான கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கான அடிப்படை அலகாக குடியிருப்புகளை வரையறுத்து, ஊரக வளர்ச்சியில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஒரு புதிய அணுகுமுறையைக்‌ கொண்டு வந்துள்ளார்கள்‌. இதன்படி, தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத்‌ திட்டம்‌ (108) வெற்றிகரமாகச்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 3,680 கோடி ரூபாய்‌ மொத்த மதிப்பீட்டில்‌, குடிநீர்‌, தெரு விளக்குகள்‌, மயானப்‌ பாதைகள்‌, கிராமப்புறச்‌ சாலைகள்‌ மற்றும்‌ இதர கட்டமைப்பு வசதிகளுக்கான 2,31874 பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2016 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதத்திற்குள்‌, 12,524 கிராம ஊராட்சிகளில்‌ உள்ள 79,394 குடியிருப்புகளிலும்‌, அதாவது, தமிழகத்தில்‌ உள்ள அனைத்து கிராமக்‌ குடியிருப்புகளிலும்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு நிறைவு பெறும்‌ என்பதை இந்த மாமன்றத்திற்குத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶56) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.38 · ¶56 · source PDF ↗ · on the map →

2016-17 continuation AIADMK · revised

“It is indeed a great accomplishment to cover all the 79,394 habitations in 12,524 Village Panchayats with essential basic amenities under the commendable initiative of the 'Tamil Nadu Village Habitation Improvement' (THAI) scheme.”

tnbudget_2016-17_speech_en_revised · p.44 · ¶88 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector