Other · dormant
Tamil Nadu Vision 2023 Document
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Other projects →
What each budget said, year by year
2012-13
“Our Hon'ble Chief Minister has responded to the challenge and has formulated a Tamil Nadu Vision 2023 Document for the State, with clear goals to be achieved by the year 2023, coinciding with the next two Five Year Plans.”
“தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே மிகுந்த வளம் செழிக்கும் முன்னணி மாநிலமாக மாற்றிட, தொலைநோக்கும், குறிப்பிட்ட இலக்கை நோக்கமாகக் கொண்டு செயல்படும் வழிமுறையும் அரசிற்குத் தேவைப்படுகின்றன. நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்த சவாலினை எதிர்கொண்டு, அடுத்த இரண்டு ஐந்தாண்டுத் திட்ட கால வரம்பைக் கருத்தில் கொண்டு, 2023 ஆம் ஆண்டு இறுதியில் மாநிலம் எய்த வேண்டிய தெளிவான இலக்குகளை வகுத்து, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ஐ தீட்டியுள்ளார்கள். பத்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய இந்த தொலைநோக்குத் திட்டத்தை, 22.3.2012 அன்று நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில், மாநிலத்தின் தனிநபர் வருவாயை ஆறு மடங்கு உயர்த்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலமாக மாநிலத்தை வறுமையற்ற மாநிலமாக மாற்றவும், இத்தொலைநோக்குத் திட்டம் வழிவகுக்கின்றது. மேலும், அனைத்து முக்கியத் துறைகளிலும் நாட்டிலேயே மிகச் சிறந்த கட்டமைப்புகளைக் கொண்டுள்ளதாகவும், மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளில் முதன்மை மாநிலமாகவும், நமது மாநிலத்தை உயர்த்துவதை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்த உயரிய இலக்குகளை அடைவதற்கான தெளிவான திட்டங்களையும், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை வரையறுத்துள்ளது. நமது மாநிலப் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்கினை அதிகரித்தல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேலும் எழுச்சிபெறச் செய்தல், திறன்களை மேம்படுத்துதல், வேளாண் உற்பத்தித் திறனை அதிகரித்தல், தமிழ்நாட்டை இந்தியாவின் அறிவுசார் தலைநகரமாகவும், புதுமைகளைப் படைக்கும் மையமாகவும் (Innovation Hub) முன்னிலைப்படுத்துதல் ஆகியன இத்திட்டங்களுள் அடங்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶8) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.5 · ¶8 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Infrastructure Development Board and Vision 2025 · 4 years
- Infrastructure Development Fund · 3 years
- Project Preparation Fund · 3 years
- Local Body elections · 3 years
- Revenue Department office buildings · 3 years
- Tamil Nadu Infrastructure Fund (AIF-I via TNIFMC) · 2 years